Thursday, April 22, 2010

கீதோபதேசம் - பாபங்களுக்குக் தூண்டுதலாக இருப்பது எது?




க்ருஷ்ணா! ஒருவனுக்கு பாபம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இல்லாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாபம் செய்யத் தூண்டுவது எது? - அர்ஜுனன்

அர்ஜுனா! அவ்வாறு பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

நெருப்பு புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், கருவானது கருப்பையாலும் மூடப்பட்டிருப்பது போல் ஞானம் ஆசையால் மூடப்பட்டுள்ளது.

குந்தியின் மகனே! தீயைப்போல் தணிக்க முடியாததும், தீர்க்க முடியாததும் ஆன காமம் தான் ஞானியின் அறிவை மூடிக்கொண்டிருக்கிறது.

புலன்கள், மனம், புத்தி ஆகியவைதான் அதன் இருப்பிடம் எனப்படுகின்றன. இவைகளின் வழியாக அவனை மயக்கி அவனுடைய அறிவை மூடி மறைக்கின்றது.

எனவே பரதரில் சிறந்தவனே! நீ முதலில் உன்னுடைய புலன்களை கட்டுப்படுத்தி சாஸ்திர அறிவையும், அநுபவ அறிவையும் அழிக்கிற பாபத்தின் உருவமான இக்காமத்தை அறவே ஒழித்திடு.

புலன்கள் உடலை விட மேலானவை. அவற்றை விட மேலானது மனம். மனதை விட புத்தி மேலானது. புத்தியைவிட மேலானது ஆத்மா.

உயிர்தோழா! நீ இவ்வாறாக புத்தியைவிட மேலான ஆத்மாவை உணர்ந்து, புத்தியினால் மனதை நன்றாகக் கட்டுப்படுத்தி வெல்வதற்குக் கடினமானகாமம் என்ற எதிரியைக் கொல்வாயாக.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.




இங்கே ஒரு ஆழமான மனோவியல் விஷயத்தை மிக எளிதாக ஸ்ரீ க்ருஷ்ணர் தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது. காமம் என்ற ஆசைகளைத் தூண்டும் உச்ச உணர்வு தான் ஒருவன் பாபங்கள் செய்யாமல் இருக்க நினைத்தாலும் அவனை செய்யத் தூண்டுகிறது. காமத்தின் வடிகால் இல்லாதவர்கள் கோபக் காரர்களாகவும், கொலைபுரியும் அளவு குரோதம் கொள்பவர்களாகவும் மாறிவிடுவதையும் கூட பார்க்க முடிகிறது.

காமத்தின் அதீத உந்துதலை கையாளத்தெரியாமல் சைக்கோக்களானவர்கள் பற்றிய நீண்ட குற்றவியல் வரலாறுகளும் உண்டு. அமெரிக்காவில் பெஞ்சமின் மில்லர் என்பவர் கறுப்புப் பெண்களாகத் தேர்தெடுத்து கொலை செய்வானாம். அவனுக்கு 'ப்ரா' கொலைகாரன் என்று பெயர் உண்டு! பெண்களின் கழுத்தை பெஞ்சமின் மில்லர் நெரித்துக் கொல்வது, அந்தப் பெண்களின் 'ப்ரா' வை உபயோகித்துத்தான். அரை டஜன் கொலைகளுக்குப் பிறகும் யாருமே அவனை சந்தேகிக்கவில்லை. காரணம் கனெக்டிகெட் என்ற ஊரில் இருந்த சர்ச்சில்
அவன் பாதிரியார். பாபத்திற்குத் தூண்டுதல் காமம்.

பெஞ்சமின் மில்லர் இங்கே .

காமத்தின் மீதான அதீத கற்பனையும், மனதில் கட்டுப்பாடற்ற ஆசைகளையும் கொண்டு அவற்றை கையாள முடியாத சிக்காட்டிலோ என்ற ரஷ்ய நாட்டுக்காரன் ஒரு சைக்கோகில்லராக பத்து வருடங்களுக்கு மேல் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கொலை புரிந்திருக்கிறான். இவன் மாட்டிக்கொண்டது கூட ஒரு சுவாரசியமான விஷயம். சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய ஒரு ஆய்வறிக்கயை மனோவியல் மருத்துவர் மூலமாக தயாரித்தனர் காவலர்கள். அதில் கொலைகாரனைப் பற்றி தங்கள் யூகங்களை எழுதியிருந்தனர். அதாவது கொலைகாரன் ஒரு நாற்பது வயது ஆள். அவன் குழந்தைப்பருவம் கொடூரமாக இருந்திருக்கும். அன்புடன் பழக ஆளில்லாதவனாகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக்வும் இருப்பான். இருபாலருடனும் பாலுறவு வைத்துக்கொள்ளும் அதீத ஆசை கொண்டவனாக இருப்பான். மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பான். அவன் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் வாய்ப்புண்டு" என்று எழுதியிருந்தார்கள்.

ஒரு நாள் சிக்காட்டிலோ ஒரு சிறுவனிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த காவலர்கள் வெறுமனே விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றனர். சில விசாரனைக்குப் பிறகு தாங்கள் எழுதி வைத்திருந்ததை அவனிடம் படித்துக் காண்பித்தனர். சும்மா இருக்காமல் "அட என்னைப் பற்றி அப்படியே எழுதியிருக்கிறார்களே" என்று உளறி விட்டான். பத்து வருடங்களுக்கு மேலாக டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த கொலைகாரன் பிடிபட்டான். ஆம் அவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். கொலைக்குக் காரணம் காமம்.

சிக்காட்டிலோ இங்கே .

ஒரு சில பெண்களை அவர்களின் கணவன்மார்கள் 'சரியாக' கண்டு கொள்ளவில்லையெனில் அவர்கள் வீட்டில் யார் மீதாவது அடிக்கடி எரிந்து விழுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். காமத்தை கையாள முடியாததால் வரும் வினை. யானைக்கும் மதம் பிடிக்கிறது. காமத்தை காலத்தே கொள்ளாமையால்.

ஆனால் எத்தனை முறை காமம் கொண்டாலும் அதன் மீதான ஆசை சாகும் வரை தீர்வதில்லை. அதனாலேயே ஒரு நிலையில் அந்த உணர்வை கையாள கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த உணர்வுகளை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்தால் பாபம் செய்யும் தூண்டுதல்கள் குறைவுபடும் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

அதனாலேயே ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார் "பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள்" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.



"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்"


14 comments:

thiruchchikkaaran said...

மிக அருமையான கட்டுரை.

மிக சிறப்பான வகையிலே கருத்துக்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அடுத்த கேள்வி - ஆசையை வெல்வது அல்லது கட்டுப் படுத்துவது எப்படி?

thiruchchikkaaran said...

இவ்வளவு சிறப்பான கட்டுரையில் , இந்த வீட்டம்மனிகள் போன்ற கருத்துக்கள் தேவையா? எந்த மனோவியல் அறிஞ்சர் இதைக் கண்டு பிடித்து உங்களுக்கு தெரிவித்தார்?

Anonymous said...

என்ன ராம் அண்ணே இது கொஞ்சம் வீட்டு அம்மணிகள் வரிய எடுத்து விடுங்கள் ...அது நல்ல ஒழுக்கமான தெய்வம் போன்ற பெண்களை அவமதிப்பது போல் உள்ளது ..பொதுவாக சொல்லப்போய் தவறாக அர்த்தமாகிவிடும் ..

Anonymous said...

please edit that entire line..personally i never expected these lines from you..who carefully wrote a essay about kalaachchaaram in tamilhindu..

hayyram said...

திருச்சி மற்றும் குமாருக்கும் என் நன்றிகள்.

