Sunday, February 20, 2011

கீதோபதேசம்-பாபங்களுக்குக் தூண்டுதலாக இருப்பது காமம் - 2மேற்கண்ட திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை படிக்கிற போது பாபத்திற்கு தூண்டுதலாக இருப்பது எது? என்கிற முந்தைய பதிவுதான் ஞாபகம் வந்தது. முறையற்ற காமம் சைக்கோ கொலைகாரன் என மோசமாக சித்தரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனத் தெரிகிறது. இவ்வளவு சைக்கோத்தனமான உணர்வுகளை திரைப்படத்தின் மூலம் ஏன் வெளிப்படுத்துகிறார்களோ? சினிமாக்காரர்களிடம் கேட்டால் சமூகத்தில் இருப்பதைத் தானே காட்டுகிறோம் என்பார்கள். வீட்டுக்குள்ளே தான் கழிவறையும் இருக்கிறது. அதற்காக அதிலிருக்கும் மலத்தை கையிலெடுத்து நடுக்கூடத்தில் வைத்து எல்லோரும் சுற்றி உட்கார்ந்து அழகு பார்க்க முடியுமா? சினிமாக்காரர்களுக்கு எப்போதும் அவர்கள் செய்வது தான் சரி!

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். பாபங்களுக்குத் தூண்டுதல் காமம் என்று கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்கிறார்.

ஆனால் காமம் என்கிற வார்த்தையின் உண்மையான உள்ளார்ந்த அர்த்தம் தான் என்ன? காமம் பாபங்களுக்கு தூண்டுதல் என்றால் இன விருத்திக்கும் அது தானே காரணம். இனவிருத்தி என்பது இயற்கையான உணர்வு தானே! அதற்கு காரணமான காமம் என்ற உணர்வு பாபத்தின் தூண்டுதலாக எப்படி ஆகமுடியும்?

மிகவும் ஆழமான பரந்த விஷயங்களை போதித்துக் கொண்டிருக்கும் கண்ணன் வெறும் உடலுறவு கூடாது என்று ஒரு சிறிய சிற்றின்ப விஷயத்தைப் பற்றியா பேசிக்கொண்டிருப்பான். இல்லை. இந்த காமம் என்பது வெறும் உடலுறவு சம்பந்தப்பட்ட உணர்வைப்பற்றி சொல்வதாக இருக்க முடியாது. இந்த வார்த்தைக்கும் விரிவான உணர்வு மற்றும் மனோரீதியான பரந்த அர்த்தமிருக்க வேண்டுமே! இதோ சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

காமம் என்பதை பொதுவாக ஒரு பற்றுதல் உணர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக ஒரு புதிய புத்தகம் வாங்கினால் நாம் என்ன செய்கிறோம். அந்தப் புத்தகத்தை மூக்கால் முகர்ந்து பார்க்கிறோம். அதன் வாசனையின் வசீகரிப்பால் சில வினாடிகள் மயங்குகிறோம். அதன் அட்டைப்பட அழகை கண்களால் கண்டு ரசிக்கிறோம். அதன் தாள்களை தடவிப்பார்க்கிறோம். சில நிமிடங்கள் அதனோடு புலன்களால் உறவாடுகிறோம். இவ்வாறு எந்த ஒரு பொருளின் மீது நாம் புலன்களால் உறவாடுகிறோமோ அது அனைத்துமே காமம் என்றழைக்கபடும்.

