Sunday, February 27, 2011

சுவாமி விவேகான‌ந்த‌ரின் பொன்மொழிக‌ள்!




நீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற எல்லாம் அவரே. உங்களுள் தீமை இல்லாமல்
வெளியில் எப்படித் தீமையைப் பார்ப்பீர்கள்? உங்கள் இதயத்தில் எங்கேயோ
ஒரு மூலையில் திருடன் இல்லாவிட்டால் வெளியில் எப்படித் திருடனைப்
பார்ப்பீர்கள்? நீங்களே கொலைகாரர்களாக் இல்லாவிட்டால் வெளியில்
எப்படி கொலைகாரர்களைப் பார்ப்பீர்கள்? நல்லவர்களாக இருங்கள், 
உங்களுக்குத் தீமை மறைந்துவிடும்.

நீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள்.
ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். 

துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.
எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது. 

மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மீக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு, ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்.

எங்கும் எதிலும் இறைவனையே பார்க்க வேண்டும். அப்போது தான்
உலகை உண்மையாக அனுபவிக்க முடியும்.

புத்தனைப் போல் உணர்ச்சி கொண்டால் புத்தனாகவே ஆவாய். உணர்ச்சி தான் வாழ்க்கை, உயிர், வலிமை எல்லாம். உணர்வுப்பூர்வமான தேடல் அன்றி தீவிரமான அறிவு முயற்சியால் கடவுளை அடைய முடியாது.

புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். உத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் த்கழ்கிறாள். 

இந்தக்காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளீவாக நான்
பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.


- சுவாமி விவேகானந்தர்



.

No comments: