Wednesday, April 15, 2009

எத்தனை காலம் தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே?


தமிழகத்தில் பிராமனர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் தலை குனிவைச் சந்த்திக்கப்போகிறார்களோ தெரியவில்லை. அயோத்தியா மண்டபம் வாசலில் ஐம்பது பைசா இலாபத்திற்கு பூனூல் விற்கும் அறுபது வயது பிராமணரை அருவாளால் வெட்டி விட்டு ஓடும் இனவெறி பிடித்தவர்கள் இந்தியாவில் இங்கே தான் அதிகம்.

ஆனால் சமூகத்திற்கு பிராமணர்கள் ஆற்றிய தொண்டுகளை வசதியாக யாருக்கும் எடுத்துக்கூட சொல்லாமல் மறைத்துவிடுவது அதைவிட கொடுமை. இன ரீதியாக ஒரு சமூகத்தையே ஒதுக்கி உணர்ச்சிக்கொலை செய்பவர்கள் அந்த சமூகமே இல்லாமல் அழிந்து போகவேண்டும் என்று நினைப்பவர்கள் இலங்கையில் தமிழ்ச் சமூகம் அழிக்கப்படுவதை மட்டும் அய்யோ இனப்படுகொலை நடக்கிறதே என்று வாய் விட்டுச் சொல்லி பத‌றுகிறார்கள். சிட்டுக்குருவி இனம் போல கண்ணுக்குத் தெரியாமல் அழிந்து போகும் தருவாயில் இருக்கும் பிராமணர்கள் பற்றி கவலைப்பட அரசியல் வேடதாரிகளுக்கு இப்போது நேரம் இல்லை. அவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மக்களுக்கு இல்லை.

ஆனால் ஆதி காலம் முதல் நம் சமூகத்தில் பிராமணர்களின் பங்கு பற்றி ஒரு சிறு துளிகளாவது நான் படித்தவை கேட்டவை மற்றும் கண்டவைகளைக் கொண்டு இங்கே கொஞ்சமேனும் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிறு துளியைத் தெளிக்கிறேன்.

'கடவுள் இல்லை ' என்று வேத காலத்திலேயே கூறியவர் சார்வாக மகரிஷி

தென்னாட்டில் நாத்திகம் பேசிய பிராமணப் புலவர் கபிலர்! மறுபிறப்புத் தத்துவத்தைத் தூள் ஆக்கிய 18 சித்தர்களில் சிலர் பிராமணர்கள்!


வேதக் கருத்துக்களை மறுத்த சமணம் புத்தம் போன்ற மதங்களில் முதன்மையான சீடர்களாய் விளங்கியவர்கள் பிராமணர்களே!


கருத்துப் புரட்சிகளை முதலில் வரவேற்று நடந்தவர்களும் பிராமணர்களே!


உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், விதவா விவாகம் போன்றவற்றை ஆதரித்துப் போர் நடத்தியவர்களூம் அவர்களே!


வேதத்திற்கு நிகராக தமிழ் மொழியில் 'திராவிட வேதம் ' என்ற திவ்யப் பிரபந்தத்தை உருவாக்கியவர்களும் அவர்களே!


வேதத்தை வெளியே சொல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி உடைத்து திருக்கோட்டியூர் மதில் மீதி நின்று வேதகீதம் கிளப்பிய புரட்சிக்காரர் ராமானுஜர்.


நாய்களோடு திரிந்த சண்டாளனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட ஆதிசங்கரர் பிராமணரே!


ஆதிதிராவிடர்களைத் தீண்டக் கூடாது என்றிருந்த காலத்தில் திருப்பாணாழ்வார் என்ற ஆதிதிராவிடரை ஸ்ரீரங்கம் பூசுரர்களின் தோள்மீது ஏற்றி கோவிலுக்குள் கொண்டு வந்ததும் அவர்களே!


மேலை நாட்டவரே வியக்கும் சித்தாந்த வேதாந்தங்களையும் ஆக்கியவர்களும் அவர்களே.