இவ்வாறு புலன்களால் உறவாடிய அந்தப் பொருளின் மீது நமக்குப் பற்றுதல் தானாகவே வந்து விடுகிறது. அதன் மீது ஒரு உரிமை உண்டாகிறது. நான் வாங்கியது, என்னுடைய புத்தகம் என்ற பிரிவினை குணம் தோன்றுகிறது. அதன் மீது யாரும் கைவைத்தாலோ நம்மைக் கேட்காமல் எடுத்து கையாண்டாலோ கோபம் வருகிறது. அது மனசலசலப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த மனசலசலப்பு விரோதத்தை உண்டாக்குகிறது. அத்தகைய விரோதம் போட்டி, பொறாமை, வஞ்சம், வழக்கு, கொலை என்று முடிகிறது. ஆக இவை அத்தனைத்திற்கும் புலன்களால் உறவாடத் தூண்டும் காமம் என்கிற உணர்வும் அதன் காரணமாக எழும் பற்றுதல் உணர்வே காரணமாவதால் பாபங்களுக்கு அடித்தளம் காமமே என்று ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் உரைக்கிறார்.

ஆக காமம் என்பது ஒரு பற்றுதல் உணர்வு. புலன்களால் உறவாடும் படியான இந்த உணர்வு வெளிமனத்திலிருந்து உந்தப்படுகிறது. இதனால் ஏற்படும் 'நான்,' 'எனது' என்கிற பற்றுதல் உணர்வும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் ஆத்மாவில் பதியப்படுகிறது. அந்தப்பதிவே ஒவ்வொருவரின் பாவம் மற்றும் புண்ணியத்தின் ஆதாரமாகி விடுகிறது.

ஒரு குழந்தையை பார்க்கிறோம். அது சிரிக்கும் அழகை ரசிக்கிறோம். கண்களால் ஆன நம் உறவாடல் மனதை கவர்கிறது. அதனால் உந்தப்பட்டு அந்தக் குழந்தையை எடுக்கிறோம். உச்சி முகர்கிறோம். கண்ணத்தில் முத்தமிடுகிறோம். உடலோடு மெலிதாக அணைத்து அதன் கதகதப்பை உணர்கிறோம். குழந்தையைக் கொஞ்சுவதில் எந்த மனச்சலனமும் நமக்கு இருக்கப்போவதில்லை. ஆனால் இந்த சில வினாடிகள் அந்தக் குழந்தையுடன் நம் புலன்களின் மூலமாக உறவாடுவாடுகிறோம். இந்த உறவாடல் அந்தக் குழந்தையின் மீதான பற்றுதலை உண்டுபண்ணுகிறது.

ஒரு மைப்பேனா, ஒரு செல்பேசி, ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, புதிய துணிமணிகள் என்று எதை வாங்கினாலும் அவற்றோடு நாம் சில வினாடிகள் புலன்களால் உறவாடுகிறோம். முகர்ந்து பார்க்கிறோம். உடலோடு ஒரு தொடர்பை உண்டு செய்து விடுகிறோம். இதனால் அந்தப் பொருட்களின் மீது நமக்கு ஒரு பற்றுதல் உண்டாகிவிடுகிறது. அவற்றில் ஒன்று காணாமற் போனால் துக்கப்படுகிறோம். எடுத்தவனை எசுகிறோம். துவண்டு போகிறோம் அல்லது பழிவாங்கத் துடிக்கிறோம். காரணம் அந்தப் பொருட்களின் மீது நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.

ஒரு நண்பன் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கி நம்மிடம் காட்டுகிறான்.

நாம் அதனருகில் சென்று அதனை ஆசையோடு தொட்டுப் பார்க்கிறோம். அதன் மீது அமர்ந்து அது நம் உடலோடு எவ்விதம் பொருந்துகிறது என்று பொருத்திப் பார்த்து பூரித்துப் போகிறோம். அதனை ஒரு முறை ஓட்டிப் பார்க்க அனுமதி பெற்று அந்த வாகனத்திற்கும் நமக்கும் ஒரு புலன்களின் ரீதியான உறவாடலை நிகழ்த்துகிறோம். இதனால் அந்த வாகனம் மீது பற்றுதல் உண்டாகிறது. நாமும் அதைப் போல் வாங்க வேண்டும் என்கிற தூண்டுதல் உண்டாகிறது. அது நிராசையில் முடிந்தால் அது நண்பன் மீதான பொறாமையாகவும், வைராக்கியமாகவும் மாறிவிடுகிறது. காரணம் அந்தப் பொருளின் மீது நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.