இருவருமே ஒரு சேர வீட்டம்மணி வரிகளைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். யானை போன்ற விலங்குகளுகுக் கூட காமத்தால் வெறி கொள்ளும் என்றால், ஆண்கள் காமத்தின் அதீத உணர்வால் பாபம் செய்வார்கள் என்றால் பெண்களுக்கு மட்டும் காமத்தின் மீதான அதீத உணர்வோ அல்லது குறைந்த பட்சம் அதன் வறட்சியின் காரணமாக எழும் கோபமோ கூட வராது என்று எப்படி கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. நான் சில மனோவியல் புத்தகங்களை படித்திருக்கிறேன். கணவனின் 'அனுகுமுறை' தொடர்ந்து ஏமாற்றத்தை கொடுத்தால், மனைவி நேரடியாக அதை சொல்ல முடியாமல் ஆனால் கோபமாக வெளிப்படுத்தி விடுவார்கள் என்றும் படித்திருக்கிறேன். அவசரத்திற்கு மேற்கோள் காட்ட முடியவில்லை. அவ்வளவுதான். நாளிதழ்களில் வெளியாகும் கள்ளத்தொடர்பு கொலைகளுக்கும் கணவனை மனைவியே கள்ளக்காதலனுக்காக கொன்றுபோடும் கொடூரங்களும் பெண்களால் நடந்திருக்கிறது. அப்படி ஒரு வக்கிர குணம் நாளிதழ்களில் சிரிக்கும் வரை அவர்கள் கூட வீட்டம்மணிகளாகத்தான் வெளியே தெரிந்திருக்கிறார்கள். காமத்தின் மீதான அதீத உந்துதலும் அதனால் எழும் பாப குணத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் பெண்களுக்கும் பொருந்தக்கூடியதே. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.

hayyram said...

அன்பிற்குரிய குமார்!

இப்போதும் கலாச்சாரம் என்பதை பற்றிய மதிப்பீடு என்னிடம் அப்படியே தான் உள்ளது. வீட்டம்மணிகள் என்கிற வார்த்தை உங்களை உருத்தியிருந்தால்
//ஒரு சில பெண்களை அவர்களின் கணவன்மார்கள்// என்று மாற்றி விடுகிறேன். எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. இப்போது திருப்தியா!

ஆனால் காமம் மற்றும் அதன் பொருட்டு செய்யப்படும் பாப காரியங்களில் தற்காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது என் கருத்து. இந்த விஷயத்தில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அதனாலேயே காமத்தின் உந்துதலால் எழும் பாப காரியங்களை கட்டுப்படுத்தும் கீதோபதேசம் பெண்களுக்கும் பொதுவானது என்கிறேன்.

//.personally i never expected these lines from you..who carefully wrote a essay about kalaachchaaram in tamilhindu..//

இவ்வளவு ஏமாற்றம் அடையும் அளவிற்கு என்ன இருக்கிறது. நான் பெண்களை காமம் கொள்ளுங்கள் என்று கூறவில்லையே! அது உயிரின உரிமை. ஆனால் காமத்தின் உந்துதலால் எழும் பாப காரியங்களை கட்டுப்படுத்தும் கீதோபதேசம் பெண்களுக்கும் பொதுவானது என்கிறேன். அவ்வளவு தான். எனவே ஏமாற்றம் அடைய வேண்டாம். நான் அப்படியே தான் இருக்கிறேன்.

இன்னும் பேசுவோம்.

உங்கள் அன்பிற்கு நன்றி குமார்.

thiruchchikkaaran said...

ராம்,


கணவன் உடல் நிலை சரி இல்லாமல் மருத்துவ மனையில் இருந்தால் மனைவி அவனுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் என்று கோவிலுக்கு சென்று பல வேண்டுதல்களியே செய்வாள். மண் சோறு சாப்பிடுவார்கள். கணவன் உடல் நிலை சரியாக அம்மனுக்கு கண் வாங்கி போடுவார்கள்.

நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் கணவன் அணுகுமுறை தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்தாலும் , அப்படி கணவன் மனதில் கவலையை ஏற்ப்படுத்திய விடயம் எண்ண, அலுவலக்கத்தில் ஏதாவது பிரச்சினையா, தொழிலில் ஏதாவது பிரச்சினையா என்று கவலைப்படுவாளே தவிர, தெரிந்து கொள்ள முயளுவாளே தவிர எரிச்சல் பட மாட்டாள்.

அனேகமாக நீங்கள் ஒரு பேச்சிலர் (Bachelor) என நினைக்கிறேன். விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்துகிறேன். அப்போது உங்களுக்கு வீட்டமாளைப் பற்றிய சரியான உளவியல் கருத்துக்கள் கிட்டும்.



