Wednesday, April 14, 2010

மரணத்திற்கு அப்பால் - 13



எங்கு சென்றால் மீண்டும் இங்கே திரும்பமுடியாதோ, அந்த மேலான நிலையை அப்பால் தேட வேண்டும். - பகவான் ஸ்ரீ க்ருஷ்னர்.

மரணத்திற்கு அப்பால் தொடரின் அடுத்த கட்டத்திற்கு போகும் முன் சில விஷயங்களை சற்றே கவனிப்போம். மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி நம்மிடம் எழலாம். அப்படித் தெரிந்து கொள்வதால் என்ன பலன் என்றும் தோன்றலாம். சிலரோ மரணத்திற்கு அப்பால் ஒன்றும் இல்லை. மறுபிறவி என்பதே பொய் என்றும் கூறலாம்.

சரி மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை நாம் ஏன் இப்போது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

உதாரணமாக ரிடையர்மென்ட்க்கு பிறகு நம் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தால் மிகவும் அச்சமாக இருக்கும். அப்பறம் பணத்திற்கு என்ன செய்வோம் என்று மனதில் ஒரு சிந்தனை உண்டாகும்.

அப்படி ஒரு காலம் வரும் போது அதை எப்படி சமாளிப்பது என்று நினைத்து இப்பொழுதே பணம் சேர்க்கத் துவங்குவோம். நிலத்தில் முதலீடு செய்வோம். தங்கம் வாங்கி வைப்போம். வங்கியில் நிலையான முதலீடுகள் இடுவோம். அவற்றின் மதிப்பு பின்னாட்களில் அதிகரிக்கும் போது அதை வைத்து நமது ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சமாளிப்போம்.

எப்படி ரிடயர்மென்டுக்குப் பின்னால் எப்படி வாழவேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே தீர்மானிக்கிறோமோ அப்படித்தான் மரணத்திற்குப் பின்னாலும் எப்படி வாழவேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ரிட்டையர்மெண்ட்க்கு பிறகு என்ற வாழ்க்கை இப்போதே நம் கண்களுக்கு எப்படி தெரிவதில்லையோ அப்படித்தான் மரணத்திற்கு பின்னால் வரப்போகும் வாழ்க்கையும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

ஆம். நம்முடைய பிறப்பும் இந்த வாழ்க்கையும் ஒரு இடைக்கால நிகழ்வுதான். எப்படி நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செருவதற்க்கு முன்னும் நமக்கு வாழ்க்கை இருந்ததோ, எப்படி நாம் ரிட்டையர் ஆன பின்பும் வாழப்போகிறோமோ, அதே போல் தான் பிறப்பும் இறப்பும்.

நாம் பிறப்பிற்கு முன்னாலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். இறப்பிற்கு பின்னாலும் வாழப்போகிறோம். அதுவே உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியங்களும் சேர்த்து வைக்கும் புண்ணிய பலன்களும் தான் நாம் இறந்ததற்குப் பின்னால் என்னவாகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

கண்களுக்குத் தெரிவதில்லை என்பதற்காக நாம் எதிர்காலத்திற்காக சேர்த்துவைக்காமல் இருந்துவிடுகிறோமா என்ன? அதே போலத்தான் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதற்க்காக மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடாது. அதனால் அதைப்பற்றி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அவற்றை ஆராய்ந்து எடுத்துரைத்த பெரியோர்களின் விளக்கங்களை புறந்தள்ளியும் விடமுடியாது. எனவே தொடர்ந்து பார்ப்போம்.