வான சாத்திரத்தில் பலநூறு ஆண்டுகளூக்கு முன்பு சீரிய சிந்தனையைப் படைத்தது ஆரியப் பட்டரே! கலைகளில் இலக்கணங்களை வகுத்ததும் பிராமணர்களே! அரசியலில் சாத்திரங்களை இயற்றியதும் அவர்களே! சர்.சி.வி ராமனும் பிராமணனே. கணக்கு மேதை ராமானுஜமும் பிராமணனே!


(செக்ஸி) பால் உறவுகளையும் இலக்கணமாக்கிச் சொன்னதும் வாத்ச்யாயனர் என்ற பிராமணரே!


அண்மைக் காலத்தில் - கம்யூனிசத்தை இந்தியாவில் பரப்பியவர்களும் பிராமணரே!


காந்தியாருடன் பணியாற்றிக் கொண்டே நாத்திகம் பேசிய 'கோரா 'வும் பிராமணரே!


பி.ஆர்.அம்பேத்கார் என்ற புரட்சிக்காரரின் பெயரிலுள்ள 'அம்பேத்கார் ' அவரை ஆதரித்து வளர்த்த பிராமணரின் பெயரே!


காந்தியார் என்ற வைசியரின் மகனுக்குத் தனது திருமகளைத் தந்த பிராமணர்தான் மூதறிஞர் ராஜாஜி.


முதல் உலகப்போரில் இந்தியர்கள் பிரிட்டனுக்கு ஒத்துழைத்தால், யுத்தம் முடிந்த பிறகு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்து, பின்னர் போருக்கு ஒத்துழைத்த இந்தியர்களை ரௌலட் சட்டம் என்ற கடுமையான அடக்கு முறை சட்டம் இயற்றி ஏமாற்றிய வெள்ளைக்காரர்களை ராஜியப் பிரதிநிதி சபையில் கடுமையாக எதிர்த்து வாதிட்டு காந்தியடிகளிடமும் பாராட்டுப் பெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாச சாஸ்திரி பிராமணரே!


தமிழைப் பேணிக் காப்பதிலும் பிராமணர்கள் முன்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்!


தமிழின் முதல் முனியான அகத்தியனே பிராமணன்தான்! தொல்காப்பியரைக் கூட அப்படிக் கூறுவதுண்டு! தமிழின் அழகிய பனுவல்கள் அவர்களால் ஆக்கப்பட்டதுண்டு! வடமொழிக்கு நிகரான தமிழ் இலக்கணங்களை - இலக்கியங்களை ஆக்கிட முனைந்து நின்றவர்களும் அவர்களே!


தமிழனே முதலில் தோன்றிய இனம்; குமரிக் கண்டத்து நாகரீகமே - முதல் நாகரீகம் என்று ஆதாரத்தோடு பேசியவர்கள் ராகவ ஐயங்காரும் சீனிவாச ஐயங்காரும்.


அழிவு நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை ஊர் ஊராக அலைந்து திரிந்து யாசகம் கேட்டு ஓலைச் சுவடிகளைத் திரட்டி எட்டுத் தொகை , பத்துப்பாட்டு என்று இலக்கியங்கள் அனைத்தையும் புத்தகத்தில் அச்சேற்றி தமிழுக்கு பெரும் தொண்டாற்றியவர் உ வே சுவாமிநாத ஐயர் என்ற பிராமணரே. இல்லையேல் இன்றைக்கு தமிழினத்திற்க்கே தாம் தான் தலைவன் என்று கிரயப் பத்திரம் காட்டுபவர்களும், புலியை முறத்தால் அடித்த பெண்மனி பற்றி வாய்கிழிய வீரம் பேசி கூடவே பிராமண எதிர்ப்பும் பேசும் வாய்ச் சொல் வீரர்களுக்கு தமிழ் வீரம் பேச புறநானூறு ஏது?.



தமிழ் சினிமாவில் பிராமணர்கள்-பாகம் 2


சமஸ்கிருதம் கலவாத தனித்தமிழ் இயக்கத்தின் தூண் பரிதிமாற் கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி.


தமிழ்க் கவிதையுலகில் புரட்சி செய்த பாரதியாரும் பிராமணரே! இன்றைக்கும் புதுக்கவிதை என்ற புரட்சியைச் செய்யும் சி.சு.செல்லப்பாவும் பிராமணரே!


காண்டேகரைத் தமிழுக்குத் தந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும், சகல கலா வல்லவராய் இருந்து அகில இந்தியப் பத்திரிகையுலகில் சாதனை புரிந்த கல்கியும் வாசனும் பிராமணர்களே!


வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களைக் காத்து நிற்பவர்களூம் அவர்களே!


வெளிநாட்டுக்குச் சென்றால் அந்த நாகரீகத்தை ஏற்காமல்... நமது நாகரீகம் காத்து, விடாப்பிடியாக வீடுகளில் தமிழ்பேசும் குடும்பங்களும் பிராமணக் குடும்பங்களே!


தமிழில் புரட்சி செய்து - விஞ்ஞானக் கருத்துகளை - புதுமைக் கருத்துகளைத் துணிவுடன் சொல்லிவரும் சுஜாதா போன்றவர்களும் பிராமணர்களே!


முகலாய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் தென்னாட்டில் நுழைய விடாமல் ஹரிஅரபுக்கர்களை உருவாக்கிய வித்யாதரரும் பிராமணரே!


தென்னாட்டுப் போர்க்களங்களில் வீரசாகசம் நிகழ்த்தி - மைசூர் அரசை நடுநடுங்க வைத்த திருமலை நாயக்கரின் படைத் தளபதி ராமப்பையர் பிராமணரே!


வெள்ளையனை எதிர்த்த சுதந்திரப் போரில் (வட நாட்டில்) பிராமண மன்னர்களூம், தளபதிகளும் இருந்தார்கள்.


தென்னாட்டில்... பகத்சிங்குக்கு முன்பு மணியாச்சி ஸ்டேஷனில் வெள்ளைக்காரனைத் துப்பாக்கியால் சுட்ட வீரனான வாஞ்சிநாதன் - பிராமணனே!


வெள்ளையரை கிடுகிடுக்க வைத்த ஆயுதப் புரட்சியைத் தமிழகத்தில் நிகழ்த்தியவர் வ.வே.சு. அய்யர்.


திருப்பூர் குமரனின் குருவாய் இருந்து போலீஸ் தடியடிக்கு ஆளாகி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்புகளில் முறிவு ஏற்பட்ட திருப்பூர் பி.எஸ். சுந்தரம் பிராமணரே.


1938 இந்தி எதிர்ப்புப் போரில் துணிவாக ஈடுபட்டவர் சி.வி.ராஜகோபாலாச்சாரியார்!


1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தமது போலீஸ் வேலையைத் தூக்கி எறிந்த போலீஸ் வெ.கண்ணனும் பிராமணரே!


இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்து வீரப்பதக்கம் பெற்ற தமிழர்களில் பலர் - செங்கற்பட்டு சென்னை மாவட்டங்களைச் சார்ந்த பிராமணர்களே!


இப்போதும் மார்வாடிகளை எதிர்த்து - வட்டி வாங்குவதை எதிர்த்து சிறை புகுந்து கடுமையான வீரப்போர் நிகழ்த்துகின்ற மாவீரன் எம்.கே. சீனிவாசனும் பிராமணரே!


இதுமட்டுமில்லை; நவீன - மார்டன் துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். புதிய பாஷன்களை, புதிய டிசைன்களை விரும்பி ஏற்பதும் பிராமணர்களே!


மீசை வைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதம்; ஆனால் மீசையோடு தாடியும் வைத்து அழகாகப் பவனி வருபவர்கள் பிராமணர்கள்!


