Saturday, April 24, 2010

தாலி - ஒரு குழு விவாதம்!

க்ரூப் மெயில்களில் சில நேரங்களில் சூடான சமாச்சாரங்கள் விவாதிக்கப் பட்டுவிடும். குழுவில் இருக்கும் நண்பர்கள் தத்தமது கருத்துக்களை அவரவர் கண்ணோட்டத்தில் எடுத்து வைப்பார்கள். அது போல சூடான ஒரு விவாதத்திற்கு பதில் எழுத நேர்ந்தது. அதை பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கேயும் கொட்டுகிறேன்.

விஜய் டிவியின் தாலி பற்றிய நீயா நானா நிகழ்ச்சி குறித்து அவரவர் கருத்து பரிமாறப்பட்டது. அதில் ஒரு சகோதரி கிழ்கண்டவாறு தம்முடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

****

விவாதங்கள் விவாதிக்க மட்டுமே ஒவ்வாரு ஊடகங்களும் மக்களை கவரும் தலைப்பை மட்டுமே விவாதிக்கும். நீங்கள் குறிப்பிட்டிருந்த விவாத தலைப்புகள் யாவையும் சமுதாயத்தின் பொழுது போக்கும் வார்த்தைகள். எந்த ஒரு ஊடகமும் விலைவாசி உயர்வை கட்டுபடுத்தவும்,நதி நீர் இணைப்பை பற்றியும் இளைஞர்களிடமும்,அனுபவசாலிகளிடமும் விவாதிப்பதும் இல்லை யோசனை கேட்பதும் இல்லை. தாலி தேவையா இல்லையா என்பது தலைப்பு. தாலி என்னும் பண்பாடு நம்முடைய நாகரீகத்தில் இடையில் தோன்றியது. இராமாயணத்தில் ராமர் சீதைக்கு தாலி கட்டியதாக குறிப்பிடவும் இல்லை. கிருஷ்ணன் ராதைக்கு மெட்டி அணிவித்ததாக குறிப்பிடவும் இல்லை. நம் முன்னோர்கள் உடன்போக்கு என்னும் முறையை திருமணத்திற்க்கு பின்பற்றயுள்ளனர்.

அதாவது ஒருவரை ஒருவர் பிடித்த ஆணும் பெண்ணும் தன் இல்லத்தார் விருப்பதுடன் தனி ஒரு இல்லத்தில் இனிது வாழும் முறை. பின் வந்த சமுகத்தால் இடைச் செருகல் ஆனது தாலி என்னும் சம்பிரதாயம் . தாலி அணிவதால் மட்டுமே எந்த ஒரு பெண்ணும் தெய்வமாக முடியாது எந்த ஒரு ஆணும் பக்தனாக முடியாது. இருவரின் இல்லற வாழ்க்கையின் இனிமையை மனம் ஒன்று மட்டுமே தீர்மானிக்கும். இன்று உள்ள இந்த சம்பிரதாயம் நாளைய தலைமுறையிடம் காணாமல் கூட போயிருக்கலாம்.

இலை உடுத்தி, மண்பாண்ட சோறு உண்ட மனிதன் இன்று நாகரீக உடை அணித்து காரில் போகிறான். அவன் முன்னோர் கண்ட பல நல்லவைகளை இன்றைய காலகட்டதிற்காக மாற்றிகொள்கிறான். ஆனால் தனக்கு சாதகமான விசயத்தில் மட்டும் பண்பாடை காரணம் காட்டி மனம் மாற மறுக்கிறான். எந்த ஒரு கிருத்துவனும் தன்னையும் தன் மதத்தையும் புண்படுத்தியதாக எப்போதும் கூறுவதில்லை. எந்த ஒரு முஸ்லிமும் இதே கூற்றை கூறியதில்லை. ஆனால் இந்துக்கள் மட்டுமே தங்களை அவமதித்தாக கூறிக்கொண்டும் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொண்டும் உள்ளனர்.

இந்திய நாடு இந்துத்துவ நாடாக கருதபட்டாலும் எல்லா மதத்தினரும்
பாதுகாப்பாக வாழும் நாடு. எந்த மதத்தினரும் ஆளும் நாடு இதுவே. இதற்கு
இந்துக்களின் சகோதரத்துவமே காரணம். இளம் செடியை பிடுங்கலாம் ஆலமர வேரை அசைக்க முடியாது. இந்து மதமும் அது போலவே. நாயன்மார்களும்.ஆழ்வார்களும் நீர் ஊற்றி வளர்த்த மரம் இது.