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மார்கங்களில் மறுபிறப்பு தத்துவம் ஏற்கப்படுவதில்லை. அதுவும், ஆதிகால கிறிஸ்தவத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இருந்ததாகவும் பின்னால் கிறிஸ்தவம் மார்கெட்டிங் மதமாக்கப்பட்ட பிறகு கிறிஸ்துவை நம்பினால் தான் மோட்ஷம் என்ற கோட்பாட்டை கிறிஸ்தவத்தின் மார்கெட்டிங்க் எக்ஸிகியூட்டிவ்கள் பரப்ப முனைந்த பொழுது மறுபிறப்பு என்ற நம்பிக்கை அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதனாலேயே பின்னாட்களில் கிறிஸ்தவத்தில் மறுபிறப்பு என்பது கிடையாது என்ற கொள்கை மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மறுபிறப்பு இல்லை என்ற தர்கத்தை நாம் ஏற்கவேண்டுமென்றால் சில கருத்துக்களை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதன் உட்பட ஒரே முறை ஜனனம் மற்றும் ஒரே முறை மரணம் என்றால் அவைகளை இறைவன் தான் படைத்தான் என்றால், அப்படிப்பட்ட ஜீவராசிகளை இறைவன் ஏன் ஏற்றத்தாழ்வுடன் படைக்க வேண்டும். ஒரு ஜீவனை மிருகமாகவும் இன்னொன்றை மனிதனாகவும் ஏன் படைக்க வேண்டும். எல்லா ஜீவராசிகளையும் உயர்ந்த பிறப்பாகக் கருதப்படும் மனிதப்பிறப்பாகவே படைத்திருக்கலாமே!

ஒரே ஒரு முறை மட்டுமே மனிதனை இறைவன் படைக்கிறான் என்றால் ஏன் ஒருவனை குருடனாகவும், ஒருவனை முடவனாகவும் படைக்க வேண்டும். பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல மனிதன் உயர்வுதாழ்வு அடைகிறான் என்ற தத்துவம் நிராகரிக்கப்பட்டால், எல்லா மனிதர்களும் இறைவனின் விருப்பத்திற்கினங்கவே ஒரே முறை மட்டுமே படைக்கப்படுகிறார்கள் என்றால் அந்த இறைவனுக்கு ஏன் ஓரவஞ்சனை இருக்க வேண்டும்?

இதற்கு முன்னால் பிறக்காதவரான இப்போது தான் முதன்முதலில் பிறக்கப்போகும் இருவரில் ஒருவனை அழகாகவும் ஒருவனை முடமாகவும் படைக்குமளவிற்கு இறைவன் கருனை இல்லாதவனாக ஏன் இருக்க வேண்டும்? ஒரே முறை மட்டுமே இறைவன் படைக்கிறான் என்றால் ஒருவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் ஒருவனுக்கு துக்கமாக வாழ்க்கையையும் கொடுக்கும் அளவிற்கு ஏன் கருனையற்றவனாக இருக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகிறது.

ஆனால் இந்து தர்மத்தில் மட்டுமே இதற்கான தெளிவான பதில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

உபநிஷத்தில் இப்படி கூறப்படுகிறது "மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்".

இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உயிர்கள் பல்வேறு பிறவிகளை எடுத்து கடைசியில் நிறைநிலையை அடைகின்றன என்று மறுபிறவிக் கோட்பாடு கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிறைவான நிலையை அடைய அவன் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டலே கீதையும் உபநிஷத்துக்களும். மனதை அமைதியாகவைத்து தீவினைகள் அகற்றி ஆத்ம சாந்தி அடைபவனே பிறப்பறுந்த நிலை எய்த முடியும் என்ற வழிகாட்டுதல் கூறப்படுகின்றது.

கீதையில் ஸ்ரீ க்ருஷ்னர் கூறுகிறார் "அர்ஜுனா! அகங்காரம், பலம், இறுமாப்பு, காமம், கோபம் முதலிய தீயகுணங்களை மேற்கொண்டு அவர்கள், தங்களுடைய உடலிலும் மற்றவர்களுடைய உடலிலும் இருக்கும் என்னை வெறுத்து அவமதிக்கின்றனர். அத்தகைய நிந்திக்கும் கொடிய குணம் கொண்டவர்கள் மனிதகுலத்திற்கும் கீழானவர்கள். இழிவானவர்கள். அவர்கள் அசுர இயல்புள்ளவர்களின் கருப்பையிலேயே தள்ளப்படுவார்கள். அப்படி அசுரகுணம் கொண்டவர்களின் வழியாக பிறப்பெய்துபவர்கள் ஒவ்வொரு பிறப்பிலும் மேலும் மேலும் கீழ்த்தரமான நிலையையே அடைவார்கள்!" என்கிறார்.