மடிசார் அதிகமாக இல்லை; மேக்சி - பெல்பாட்டம் - ஜீன்ஸ்தான் அதிகம்!


உடையில் - உணவில் - பழக்கவழக்கத்தில் மட்டுமில்லாமல் மன ஒப்பனையிலும் (மெண்டல் மேக்கப்) அவர்களுக்கு பழைய பஞ்சாங்கத் திமிர்த்தனம் கிடையாது! மேல்மதிப்பு என்ற மமதை இல்லை!


இந்தியாவின் அண்டை நாடுகளைக் கூட அதட்டி வைத்திருந்த இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி கூட பிராமணப் பெண் தானே!

அயோக்கிய அரசியல் வாதிகளையெல்லா ஆடிப்போகச் செய்து, தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறது, அதற்கு இத்தனை வலிமை இருக்கிறது என்று வெளிப்படுத்திய தைரியசாலி டி என் சேஷன் ஒரு பிராமணர்.

ஏன் இன்று கூட சமூகத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக தன்னந்தனி ஆளாக யாருக்கும் பயப்படாமல் அநீதிக்கு எதிராக நீதிமன்றம் போய் போராடி அரசாங்கத்தையே அவர் சொல்வதைப் போல் செயல்பட வைக்கும் டிராபிக் இராமசாமி ஒரு பிராமணரே. பிராமணர் என்றால் கோழைகளென்று காதில் பூசுற்றும் தமிழ் சினிமா சமூகம் இந்த தைரியமுள்ள பிராமணரை கதாநாயகனாகக் கொண்டு படம் எடுக்குமா?


ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டாலே பத்திரிக்கை அலுவலகம் புகுந்து அங்குள்ளவர்களை கொலை செய்து விடும் அரக்கர்கள் வாழும் அரசியலில், சமூக நீதிக்கு தவறான காரியங்கள் நடத்தப்படும் போது அவற்றை இன்றளவும் சிறிதும் பயமில்லாமல் பத்திரிக்கையில் கண்டிப்பதும் உண்மைகளை வெளிப்படுதுவதும் ஒரு கடமையாகவே செய்து கொண்டிருக்கும் துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி ஒரு பிராமணரே!


இப்படி சமூகத்தில் எல்லா திசைகளிலும் தமிழருடன் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்றி தமிழனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பிராமணர்களை இன்னும் எத்தனைக் காலம் தான் அவமதித்து மிதித்து நடப்பார்களோ இந்த பார்ப்பன எதிர்ப்பு வீரர்கள்!.

பகுத்தறிவு என்ற பெயரைச்சொல்லி தமிழர்களை அடி முட்டாள்களாக மாற்றி ஐம்பது வருடம் ஆகி விட்டது. இன்னும் எத்தனைக் காலம் தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே?! இந்த நாட்டிலே! தமிழ் நாட்டிலே....?????

4 comments:

ravichandran said...

ithai pondra unmaikalai innum eluthvum.nandraaka irukkirathu

Anonymous said...

Dear Friend,

Its good to know about Brahmins.

The day will come every one will understand their
abilities.

Adirai Thanga Selvarajan

Balaji said...

Dear Friend, I agree that Brahmins have done an excellent job in almost all areas. But the question to be asked is, as per Varnashrama Dharma, a Brahmana is a one who does not do any other job except being a Purohit. Why then have Brahmins done so many other jobs? Had Brahmins restricted themselves to their original job such confusions wouldn't have come. All from Krishna in the Gita to Thiruvalluvar in Thirukkural say this. I am sorry if I have spoken anything wrong. I am myself a Brahmin, these are my own views.

hayyram said...

hi balaji,

//But the question to be asked is, as per Varnashrama Dharma, a Brahmana is a one who does not do any other job except being a Purohit. Why then have Brahmins done so many other jobs? //

வர்னாசிரமம் தர்மம் என்பது, ஒரு கம்பெனியில் நீங்கள் வேலைக்குச் சேர்ந்தால் நீங்கள் அங்கே காண்பது என்ன? மேலாண்மை இயக்குனர், உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் என்று பிரிவுகளைக் கொண்டதான ஒரு அமைப்பாக இருக்கும். அந்தந்தப் பிரிவினர் அவரவர் வேலையைச் செவ்வனே செய்தால் நிறுவனம் நல்ல படியாக நடக்கும். இந்த பிரிவு ஒரு அமைப்பு சீராக நடக்கும் பொருட்டு உண்டானதே. அதே போல ஒரு சமூகம் சீராக நடக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு அதன் வழியில் வாழத்துவங்கினார்கள். பின்னர் அதுவே பிரிவினைகளாகி பின்னர் அதுவே ஏற்றத்தாழ்வுக்கும் வழிவகுத்த அமைப்பாகவும் ஆனது வேறு விஷயம்.

ஒருவன் தச்சனாக இருந்தான் ஒருவன் சிற்பியாக இருந்தான் ஒருவன் ஓதுதலையும் ஓதுவித்தலையும் ஏற்றுச் செய்தான், ஒருவன் விவசாயியாக இருந்தான் ஒருவன் நாவிதன், இவர்களைக் காக்கும் அரசர்கள் ஒரு குலத்தினர் என்று அவரவர்கென்று பணிகளைச் செய்துவந்தனர்.ஒருவரை ஒருவர் ஆதரித்தே வாழ்ந்தும் வந்தனர். அப்படி ஒரு இனத்தவரை மற்றவர் ஆதரித்து வாழவேண்டும் என்பது கடமையாகவும் கருதப்பட்டது.

காலப்போக்கில் எல்லோருடைய பணியும் பொருள் ஈட்டுதலே என்றானது. பிராமனர்கள் பொருள் ஈட்டவும் கூடாது சேர்க்கவும் கூடாது என்பது விதி. ஆனால் பொருள் ஈட்டினால் தான் வாழமுடியும் என்ற சூழல் உண்டானதாலும் ஒருவரை ஒருவர் ஆதரித்து வாழும் கலாச்சாரம் காணாமல் போனதாலும் எல்லோரும் ஏதேனும் பணி செய்து பொருள் ஈட்டுவதே தர்மமாகக் கொண்டு விட்டனர். பிராமணர்கள ஓதுதலையும் ஓதுவித்தலையும் விட்டு வேலை தேடி அமெரிக்கா செல்வதற்கும் இதுவே காரணம்.

மேலும் இந்த வர்ணாசிரமப் பிரிவுகள் ஏற்றத்தாழ்வுக்கான பிரிவினையின் அடையாளங்களாக மட்டுமே காட்சியளிக்கத்துவங்கியது. தொழில் ரீதியாக உண்டான சமூகப் பிரிவுகள் ஜாதிகளின் அடையாளங்களாக மட்டுமே விளங்க, அவர்களுக்கான தொழில் முறைகள் மாறத்துவங்கின. வர்னாசிரம முறை இன்று இல்லை. ஜாதீய ரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஈகோவிற்காக கட்டிக்காக்கப்படுகிறது. பிராமணருக்கும் மற்றவருக்கும் வாழும் முறையில் எந்த வித்தியாசமும் இல்லாததால் பிராமணர்கள் என்று இப்போது யாரும் இல்லை. சிலர் வீடுகளில் இன்றும் பிராமண சம்பிரதாயங்கள் ஓரளவிற்கு கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். வித்தியாசம் அவ்வளவே. ஆகவே இல்லாத வர்னாசிரம தர்மத்தைப் பற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம்.

//I am sorry if I have spoken anything wrong.// பிராமணர்கள் குறித்து கேவலமாக பேசுபவர்கள் மத்தியில் நீங்கள் குண்டூசி அளவு கூட இல்லை. வருந்தவேண்டாம். தொடர்ந்து வாருங்கள். நன்றி.