இணை பிரியாத, ஒரே போன்ற இரண்டு பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று பழத்தை ருசித்துத் தின்கிறது. மற்றொன்று தின்னாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஜீவனும் ஆன்மாவும் ஒரே உடம்பினுள் உள்ளனர். ஜீவன் அதாவது மனிதன் அரியாமையில் மூழ்கி, மோக வசப்பட்டு வருந்துகிறான். வழி பாட்டிற்குரிய தன் ஆன்மாவையும் அதன் மகிமையையும் அவன் எப்போது
பார்க்கிறானோ அப்போது கவலைகளிலிருந்து விடுபடுகிறான்.
பொன்னொளியுடன் ஒளிர்பவனும், தலைவனும், ஆள்பவனும், இறைவனுக்கான வழியாகவும் திகழ்கின்ற ஆன்மாவை எப்போது ஒருவன் பார்க்கிறானோ அப்போது அந்த மகான் புண்ணிய பாவங்களை உதரிவிட்டு துன்பமற்ற மேலான சமநிலையை அடைகிறான்.
எல்லா உயிர்களிலும் செயல்படுவது பிராணனே என்பதை உணர்பவன் தேவையற்றவற்றைப் பேசுவதில்லை. ஆன்மாவில் களிப்பவனாக, ஆன்மாவில் இன்பம் காண்பவனாக அவன் வேலை செய்கிறான். ஆன்ம ஞானியரில் சிறந்தவன் அவனே.
உண்மை, தவம், உறுதியான ஞானம், பிரம்மச்சரியம் ஆகியவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால் இந்த ஆன்மா அடையப்படுகிறது. இந்த ஆன்மா உடம்பின் உள்ளே புனிதமான ஒளிப்பொருளாக உள்ளது. புனிதமும் புலக்கட்டுப்பாடும் உடையவர்கள் அதனைக் காண்கிறார்கள்.
.
No comments:
Post a Comment