இந்தியாவில் நேர்மையான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறோம் என்றால் அதற்ககு பெண்களே முக்கிய காரணம். இந்துவைப் பொறுத்தவரையில் எல்லாப் பெண்களும் கடவுளே. இந்தியர்கள் வணக்கும் கடவுள்களில் பல பெண் கடவுள்களும் உண்டு.

தமயந்தி, நாளாயினி, சீதை, கண்ணகி, ஊர்மிளா, சாரதா அம்மையார், நிவேதிதா அம்மையார், தெரசா அம்மையார்.... ஆகியோரை நாம் மறக்க இயலாது.


"ஆண் கெட்டால் அந்த சமுதாயத்தை திருத்தி விடலாம். பெண் கெட்டால் அந்த சமுதாயத்தை திருத்த முடியாது" என்பது பாரதியின் கருத்து. அந்த அளவுக்கு பெண்கள் நமது சமுதாயத்தின் அடிப்படையாக உள்ளனர்.

இதை விட வேறு பல உதாரணங்கள் காட்டி இருக்கலாம்.



அதுவும் பகவத் கீதையோடு இப்படிப்பட்ட சமாச்சாரங்களை மிக்ஸ் பண்ணுவது , பிராசதத்தை தரும் போது அதனுடன் கலக்கல் சரக்கையும் சேர்த்து தருவது போல உள்ளது என்பதை நட்பு ரீதியில் தெரிவிக்கிறேன். தவறாக எண்ண மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

hayyram said...

நன்றி திருச்சி, //கணவன் உடல் நிலை சரி இல்லாமல் மருத்துவ மனையில் இருந்தால் மனைவி அவனுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் என்று கோவிலுக்கு சென்று பல வேண்டுதல்களியே செய்வாள். மண் சோறு சாப்பிடுவார்கள். கணவன் உடல் நிலை சரியாக அம்மனுக்கு கண் வாங்கி போடுவார்கள்.//

கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் கணவனை விட காமம் தான் முக்கியம் என்று நினைக்கும் பெண்களால் கள்ளத்தொடர்பு கொலைகள் நாளிதழ்களை நாள் தோரும் அலங்கரிக்கின்றனவே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

thiruchchikkaaran said...

கள்ளக் காதல் உறவுகள் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கின்றன.

பெரும்பானமையான பெண்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும்.

அகலிகையை குற்றம் சாட்டும்போது, அகலிகையைக் கெடுத்தவன் இந்திரன் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

நீங்கள் வீட்டம்மாக்கள அல்லது சில பெண்கள் என்று குறிப்பிடுவதை விட காம இச்சி ஆண்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு ஆசையை அடக்கும் வழியை சொன்னால் சிறப்பாக இருந்திருக்கும்.

hayyram said...

பதிவுல ரெண்டுமே இருக்கு. அண்களை பத்தி தானே ரெண்டு பெரிய பத்திகள்.

Anonymous said...

