Wednesday, February 23, 2011

கோத்ரா கொலையும் மௌனங்களும்!



குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தை பெரிது படுத்தி நரேந்திர மோடியை காய்ச்சி எடுக்கும் மீடியாக்கள், சோனியா மொய்னோ, சிதம்பரம் போன்றவர்கள் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அந்தக் கொடூர கொலை பற்றி வாய் திறக்காமல் மௌனவிரதம் அனுஷ்டிக்கத் துவங்கி விட்டனர்.


செய்தி:


**********
ஆமதாபாத், பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில், ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதியே என்று கூறிய ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம், இதில்  தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்ட சம்பவத்தில் 90 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ரயில் எரிக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள். ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட நடத்தப்பட்டது என முதல்வர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் இந்த சம்பவம் தானாக திடீரென நடந்தது என ஆரம்பகட்ட போலீஸ் விசாரணைகள் தெரிவித்தன. 


***************


மேலும் ரயில் திட்டமிட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ரயிலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மிக அதிகளவில் பெட்ரோல் ஊற்றப்பட்டே ரயில் கொளுத்தப்பட்டிருக்கிறது என்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இதனை திட்டமிட்ட கொலை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவை எதுவும் மீடியாக்களுக்கு கொலையாகத் தெரியவில்லை . அதன் எதிர்வினையான கலவரம் மட்டுமே பூதாகரமாக்கப்பட்டு அதைக்கொண்டு அரசியல் நடத்தப்பட்டும் வருகிறது.


காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. தீர்ப்பைப் படித்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்  என்றும் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதன் பிறகு நடந்த கலவரம் தான் முக்கியம் என்றும் நாகூசாமல் பேட்டியளிக்கிறார். இவர்களுக்கு திட்டமிட்ட கொலைபாதகத்தால் இறந்தவர்கள் பற்றி பரிதாபம் கூட இல்லை. 


என் டி டி வி யோ இந்த தீர்ப்பு குறித்து செய்தி வெளியிடும் போது கூட குஜராத் காயங்களுக்கு இந்த தீர்ப்பு மருந்தாகுமா? என்று கலவரத்தை மையப்படுத்தியே செய்தி வெளியிடுகிறது. திட்டமிட்ட ஒரு படுகொலை மதத்தின் பெயரால் நடத்தப்பட்டிருப்பது பற்றி இந்த இந்து விரோத டி வி கவலை கொள்ளவில்லை. மேலும் பர்க்காதத் 63 பேர்களில் 31 பேர்தான் குற்றவாளிகளென்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 32 அப்பாவிகள் இத்தனை வருடம் சிறையில் இருந்தார்களே அவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கேட்குமா என்று வருத்தப்படுகிறார்! ரயில் கொலையில் இறந்து போன 59 நபர்கள் வாழ்க்கை பற்றி வருத்தப்பட்டு பேசாத பர்காதத் 32 அப்பாவிகள் சிறையில் உயிருடனும் நலமுடனும் இருந்ததைப் பற்றி கவலைப்பட்டதை பார்க்கும் போது கண்ணீர் தான் வந்தது!


தனது உன்னைப் போல் ஒருவன் படத்தில் கலவரத்தின் போது கர்பினிப் பெண் ஒருத்தி கருவருக்கப்பட்டதாக உருகி உருகி வசனம் பேசிய கமலஹாசன் ரயிலில் கொடூரமாக திட்டமிட்டு எரிக்கப்பட்ட இந்துக்களுக்காக வசனம் வைக்காதது ஏனோ? 'எத்தனையோ ராமர்களும், கிருஷ்ணர்களும் இருந்தும் யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்றவில்லை என்று எழுதியவர், எத்தனையோ நபிமார்கள் கூட்டமாக இருந்தும் யாரும் ரயில் எரிப்பை தடுக்கவில்லையே, மனிதர்கள் கருகிச்சாவதைத் தடுக்கவில்லையே" என்று வசனம் வைக்காதது ஏனோ? கமலஹாசனுக்கும் இந்துக்கள் இறந்தால் அது விபத்து, பிற இனக்குழு இறந்தால் அது மட்டும் கலவரம் போல?


குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி வருடக்கணக்காக பேசிக்கொண்டிருப்பவர்கள் ரயிலில் திட்டமிட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டவர்களுக்காக இரக்கப்பட்டு கூட பேசாதது ஏன்? 
கொலை செய்தாலும் ஒரு சாரார் அப்பாவிகள், கொலையுண்டு செத்தாலும் இந்துக்கள் பாவிகள் என்கிற மனோநிலையில் இருக்கும் மீடியாக்களிடமிருந்தும், செக்யூலரிச அரசியல் வாதிகளிடமிருந்தும் நடுநிலையான ஞாயத்தை இந்துக்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா?
.

யார் இறந்தாலும் பிரிவினைக்கார அரசியல் வாதிகளுக்கு அள்ள அள்ள (பி)பணம்!

இறந்தவர்களின் ஆத்மா இப்போதாவது சாந்தியடையட்டும்!


.

14 comments:

hayyram said...

//நான் உங்களுடைய பதிவுகளை
சமீபமாய் படித்துக் கொண்டு இருக்கிறேன் ..// எனது நன்றிகள்!

//பாவம் நீங்கள் சினிமா வில் நடிப்பவர் மேல் கோபபடுகிரீர்கள்....// அப்படி இல்லை, கமல் ஒரு முறை உன்னைப் போல் ஒருவன் பற்றி பேசும் போது, தான் காந்தியின் ரசிகன் என்றும் அகிம்சை தான் கோட்சேவை காப்பாற்றியது, கோட்சேவை அடிக்க வந்தவர்களை அஹிம்சாவாதிகள் கைமுஷ்டியால் தடுத்தே காப்பாற்றினார்கள். அப்படி யாரேனும் தடுத்திருந்தால் கூட கலவரத்தில் கர்பினிப்பெண் செத்திருக்க மாட்டாளே என்றெல்லாம் ரொம்பவே விளக்கத்துடன் நீண்ட நேரம் அது பற்றி பேசினார். நான் தெரியாமல் தான் கேட்கிறேன் அதே அஹிம்சையின் பெயரால் ரயில் பெட்டியில் எரிக்க கும்பலாக வந்தவர்களை அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் தடுத்திருக்கலாமே என்பது மட்டும் கமலுக்குத் தோன்றாமல் போனதன் மர்மம் எனக்கு என்னும் புரிபடவே இல்லை! அஹிம்சையைக் கூட ஹிந்துக்களுக்குத் தான் கமல் போதிப்பாரா என்ன? மற்றவர்கள் கொலைசெய்தால் அது மைனாரிட்டிக்கு அளிக்கப்பட்ட சலுகையாக அவர் எடுத்துக்கொள்கிறாரா என்றும் தோன்றியது. அதனால் தான் கமல் ரயில் எரிப்பு விஷயத்தில் கொலையானவர்கள் பற்றி மட்டும் கவலைப்படாமல் இருக்கும் செலக்டிவ் அம்னீஷியா பற்றி சுட்டிக் காட்டினேன்!
ரயிலில் எரிந்தவர்கள் மட்டும் சுகமாக செத்தார்களா என்ன? அதுவும் திட்டமிட்ட படுபாதகக் கொலை தானே.
முதல் கொலைகாரனை செல்லம் கொஞ்சிவிட்டு எதிர்வினை ஆற்றியவனை மட்டும் குற்றவாளியாக்குவது என்ன ஞாயம் என்பதை கமல் போன்றவர்கள்கூட பேச பயப்படும் வினோதம் பற்றி சுட்டிக்காட்ட விரும்பினேன்! அவ்வளவுதான்!

யார் இறந்தாலும் உயிர்பலி துக்கமே! அதையும் குறிப்பிட்டவர்கள் இறப்பு மட்டுமே தமக்கு வலியென பேசும் இவர்களை என்னவென்று சொல்ல!?

Arun Ambie said...

//முதல் கொலைகாரனை செல்லம் கொஞ்சிவிட்டு எதிர்வினை ஆற்றியவனை மட்டும் குற்றவாளியாக்குவது என்ன ஞாயம் //
அதுதான் காந்தியம். மக்களை மழுங்கல்களாய் அலைய விடுகிறது. காந்தி நல்லவர் தான் காந்தீயம் தான் மோசம். (Politically correct statement!!!)

hayyram said...

//காந்தி நல்லவர் தான் காந்தீயம் தான் மோசம்// காந்தீயம் என்பது கொஞ்சம் பரந்த விஷயம். மத சம்பந்தமான அவரது முடிவுகள் தான் இன்றைய குழப்பங்களுக்கு தொடர் காரணமாக தொடர்ந்து விட்டதோ என்று தோன்றுகிறது.

Arun Ambie said...

//மத சம்பந்தமான அவரது முடிவுகள் தான் இன்றைய குழப்பங்களுக்கு தொடர் காரணமாக தொடர்ந்து விட்டதோ என்று தோன்றுகிறது.//
தீமையை எதிர்த்துப் போராடு என்கிற பகவத்கீதையின் bottom lineக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு இது அஹிம்சை என்று பேசிய அவரது பல முடிவுகள் இன்றைய சிக்கல்களுக்கு மூல காரணம். சற்றே அமர்ந்து Root Cause Analysis செய்தால் அவரது கொள்கைகளில் தான் பல சிக்கல்களின் ஆரம்பம் இருக்கும்.

hayyram said...

//தீமையை எதிர்த்துப் போராடு என்கிற பகவத்கீதையின் bottom lineக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு// அந்த விஷயத்தில் நீங்கள் கூறுவது நிஜம் தான்.

எல் கே said...

ராம், நீங்கள் காந்திக்கு அரவிந்தர் எழுதியக் கடிதம் பபடித்தது உண்டா ??

hayyram said...

//நீங்கள் காந்திக்கு அரவிந்தர் எழுதியக் கடிதம் பபடித்தது உண்டா ??// இல்லை எல் கெ அது பற்றி சொல்லுங்களேன்!