அதாவது குணங்களுக்கேற்றபடி தான் பிறப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை பகவான் தெளிவுபடுத்துகிறார். மேலும் அத்தகைய இழிகுணத்துடன் பிறப்பெய்துபவர்களாலேயே பாபங்கள் பரவுவதும் நடக்கின்றது. இதன் காரணமாகவே பூமியில் இன்ப துன்பங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. அதனாலேயே ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதும் ஒருவன் துன்புற்று அழிவதும் ஒரு காலச் சக்கரமாக நடைபெறுகின்றன. எனவே இந்த சக்கரச்சுழற்சியைத் தடுக்க வேண்டுமானால் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஒரே மாதிரியான நல்ல தர்மங்களைக் கடைபிடித்து அந்த இறைவனையே நினைத்து அவனை அடையமுயல வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் அத்தகைய முயற்சியின் பாதையில் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டால் முழு சமூகமுமே சொர்கமான வாழ்க்கைச் சூழலை அடையும் என்பதும் தெளிவாகிறது.

என்வே மறுபிறவி என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதும் அதைத் தடுத்து பரம் பொருளை அடைவதற்கான வழியை இந்து தர்மம் உபநிஷத்துக்கள் மூலம் எடுத்துரைக்கின்றது. அதைத் தொடர்ந்து பார்ப்போம்.



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்." - எமதர்மன்



மரணத்திற்கு அப்பால் - 14

7 comments:

thiruchchikkaaran said...

We can see Logical argument and some Rationalistic approach in this article. Appreciable!

ஸ்ரீராம். said...

Nice

hayyram said...

நன்றி திருச்சி.
நன்றி ஸ்ரீராம்.

Baski ram said...

Mikka nandri hayram sir..

I m baskar..26, really eindha madhuriyana visyangala eippa dhan padikuren..romba vee evlo nala waste panneetomee nu varuthamum paduren..but eippa vaavadhu therinjukittomee nu sandhasamum paduren...but yennaku oru assai...hayram sir...

evlo visyam therinjavanga eiruukkanga nu nenkukum boothu romba aacharriyama eiruuku..adhulaiyum yaarachum eindha visyatha kadaipidikuravanga eiruukanga na avangala meet panna yen manasu rommba theeduthu...sir
pls help me...yennaku anma tharisanam adiyanum nu romba try pannuren..but yennaku oru guru theevai..pls help me sir

hayyram said...

பாஸ்கி ராம், நாணும் அப்படி குருவைத் தேடிக்கொண்டே இருப்பவன் தான். இப்போதைக்கு, கீதையும் உபநிஷத்துகளுமே நம் குரு. உங்களுக்கு உதவும் நேரத்தை இறைவன் எனக்கு அளிக்க அவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,

ராம்

Unknown said...

Join ISKCON...They teach you all about aanma and what needed to be done to get out of this death and birth cycle.

Unknown said...

கருத்துகள் என்னை மிகவும் கவர்கின்றது, மறு பிறவி பற்றிய கருத்து தவிர.. மனிதர்கள் ஏன் ஏற்ற , தாழ்வோடு பிறக்கவிக்க படுகிறார்கள். அழகாக பிறந்தவர்கள் அதனால் பரிபூரணம் அடைந்ததில்லை , முடமாக பிறந்தவர்கள் முடங்கி மட்டும் இருந்ததில்லை. முதலாளியும் தொழிலாளியும் போலவே நாமும் கடவுளும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் சலுகைகள் அதிகரிக்கும் பொது பொறுப்புகள் அதிகமாகவே இருக்கும். சலுகை குறைந்த கடை நிலை ஊழியனின் கடமை கடதாசியை எடுத்துக்கொடுப்பதில் மாத்திரமே நிறைவு பெற்று விடும். சமநிலை பேண வேறுபாடுகள் அவசியம். பாடசாலை காலத்தின் பின்னர் எப்படியும் படிக்க சிரமப்பட்டு, சரியாக முடிக்காமல் போனவர்கள் மீண்டும் முதலாம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்க இயலாது , அதே பாடசாலையில். அது போல தான் மறு பிறப்பு பற்றய எண்ணக்கரு எனக்கு தோன்றுகிறது.