நாய், பூனை, என எந்த செல்லப் பிராணியை வளர்த்தாலும் அதனோடு உடல் ரீதியாக நாம் பிணைப்பை உண்டு செய்ய மறப்பதில்லை. அவற்றிற்கு தடவிக்கொடுப்பது, கையில் எடுத்து மார்போடு அணைப்பாக வைத்திருந்து உடல் மொழியை பரிமாறச் செய்வது என்று புலன்களால் ஒரு உறவாடலை நிகழ்த்துகிறோம். அவற்றின் மீது பற்றுதல் உண்டாகிறது. அவற்றில் ஒன்று இறந்து போனால் துக்கப்படுகிறோம். அவை பிறரால் துன்புறுத்தப்பட்டால் கோபம் சண்டை பழிவாங்குவதல் என்று உணர்ச்சிப் போராட்டங்கள் உண்டாகிறது. காரணம் அவைகளோடு நாம் புலன்களால் உறவாடிவிட்டோம். அதனால் பற்றுதல் உண்டாகிறது. அந்த உறவாடலுக்குப் பெயர் காமம்.

இப்படி உயிரற்ற பொருட்களானாலும் உயிருள்ள பொருட்கள் ஆனாலும் அதனோடு உறவாடும் விதம் எல்லாமே அடிப்படையில் ஒன்றுதான். இந்த இயல்பான உணர்ச்சியின் வெளிப்பாடே ஆண் பெண்ணை முகர்தலும், உடலோடு ஒரு தொடர்பை உண்டு செய்து கொள்வதும் என தொடர்கிறது. இந்நிகழ்வு மனித இணத்திற்குள் நிகழ்வதால் அங்கே இனவிருத்தி உண்டாகிறது. மற்றவற்றில் உண்டாவதில்லை. வித்தியாசம் அவ்வளவே அன்றி புலன்களால் உறவாடும் குணத்தை நாம் எல்லா பொருட்களின் மீதும் வெளிப்படுத்துகிறோம்.

இதனை பொதுவாக நாம் உணர்வதில்லை. அதனால் காமம் என்பதே ஆண் பெண் சேரும் உடலுறவு மட்டும் தான் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. காமம் என்பது ஒரு பொதுவான உணர்வைக் குறிக்கும் வார்த்தை. காணும் பொருள் மீதெல்லாம் நம் புலன்களை வைத்து அவற்றை நம்மோடு இணைத்துக் கொள்ளத் துடிக்கும் உந்துதலைக் குறிக்கும் வார்த்தை காமம். ஆகவே கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணர் புலன்களை வெளிப்புறமாகச் செலுத்தாமல் உட்புறமாகச் செலுத்தி ஆன்மாவோடு அவற்றை. இணைத்து எவனொருவன் ஆன்மாவைத் தனதாக்கிக்கொண்டு அதனோடு இணைகிறானோ அவனே விவேகி என்கிறார்.

ஆக காமம் என்பது மனித உடலுறவு அல்ல. வெளி உலகோடு நம் புலன்கள் நடத்தும் உறவாடலும் அதனால் உண்டாகும் பற்றுதல் அனைத்துமே காமம் என்றழைக்கப்படும். அவ்வாறு உண்டாகும் பற்றுதல் வளர்ந்து கொண்டே இருக்கும். ஒன்று கிடைத்தால் இன்னொன்றின் மீது, அது கிடைத்தால் வேறொன்றின் மீது என அது தொடர்ந்து கொண்டே இருக்கும். புலன்கள், மனம், புத்தி ஆகியவைகள் மூலமாக நாம் மயங்கி அறிவை இழக்கச் செய்யும் எந்தச் செயலும் காமமே!