ஒரு சிறிய பொருளிகே ஆயிரம் விவாதம் உண்டு. இது நம் உணர்வோடு வேரூன்றியது. அசைத்து பார்க்கும்போது சிறிது வலிக்கும் ஆனால் உணர்த்து பார்க்கும்போது உண்மை நிலை புரியும். கருத்து சொல்லவும் விவாதிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதில் உள்ள கூற்றை ஆதரிக்கவும் எதிர்க்கவும் உரிமை உண்டு. ஆனால் அதில் உள்ள சிறந்ததை எடுத்து கொள்ள நீரை நீக்கி விட்டு பாலை பருகும் அன்னபறவையின் திறன் மட்டுமே நமக்கு வேண்டும். கருத்துகளும் எண்ணங்களும் சுதந்திரமானவை அவற்றை ஏற்றுகொள்ளும் பக்குவமும் , வீணற்றதை தூக்கி எரியும் மனமும் வேண்டும்.

இது போன்ற நிகழ்சிகள் பொழுது போக்க மட்டுமே. நம் மனதை பழுதுபாக்க அல்ல.

****

தனது கருத்தை மிகவும் அழகாக அதே நேரத்தில் இந்து மதம் என்பது ஆலமரம் அதை அசைக்க முடியாது என்கிற தனது நம்பிக்கையையும் ஒரு சேர வெளிப்படுத்தியிருந்தார் அந்தச் சகோதரி. தாலி என்பது இடைச் செருகலாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடிருக்கிறது. ஆனால் எனக்கு இந்துக்கள் தான் சண்டைக்காரர்களாக இருக்கிறார்கள் என்ற தொனியில் அவர் எழுதியிருந்தது உறுத்தியது. அதனால் கீழ்கண்டவாறு பதில் மடலும் இட்டேன்.

***

//எந்த ஒரு கிருத்துவனும் தன்னையும் தன் மதத்தையும் புண்படுத்தியதாக எப்போதும் கூறுவதில்லை. எந்த ஒரு முஸ்லிமும் இதே கூற்றை கூறியதில்லை. ஆனால் இந்துக்கள் மட்டுமே தங்களை அவமதித்தாக கூறிக்கொண்டும் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொண்டும் உள்ளனர். //

சகோதரி , நீங்கள் மத சமூகத்திற்கு வெளியே இருக்கிறீர்கள். இதே விஜய் டிவி முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்ப தேதியும் குறித்து விளம்பரமும் போட்டது. உடனே முஸ்லீம் கட்சியான தமுமுகவும், முஸ்லீம் மத இமாம்களும் எங்கள் மத சம்பிரதாயத்தை அசிங்கப்படுத்தும் நிகழ்ச்சி இது. இதை ஒளிபரப்பினால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். விஜய் டி வி முன்பு போரட்டம் பெரியளவில் நடத்துவோம் என்று அறிவிப்பு செய்து, கமிஷனரிடம் ஒரு பெட்டிஷனும் கொடுத்து அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் தடுத்தே விட்டனர்.

கிறிஸ்தவர்களோ ஏசுவைப் பற்றி விமர்சனம் செய்வதாக அமைந்த டாவின்ஸி கோட் என்ற திரைப்படத்தை இந்தியாவின் பல இடங்களில் (தமிழ் நாடும் அடங்கும்) வெளியிட விடாமலேயே செய்துவிட்டார்கள். இதுவெல்லாம் ஏன் உங்களுக்குத் தெரியவில்லை என்று புரியவில்லை?.


இந்துக்களின் இந்த எதிர்ப்பு தாலி வேண்டுமா வேண்டாமா என்பதற்க்கல்ல. ஊடகங்கள் அதுவும் விஜய் டிவி இந்துக்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சார விஷயங்கள் பற்றியே தொடர்ந்து விமர்சனப்படுத்தியும் நீயா நானாவில் ஒளிபரப்பியும் இந்து மதம் மீதான தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் கிறுஸ்தவரான மெர்குரி கிரியேஷன் நிர்வாகி தனது லாபகராமான வேலையாகவே இந்துக்களை புன்படுத்தும் விஷயத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்தத் தாக்குதலின் மீதான எதிர் விளைவுதான் இந்தப் பதிவே தவிற தாலி வேண்டும் என்று கட்டாயப்படுத்த அல்ல.