நன்றி ராம் அண்ணே ,அந்த வரிகளை மாற்றியதற்கு ,,எனக்கு தெரியும் நீங்கள் அதை பொதுவாகதான் சொல்லவந்தீர்கள் என்று(அதை நேற்றே குறிப்பிட்டேன்)திரு .திருச்சி அவர்கள் சொன்னதைத்தான் நான் சொல்ல வந்தேன்.infact when i read the article i never find any comments.. நேற்று நேரம் இல்லையால் அவசர அவசரமாக கருத்து கூறி முடிக்க வேண்டியதாக ஆயிற்று .i came today for you only..i had also read many comments of Mr.tiruchi in his blog and Tamil Hindu..
//அதுவும் பகவத் கீதையோடு இப்படிப்பட்ட சமாச்சாரங்களை மிக்ஸ் பண்ணுவது , பிராசதத்தை தரும் போது அதனுடன் கலக்கல் சரக்கையும் சேர்த்து தருவது போல உள்ளது//
// நாளிதழ்களில் வெளியாகும் கள்ளத்தொடர்பு கொலைகளுக்கும் கணவனை மனைவியே கள்ளக்காதலனுக்காக கொன்றுபோடும் கொடூரங்களும் பெண்களால்நடந்திருக்கிறது//கள்ளத்தொடர்பு கொலைகள் நாளிதழ்களை நாள் தோரும் அலங்கரிக்கின்றனவே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? //
தினசரி நமக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும்போது வெறும் காம உணர்வுக்கு வேலையே இல்லை..நான் சொல்லுவது ஆண்களை பற்றிதான்..நீங்கள் குறிப்ப்டிருக்கும் உதாரணங்கள் வெளிநாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் உண்டு ...அவர்கள் மனநலம் பாத்திக்கபட்டவர்கள் ..அப்பிடிப்பட்ட மனநலம் குன்றியவர்கள் வெகு சிலரே .அந்த பாதிப்பு கூட உடல் உணர்ச்சிகளால் இருக்காது ..ஒரே விஷயத்தை மனதளவில் திரும்ப திரும்ப நினைப்பதால் குற்றத்தில் ஈடுப்பட்டு இருப்பார்கள் ..பயித்தியங்கள் அவர்கள் ....பயித்தியங்கள் எண்ணிக்கையை பாருங்கள்? நாம் அவர்களை எதுக்காவது கணக்கில் எடுத்துகொள்வோமா ?
எங்கோ எதோ நடந்த ஓரிரு விஷயங்கள் ,இருந்தாலும் அதை குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை ..
//தற்காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது என் கருத்து.//
எப்போதும் ஆண்களுக்கு தான் பெண்கள் மேல் ஈர்ப்பு இருக்கும் ..அது இயற்கையின் விதி .படைப்பின் சட்டம்..பெண்களுக்காக மண்ணில் போனோர் உண்டு ..பெண்கள் மட்டும் தான் சந்ததிகளை பெற முடியும்..அதனால்தான் அவர்களை இந்து மதம் அவர்களை வணங்குகிறது .. உங்களுடைய வாக்கியங்கள் எங்கோ எதோ கூட பொருந்த வாய்ப்புகள் கம்மி
http://www.tamilhindu.com/2008/06/gita-sita-mother-goddess-women/
இதில் பெண்களை பற்றி கீதையில் உயர்வாக குறிப்பிட்டு உள்ளத்தை திரு .அரவிந்தன் எழுதி இருக்கிறார் .பார்த்து இருப்பிர்கள் .. .உங்க கட்டுரை நல்லா இருக்கறதுக்கு காரணம் ,யதார்த்தை சேர்த்து ஆன்மீக விளக்கங்களை எல்லோரும் புரிந்து கொள்ளுமாறு எழுதுவது தான் ..இது கூட பாருங்களேன் ,பகவத் கீதை ,டாபிக பாத்தவுடனே பல பேர் தெரிச்ச்டுவாங்க ..ஆனா நல்லா எழுதி இருக்கீங்க ,வெறும் வாதத்துக்கோ அல்லது எங்கோ எதோ நடப்பதை குறிப்பிட(பெருன்பான்மையாக அல்ல ) நீங்கள் இந்த இடத்தில் பகவத் கீதை விளக்கத்தில்- பெண்களை பற்றி இவ்வளவு குறைவாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை ,,அதற்க்கு தான் தாங்கள் அருமையாக "கலாச்சாரம் "கட்டுரையில் சொல்லி விட்டர்கள்...தெய்வாம்சம் பொருந்திய பெண்களால் தான் இன்னும் இந்தியா பிழைத்து கொண்டு இருக்கிறது ..

இருந்தாலும் அந்த வரியில் நிறையவே நெருடல் இருக்கிறது..எல்லோரையும் போல் தாங்களும் அப்பிடி எழுதி இருக்கவேண்டாம்...
வெறுமனே எதையோ கேள்விப்பட்டு ...

hayyram said...

சரி குமார், cool . உங்கள் கருத்துக்களையும் மனதில் வைத்துக் கொள்கிறேன். அன்பிற்கு நன்றி.

Pandi A said...

திரு ராம் அவர்களின் இந்த பதிப்பில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை !
நான் மிகவும் ரசித்துப்படித்தேன் !

hayyram said...

மிக்க நன்றி பாண்டி.