எனவே புலன்களினால் உறவாடி அதனால் பற்றுதலை உண்டாக்கிக் கொண்டு அதனை அடையும் பொருட்டு பாபங்களை செய்யாதிருத்தலை ஸ்ரீ க்ருஷ்ணர் தெளிவாக கீதையில் எடுத்துரைக்கிறார். நாமும் அவ்வழியை அடைய சாதகம் செய்வோமாக!
"அர்ஜுனா! அவ்வாறு பாபம் செய்யத் தூண்டுவது ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவதில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

நெருப்பு புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், கருவானது கருப்பையாலும் மூடப்பட்டிருப்பது போல் ஞானம் ஆசையால் மூடப்பட்டுள்ளது. குந்தியின் மகனே! தீயைப்போல் தணிக்க முடியாததும், தீர்க்க முடியாததும் ஆன காமம் தான் ஞானியின் அறிவை மூடிக்கொண்டிருக்கிறது.புலன்கள், மனம், புத்தி ஆகியவைதான் அதன் இருப்பிடம் எனப்படுகின்றன. இவைகளின் வழியாக அவனை மயக்கி அவனுடைய அறிவை மூடி மறைக்கின்றது."
- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


.

5 comments:

KrishnaDeverayar said...

Indian movie directors especially when it comes to tamil movies are all intelligent wannabes.

Movies must be made for entertainment and it must be light when comes to the content. Everyone must go and enjoy and thats what hollywood is doing for majority of their movies. Movies like Transformers, Pirates of carribean, Batman, X men, Alice in Wonderland, Minority Report and many more are made on this reason. Just come and enjoy. You won't be bored. That kind of thing only.

But tamil movies and most of it are depressing or like the ones you mentioned. Only here every single tamilan in the cine field wants to send a message to our society.

All are good at giving messages and advices.

Ram, i already stopped watching tamil movies for a long time. Recent movie i watched was only Enthiran. And the rest I watched are English movies. They are light in subject content, visually interesting though plus higly entertaining. No one in english movie will send a message or advice to reform us the audience or the society.

Hollywood animated movies like Up,The incredibles, Wall-E are thousands times better than tamil movies.

Good Post!!!

hayyram said...

U are right. annimation movies are much better. thanks mr.KrishnaDeverayar

Madhusudhanan D said...

Since olden days songs, dramas are considered as a means to give some good things to the people. They impart good knowledge and they moulds the character of the people.

According to Supreme court of India,

"...film motivates thought and action and assures a high degree of attention and retention as compared to the printed word. The combination of act and speech, sight and sound in semi darkness of the theatre with elimination of all distracting ideas will have a strong impact on the minds of the viewers and can affect emotions. Therefore, it has as much potential for evil as it has for good and has an equal potential to instill or cultivate violent or good behaviour. It cannot be equated with other modes of communication."

Movies are not just for entertainment. They give some food for our thoughts. But I do not argue that movies like Nadunisi Naigal are good. I accept that the animated movies are better than movies like the former.

But people who make movies should understand this. They are making such movies because they can see money with those. The root cause is the people who watches those movies. A good Govt will not allow such movies.

I feel that there is no grades required for movies. The film which deserve A or U/A should be banned. Even the board of film certification must be more strict in grading the movies.

hayyram said...

// A good Govt will not allow such movies. // ஆம். அது தான் நிஜம். இங்கே தான் சமூகம் எக்கேடு கெட்டாலென்ன என்பது போல தானே அரசே இருக்கிறது. ஏதாவது கட்டுப்படுத்தப்போய் சினிமாக்காரர்கள் கோபித்துக் கொண்டால் ஆதரவு கிடைக்காதே என்று அவர்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்!

VIDHYASAGAR said...

காமம் தவறு என்றால் நமது தலைமுறை இல்லாமல் போய்விடுமே எனக்கு சற்று விள்ளகுங்க