இன்னும் சொல்லப்போனால் இந்துக்களின் எந்தப் பெண்ணும் தாலிகட்டும் போது கட்டிய அதே மஞ்சள் கயிறோடு திரிவதில்லை. அழகான தங்கச் சங்கிலியாக மாட்டி அதை ஆபரனமாகத்தான் அணிந்து கொள்கிறார்கள். அங்கேயே அது தாலி என்பது மறைந்து ஆபரணமாகி வெகுநாளாகிவிட்டது. குடும்பம் என்ற அமைப்பு இங்கே முக்கியத்துவம் பெற வேண்டுமே அன்றி தாலி இல்லை. எதிர்காலத்தில் இது தேவையில்லாமலும் போகலாம். ஆனால் ஊடக்ங்கள் இந்து மதத்தைப் பற்றியே குறிவைத்து தாக்குவது ஒத்துக்கொள்ள முடியாது. அதை ஒருமனதாக கண்டிக்க வேண்டுமே தவிற புரட்சிகரமாக பேசுகிறேன் என்று கூறிக்கொண்டு அவர்களுக்கே ஜால்ரா தட்டக் கூடாது. அது நம்மை தான் பாதிக்கும்.

மேலும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக பகுத்தறிவு என்ற போர்வையில் நம் மதத்தை நாமே கேலி பேசுக்கொள்ளும் புத்தியை நம்மிடம் திணித் திருக்கிறார்கள் நாத்திக வாதிகள் என்ற சுயநலக்காரர்கள். தன் கையாலேயே தன் கண்ணைக் குத்துக்கொள்ளும் தன்மையிலிருந்து வெளியே வாரவேண்டும். தயவு செய்து இந்து தர்மத்தைகாப்பாற்ற அதை அழிக்க நினைப்பவர்களை அடையாளம் கண்டு எதிர்க்க ஒன்று கூடுங்கள். உங்களுக்கு அரைகூவல் விடுகிறேன்.

***

என்று முடித்தேன்.

மேலும் இங்கே சில விஷயங்களை அடுக்க நினைக்கிறேன். சமீபகாலமாக பத்திரிக்கையை அலங்கரிக்கும் சில செய்திகள் பாதிரியார்களைப் பற்றியதாக இருந்தும் அதைப் பற்றி எந்த தொலைக்காட்சியும் செய்திகளின் சில வினாடிகளைக் கூட நிரப்பி காண்பிக்கவில்லை.

உதாரணமாக வடநாட்டிலிருந்து குழந்தைகளை கடத்தி வந்து காப்பகம்
நடத்துகிறேன் என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து பணம்கறக்கும் பாதிரிமார்கள், தன்னுடைய தலைமையில் இயங்கும் பள்ளிச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தகாத முறையில் நடந்து கொள்ளும் பாதிரியார்கள் போன்றவர்கள் பற்றி எந்த தொலைகாட்சியும் நீயா நானா நடத்தவுமில்லை, "பாதிரியார்களின் அட்டூழியம் இன்றைய நிஜத்தில்" என்று காட்டவும் இல்லை.

சமீபத்தில் கூட ஊட்டியில் ஜோசப் பழனிவேல் ஜெயபால் என்கிற பாதிரியார் மீது அமெரிக்காவில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டு அது கிட்டத்தட்ட நிருபிக்கப்பட்ட நிலையில் இவர் அங்கிருந்து தப்பி இங்கே ஊட்டியில் சந்தோசத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கு பிஷப்புகளின் ஆதரவும் உண்டு. இதைப்பற்றி எந்த தொலைக்காட்சியும் தங்கள் நிஜத்திலோ அல்லது நீயா நானாவிலோ விவாதிக்கவே இல்லை.

அதுமட்டுமா, ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளிடம் இருக்கும் ஓரினச்சேர்க்கை பழக்கத்தைப் பற்றியும் விலாவாரியாக 'ஆமென்' என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இப்போது இரண்டாம் பாகம் எழுதிக்கொண்டு இருக்கிறாராம், தலைமறைவாய். இதைப்பற்றி எந்த தொலைக்காட்சியும் தங்கள் நிஜத்திலோ அல்லது நீயா நானாவிலோ விவாதிக்கவே இல்லை. ஜெஸ்மி பற்றி இங்கே

எனவே ஊடகங்களுக்கு இந்து அடையாளங்கள் மீது மக்களிடம் ஒரு கசப்புணர்ச்சியை ஏற்படுத்தி விடவேண்டும் என்கிற முனைப்பு மிக அதிகமாகவே இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. அறிவு சார்ந்த விவாதங்கள் ஒருபுறமிருந்தாலும் இந்துக்களே...

தேவை எச்சரிக்கை!

கொசுறு: தினமலரி வெளியான ஒரு மதமாற்றச் செய்தி இங்கே . இதனைக் கேட்ப்பார் கிடையாது.
அது சரி.. கோபிநாத்துக்கு கல்யாணம் ஆச்சே.. தாலி கட்டி தானே கல்யாணம் செய்தார். அவர் வீட்டு விசேஷத்தில் மட்டும் பகுத்தறிவு நாசமாய்ப் போனது ஏன்?
வாழ்க வளமுடன்!

8 comments:

Anonymous said...

திரு ராம், நலமா? இது மாதிரி எல்லாரும் விழிப்போடு இருந்தால் நலம்.

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18110

நன்றி சுவாமி

hayyram said...

நலம் சுவாமி. நீங்கள் நலமா? தகவலுக்கும் நன்றி.

Anonymous said...

If the hindu religion treat all the hindus in same way means why a non brahmin not able to become a head of shankara mut? eventhough he is a hindu?

அ. நம்பி said...

//கொசுறு: தினமலரில் வெளியான ஒரு மதமாற்றச் செய்தி//

நேரம் இருப்பின் பாருங்கள்:

கவுண்டமணி, கொசுத்தொல்லை, மதமாற்றம்…!

http://nanavuhal.wordpress.com/2010/04/26/mathamaatram/

PrasannaKaarthik said...

Gopinath marriage photos

http://popcorn.oneindia.in/artist-view-fanphotos/17956/1/8194/gopinath.html

Ibrahim said...

HELLO MR. WAT ABOUT NITHYANANTHAN AND KANCHIPURAM DEVANATHAN, Y UR NOT DISCUSSING ABOUT THEM, TREAT COMMON TO ALL

hayyram said...

வருகைக்கு நன்றி இப்ராஹிம், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் பதிவர்கள் உட்பட உங்கள் ஆசையைத் தானே தீர்த்து வைக்கிறார்கள். இந்து கோவில் திருவிழாக்களையும் சாமியார்களையுமே மர்மமான ஏதோ ஒன்றை காட்டுவதுபோல காட்டி அடுத்த தலைமுறையையே பயமுறுத்துகிறார்களே போதாதா! அதையே நானும் செய்து சலிப்பேற்ற வேண்டுமா என்ன?

Dr.Anburaj said...

6 வயது சிறுமி ஆயிசாவை 50 வயது முகம்மது திருமணம் செய்து 9 வயதில் தன்னோடு அழைத்து சென்றதைப்பற்றி எழுதவா இப்ராகிம் ? விடியக்காலை யுதர்களின் வீடுகளைத்தாக்கி அனைத்து ஆண்களையும் கொன்று பெண்களை பங்குபோட்டுக்கொடுத்து விட்டு யுதசாதி தலைவன் மனைவி சோபியாவை அன்று இரவே திருமணம் செய்து ..... கொண்டாடிய முகம்மதுவின் பேராண்மையை எழுதவா ? உமரின் மகள் முகம்மதுவின் மனைவி கம்சாவை பொய் சொல்லி தாய்வீட்டிற்கு போகச் சொல்லி விட்டு வேலைக்காரியான மரியா என்ற தனது அடிமைப் பெண்ணோடு உடல்உறவு கொண்ட ஒழுக்க உதாரணத்தை எழுதவா ?
தன்னை விமர்சனம் செய்து 75 வயது யுத பெண்ணை- ஒரு யுதகூட்டத்தின் தலைவியின் - இருகால்களையும் வேறுதிசையில் செல்லும் ஒட்டகத்தின் கால்களில் கட்டி இரண்டாகக் கிழித்து
தலையை வெட்டி தட்டில் வைத்து முகம்மதுபின் பார்வைக்கு வைத்தனர் முகம்மதுவின் தோழர்கள்.முகம்மது, பின் தலையை ஊர்சுற்றி எடுத்து வந்து நடுத்தெருவில் காட்சி பொருளாக வைக்க உத்தரவிடுகின்றார்... இந்த அன்பின் மாட்சியைக்குறித்து எழுதவா ?
9 மனைவிகளையும் 40 அடிமைப் பெண்களை-வைப்பாட்டிகளைக் கொண்ட முகமமது ஒவ்வொரு இரவும் ஒர் மனைவியின் வீட்டில் தங்குவது வழக்கம்.2ம் மனைவி சவ்தா தன்னோடு தங்கும்நாளை ஆயிசாவோடு தங்கிக் கொள்ள வேண்டிக் கொண்டார். மனைவிகளை சமமாக நடத்திய நோர்மையை எழுதா?
எதை எழுத வேண்டும் இப்ராகீம் அவர்களே !!!!!