Saturday, April 24, 2010

தோப்புக்கரனம் போடுங்க!



வலது கையால் இடது காதைப் பிடித்துக் கொண்டும், இடது கையால வலது காதைப் பிடித்துக் கொண்டும் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இது தோப்புக்கரனம். பிள்ளையார் முன்னாடி இதைச் செய்தால் நமக்கு நல்ல புத்தியையும் படிப்பையும் பிள்ளையார் கொடுப்பார் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தால் அதை மூட நம்பிக்கை என்று ஆராயாமலே கூறிவிடுவார்கள் நம்மூர் அறிவு ஜீவிகள். பிள்ளையார் கொடுக்கிறாரோ இல்லையோ நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பயிற்சி அதற்கான வேலையைச் செய்யும் என்பதே அதன் அர்த்தம். அதையே வெள்ளையர்கள் ஆராய்ச்சி செய்து இரு கைகளால் காதுகளைப் பிடித்து உட்கார்ந்து எழுந்தால் உடலில் என்ன நடக்கிறது என்று கண்டுபிடித்து அதை இப்போது ஒரு மருத்துவ வகுப்பாகவே நடத்துகின்றனர் வெள்ளையர்கள்.



கண்ணுக்குத் தெரியாமல் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொருளின் மீது ஏற்றிச் சொல்லும் போது அது நம்பிக்கையை அதிகரிக்கும், தொடர்ந்து அதைச் செய்து நன்மை அடைவார்கள் என்ற பொது நோக்கோடு இப்படி பல விஷயங்கள் இறை நம்பிக்கையின் மீது ஏற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை ஆராயாமலே மூட நம்பிக்கை என்று சொல்லி புறந்தள்ளி விடுகிறோம்.



தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர்கள் ஆராய்ந்த போது மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர். பரிசோதனையில் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் கூறுகின்றனர். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"Ang showed that the results from EEG (electroencephalography) readings after doing this exercise indicate the right and left hemispheres of the brain had become synchronized. EEG readings measure the neuron firings in the brain via electrodes on the scalp, and are used to determine brain wave normalcies and abnormalities."

ஆங்கிலத்தில் மேலும் படிக்க இங்கே

சரி, எதையுமே வெள்ளைக்காரன் சொல்லிவிட்டால் அதை ஆராயாமலேயே அது தான் அறிவு என்று ஏற்றுக்கொள்ளும் நம்மூர் சாம்பிரானிகள் இதை தோப்புகரனம் என்று சொல்லாமல் சூப்பர் ப்ரெயின் யோகா செய்கிறேன் என்று வீட்டில் குட்டி சுவற்றின் முன்னால் உக்கி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'சூரிய நமஸ்காரம்' என்றால் அது ஆன்மீகம் ஆகிவிடும் என்று கூறிவிட்டு அதே நமஸ்காரத்தை 'ஞாயறு போற்றுதும்' என்று தானே பெயரிட்டு மீசையில் மண் ஒட்டாமல் சாமிகும்பிடும் சைக்கோக்கள் அடங்கிய நாடு தானே நம் நாடு! தோப்புக்கரனத்தையும் சூப்பர் ப்ரெயின் யோகா என்று கூறி செய்வார்கள் என்று நம்புவோம்! எப்படியோ நல்லதை கடைபிடித்தால் சரிதான்!

பிள்ளையாருக்கு தோப்புக்கரனம் போடும் இளம் பெண்கள்!

அட! தோப்புகரனத்தை 'மட்டும்' பாருங்கப்பா!








No comments: