Wednesday, April 28, 2010

தினமலரின் நேரடி ஒளிபரப்பு!

சித்திரைத் திருநாளின் அற்புத்தத் திருநாளான திரு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை தினமலர் தனது வலைதளத்திலேயே நேரடி ஒளிபரப்பு செய்தது. தொழில் நுட்பத்தை காலத்திற்கேற்ப அற்புதமாக உபயோகப்படுத்தும் நாளிதழாக தினமலர் இருக்கிறது.


ஆனால் இவர்களின் தொழில் திறமையுடன் போட்டி போட முடியாமல் தான், தினமலர் ஒரு பார்ப்பன பத்திரிக்கை என்றும் தமிழர்களுக்கு எதிரான பத்திரகை என்றெல்லாம் சேற்றை வாரிப்பூசுகிறார்கள் தினமலரின் போட்டியாளர்கள் என்றே தோன்றுகிறது. இவ்வளவிற்கும் தமிழகத்தின் நாங்கள் தான் நம்பர் ஒன் பத்திரிக்கை என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் பத்திரிக்கை அப்படியே தினமலரின் செயல் திட்டங்களை காப்பியடிக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக மாணவர்களை ஒருங்கினைத்து ஒவ்வோர் ஊரிலும் தினமலர் நடத்தும் ஜெயித்துக் காட்டுவோமை அப்படியே வேறுபெயரில் காப்பியடிக்கின்றன நம்பர் ஒன் பத்திரிக்கைகள்...



நேரடி ஒளிபரப்பை நன்றாகவே காண்பித்தார்கள். கொஞ்சம் காமெராவை ஆட்டாமல் பிடித்துக்கொண்டிருந்தால் தெளிவாக காணமுடியும் என்பதை படமெடுப்பவர்களிடம் யாராவது சொல்லுங்களேன்!






3 comments:

நீச்சல்காரன் said...

//வலைதளத்திலேயே நேரடி ஒளிபரப்பு செய்தது//
தொழிற்நுட்பத்தின் நல்ல வளர்ச்சி

kutty said...

podanga koyyalay

hayyram said...

வருகைக்கு நன்றி நீச்சல்காரன்.

வருகைக்கு நன்றி குட்டி.