"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.
ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுபவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்பது பற்றி யாராலும் கூற முடியாது. ஏனினெல் அது அராய்ச்சி செய்து விளக்கமுடிவதில்லை. அவை அனுபவத்திற்கு உரியது. அத்தகைய அனுபவத்தை பெறுவதற்கு சுய ஆராய்ச்சி தேவை. அவ்வாறான ஆராய்ச்சியின் காரணமாக நசிகேதன் இங்கே அதுபற்றி கேட்க எமதர்மனும் சிறுவனான நசிகேதனுக்கு சிறந்ததொரு பதிலைக் கொடுக்கிறார்.
"குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த ஆனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்கிறான் நசிகேதன்.
எமதர்மன் கூறுகிறார்! "நசிகேதா! அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன."
ஆன்ம ஒளியைக் காட்ட புற ஒளியால் இயலாது என்கிறார் எமதர்மன். ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. ஆன்ம ஒளியே நாம் புறப்பொருளைக் காணும் விளக்காக இருக்கின்றது. ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் உணர்கிறோம். ஆகையால் சாதகத்தால் ஆன்ம ஒளியை நீ உணர்வாய் என்கிறார் எமதர்மன். எவனொருவன் ஆன்ம ஒளியை காண்கிறானோ அவன் மரண பயத்தை வெல்கிறான்.
மரணத்தை விட கொடியது மரண பயம். ஆனால் அத்தகைய மரண பயத்தை ஒருவன் எப்படி வெல்ல முடியும் என்பதற்கு எமதர்மன் வழி கூறுகிறார். வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் பற்றிய உண்மை நிலையை உணர்பவன் மரண பயத்தை வெல்கிறான் என்கிறார்.
உதாரணமாக ஆற்றங்கரையில் ஒரு அரச மரம் இருப்பதாய்க் கொள்வோம். நாம் அதைப் பார்க்கிறோம். அதன் பிரதிபிம்பம் நீரில் தெரிகிறது. நிலத்தில் வேர்கள் கீழேயும் கிளைகள் மேலேயும் தெரியும், ஆனால் நீரில் அவை தலைகிழாகத் தெரியும். மரம் நீரின் பிரதிபிம்பத்தில் வேர்கள் மேலாகவும் கிளைகள் கீழாகவும் போல! அதாவது வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல. பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம். மரணத்தை துன்பமாகக் காண்கிறோம். அதனைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு துன்பம் என்றும் மரணத்தை இன்பம் என்றும் கூறுகிறார்கள். இதுவே மரம் நீரில் பிரதிபிம்பமாக தலைகீழாக தெரிவதற்கு எடுத்துக்காட்டு.
அதுவே உண்மை எனப்படுகிறது. துறவி மரணத்தை நேசிக்கிறான். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். அது போலவே உலகம் அதன் உறவுகள் அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை நிலையானவை என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இவ்வாறு நாம் காணும் உண்மைக்கு ஒரு தலைகீழ் நிஜம் இருப்பதை, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பிரதிபிம்பமான இன்னொரு கோணம் இருப்பதை நீரில் காணும் மரத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் எமதர்மன்.
"நசிகேதா! இந்த அரச மரம் பழமையானது. மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே!"
"இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பது போல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."
இறைவன் மிகப்பெரிய பிரம்மாண்டத்தன்மை கொண்டவன் என்கிற உண்மையை உணர்வதாலேயே இயக்கங்கள் தடங்கலின்றி நடைபெறுகின்றன. பேராற்றலின் சக்தியே பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றது என்பதை விளக்குகிறார் எமதர்மன்.
"நசிகேதா! இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கின்றது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால் தான் தன் தொழிலைச் செய்கின்றன."
இங்கே இறைவன் என்ற பதத்தை மூலப் ப்ருக்ருதி எனக்கொள்ளலாம். அளவிட முடியாத அண்டவெளியும் பிரபஞ்சங்களும் ஒருவித ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டும் ஏதோ ஒரு செலுத்துப் பாதையிலேயே வலம் வந்து கொண்டிருப்பதையும் காணும் போது, இவைகள் எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லையற்ற பரப்பளவையும் அவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர முடிகிறது. ஆகவே அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றலின், கட்டுப்பாட்டின் காரணமாகவே அக்னி எரிக்கின்றது என்றும் சூரியன் சுடுகின்றது என்றும், வாயு அதன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றது என்றும் எமதர்மன் கூறுவதாகக் கொள்ளலாம்.
"இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அவர்களுக்கு அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது" - எமதர்மன்.
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!
விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.
ஆன்மாவை அறிவோம்....
மரணத்திற்கு அப்பால் - 18
5 comments:
your view about nandanaar entrance problem in chidambaram ?
i could not get u? ask detailed!
if u r asking about political issue against chidambaram temple then read this
http://hayyram.blogspot.com/2009/02/blog-post.html
and introduce your self to discuss more. thanks for reading the blog and welcome.
why nandhanar entrance in chidambaram is closed and temple priests refuse to open it ? Even the ever merciful lord shiva has accepted nandhanar but these priests refuse to respect nandhanar's devotion and got 'stay order' from supreme court to reopen the nandhanar's entrance. Is it due to caste discrimination? (some news say that the entrance was open before 1938).
isn't it a disgrace to brahmin community?
Please clarify my doubts.
Your blog is very informative.Keep going.
welcome mr.jaiganesh.
first of all temple concept itself for a social welfare. no one can rule on it, that too if a temple build by a king then it is absolute a public property.
//why nandhanar entrance in chidambaram is closed and temple priests refuse to open it ?//
we don no the exact reason. ஏனெனில் வரலாறு எப்பொழுதும் ஆள்பவர்கள் ஆசைப்படி திருத்தப்படும் என்பது நிதர்சனம். if the temple entrance closed because of caste manner its a bad action.
//Even the ever merciful lord shiva has accepted nandhanar// i love this line. உண்மையில் ஆன்மாவை அறிவதே ஆன்மீகம். அதை அறியும் பொருட்டான வழிபாட்டு முறைகளே கோவிலும் சிலைகளும். அத்தகைய ஆன்மீகத்தை கோவிலுக்கு வருபவர்களுக்கு எடுத்துச் சொல்வதே ப்ராமணர்களின் கடமை. ப்ரம்மத்தை தானும் அறிந்து மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகவே ப்ராமணர்கள் கையில் வழிபாட்டு முறைகளை நடத்திச் செல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதைப் புரிந்து கொள்ளாமல் கோவிலில் ஜாதி பார்ப்பது ஆன்மீகத்திற்கு அழகல்ல.
//isn't it a disgrace to brahmin community?// ஜாதியின் காரணமாக வாசல் மூடப்பட்டிருந்தால் இருந்தால் அது ப்ராமணர்கள் பெருமை கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. வெறுக்கத்தக்க விஷயம்.
Now the temple became totally government control. now they can open the entrance and allow the public from all the entrance. are they do that are still its closed?
ஆனால் சமத்துவம் என்ற போர்வையில் இந்துக்கோவிலில் மட்டும் அட்டகாசம் புரியும் திமுக அரசாங்கம் ஒரு புறம் ஜாதியை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு மறுபுறம் வர்க்க பிரிவினையை கோவிலுக்குள் வளர்க்கிறது. சாமியை பார்க்க டிக்கெட் போட்டு அதிகம் பணம் கொடுத்தால் இன்னும் அருகாமையில் கொஞ்சம் பணம் கொடுத்தால் கொஞ்சம் தூரத்தில் தர்ம தரிசனம் என்றால் கண்ணுக்கெட்டா தூரத்தில் என்றெல்லாம் ரேட் போட்டு கடவுளை வைத்து பொருட்காட்சி நடத்தி வருகிறது. ஏழைகள் நிம்மதியாக சாமி பார்க்க முடியாது என்ற தோற்றத்தை
அரசே உண்டாக்கி வருகிறது. மேலும் கோவில்களுகுள் கடைகள் புற்றீசல் போல முளைக்கச் செய்து இந்துக் கோவில்கள் எல்லாவற்றையும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாக மாற்றி பணம் சம்பாதிப்பதையும் செய்து வருகிறது. சிதம்பரம் கோவிலும் மதுரை மீனாட்ஷி அம்மன் கோவில் போல கூடிய விரைவில் சோப்பு சீப்பு கண்ணாடி விற்கும் ஷாப்பிங் காம்பிளெக்ஸாக உருவெடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவற்றை முற்றிலும் இந்துக் கோவில்களில் இருந்து நீக்க வேண்டும். கோவில் வழிபாட்டிற்கு மட்டுமே வியாபாரத்திற்கு அல்ல என்ற நிலை உண்டாக வேண்டும்.
எது எப்படியோ என்னுடைய சுட்டியில் குறிப்பிட்ட படி அந்த நடவடிக்கைகள் அனைத்தும் ப்ராமண துவேஷம் மற்றும் இந்து துவேஷம் மட்டுமே கொண்டதாக இருந்தால் அது உறுத்தலானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். இந்த விஷயத்தை பொறுத்தவரை எனக்கு சிதம்பரம் கோவிலில் புழங்கும் பணத்தை அரசியல் வாதிகள் கூட்டுக் கொள்ளையடிக்க கிறிஸ்தவ மதமாறிகளோடு கைகோர்த்து ஆடிய நாடமாகவே தோன்றுகிறது. பெயர் மட்டும் சமத்துவத்திற்காக என்று திரிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள். நிறைய பேசுவோம்.
Thank you for your reply!!!
Post a Comment