Saturday, April 30, 2011

ஸ்வாமி என்றால் என்ன?




ஸ்வாமி என்றால் என்ன?


'ஸ்வம்' என்கிற வார்த்தைக்கு 'உடைமை', 'சொத்து' என்று அர்த்தம் 
உடைமைக்குச் சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர் தான் 'ஸ்வாமி'. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை 'உடையார்' என்பது. 


முன்காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் எல்லாம் 'திருச்சிற்றம்பலமுடையார்', 'திருவேங்கடமுடையார்', 'திருநாகேச்சுவர முடையார் என்பது போலவே 'உடையார்' என்கிற பெயரில் தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால் தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ரமாநுஜரை 'உடையர்' என்றே கூறுகிறார்கள்.


'எல்லாம் உன் உடைமையே' என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம் - அவற்றுக்குப் உரிமை கோரும் நாமுள்பட பிறர் எல்லோருமே, எல்லாமுமே இறைவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை. நாமும் இல்லை. உண்மையில் இந்த உலகில் நாம் உரிமை கோரமுடிகிற சொத்துக்கள் எதுவும் இல்லை.


இப்போது 'நான், நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குத்தான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலைய மாட்டோம்.


நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமை இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதி தான்!


'ஸ்வாமி' என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடமே எந்த சொந்தமும் இல்லை என்பதையும் நாம் இறைவனின் இஷ்டப்படி அட்டுவிக்கப் பட வேண்டிய அவனுடைய சொத்து தான் என்பதை உணர்த்துவதாக் அமைந்திருக்கிறது.


இப்படி உணர்வது தான் பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பதாகும்.


- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!


.

6 comments:

அகோரி said...

அருமையான பதிவு

hayyram said...

நன்றி அகோரி!

திவாண்ணா said...

ஹேராம், என் ரீடர்லே புது பதிவு வரலையே, ஏன்?

hayyram said...

நான் புதுசு போடலியே..! அதான் காரணமா இருக்கும்!

திவாண்ணா said...

கடேசி பத்து பதிவுகளை அங்கே காணலை! :-(

hayyram said...

//கடேசி பத்து பதிவுகளை அங்கே காணலை! :-(// கூகுள் பிரச்சனையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.