எல் கே said...

அவரது உண்ணாவிரதத்தை தீவிரமாக எதிர்த்தார் அரவிந்தர். இப்பொழுது முழுக் கடிதமும் நினைவில் இல்லை. புத்தகத்தை தேடி எடுத்து பதிவாகவோ இல்லை தனி மடலிலோ அனுப்புகிறேன்

எல் கே said...

தேடியது கிடைத்து விட்டது இந்த லிங்கில் பாருங்கள்.

http://theseventhwaves.blogspot.com/2009/03/sri-aurobindo-on-gandhis.html

hayyram said...

ya it was in the said link:-

28th November, 1940
Letters from Kabul and from Ella Maillard; change in attitude to Gabriel; effective representation of Ella. Gandhi's will – or political will was read (brought by Abhaya Deva) distributed to Gandhi Seva Sangh – spoken orally and taken down; after hearing the whole letter Sri Aurobindo said :
Something in him takes delight in suffering for its own sake. Even the prospect of suffering seems to please him though he puts in a lot of ethics with his justification, the fact is that something in him enjoys suffering.
2. Secondly, if he knows that to the British Government 50 Gandhis would not matter – what does he propose then to achieve politically by his fast? He even knows that the British people are not even going to consider the possibility of Ahimsa!
Page – 295
It is the Christian idea that has taken hold of him. Besides he seems to think that after him his theory and creed of non-violence would continue. I don't think so. A few people would be there but anything like a wide scale influence like that of his personality does not seem possible.
+ + +
I don't object to the world-order but I object to Hitler's world order. "Psychology" would remain unpublished so long as the war lasts because I must known whether Hitler goes up or goes down.
All European publications have been stopped on account of the war.
My contribution to the war fund was not my taking part in politics. It was in view of much wider issues which I have spoken of in my letter, – the issues of human culture and individual and national liberty; and as the English are the only race that stand up for it, I support them.
"Justice" – Englishmen won't be acting according to justice, why should they? Which nation acts on the principles of justice? Why should we expect them to fulfill a standard which we ourselves can't satisfy.
Indian problem has been very badly bungled by Jinnah, and Congress and Mahasabha. They have not been able to play their cards well. That is why they are losing the game.
What is justice after all? To the Socialist denial of all property, liquidation of capitalism is justice. To the capitalist something else is justice.
Congress is asking for freedom of expression but it does not give its own members freedom to express their ideas, if they are against their official policy.
Page – 296
Two ways of securing freedoms by force, by revolution – that cannot succeed so long as we have Jinnahs etc. The only other course is compromise. There you have to give and take, – know your opponent. Generally, the English do not want to go to the extreme or to be continuously repressing. After a time they like to come to a compromise. Generally they arrange the bargain in such a way that they gain in the compromise. They want to be respected. They don't like to be called bad.
Fast and Satyagraha changing the heart of the opponent is absurd. What it can do is to exert pressure and secure some concession.
But it can't succeed if it challenges the very existence of the other force. For instance, Gandhi succeeded in settling the labour question because the capitalists did not want to earn public obloquy. So they gave concession to his demands. But suppose instead of some demands of amelioration he had asked them to hand over the mills to the workers then he would not have succeeded.
All the talk of change of heart is absurd. If it changes anything, it may change only the mind – not the heart. The man may not like to face the consequences and so would give in without changing the heart.
The English have also some constitutional mind. So once they give, they don't go back upon their word. They don't want anyone else to walk into India when they walk out of it. They are afraid of that happening if they leave India now. It would certainly mean civil war and any other power can walk into India. They have proclaimed that they would grant Dominion Status which amounts to Independence except one or two matters like defense and foreign affairs.

hayyram said...

அஹிம்சை கொள்கை முழுக்க முழுக்க வெற்றி ஃபார்முலா என்று ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் காந்தியின் மக்கள் ஒருங்கினைப்பு பணியும் வெள்ளையனை உறுதியுடன் எதிர்க்கும் மனப்பாங்கும் உண்மையில் பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம் தான்.

எனக்கு காந்திஜியின் மத விஷயங்களுக்கான அனுகுமுறையில் முரன்பாடுகளும் ஈகோயிஸ்டிக்கான பிடிவாதமும் இந்துக்களுக்கெதிரானதாக அல்லது ஒரு சாராருக்கு மட்டுமே பரிவு காட்டப்பட்டதான தோற்றமும் தென்படுகிறதே அன்றி முழுக்க முழுக்க அவரது உழைப்பையும் அஹிம்சா கொள்கையையும் மறுக்க முடியவில்லை. இப்படி எடுத்துக் கொள்ளலாம்...அஹிம்சை கொள்கை எல்லாரிடத்துலும் எல்லா நேரங்களிலும் செல்லுபடி ஆகாது. சாம, தான பேத தண்டம் போல அஹிம்சையும் ஆயுதமும் நேரத்திற்கு தகுந்தாற்போல பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று! காந்தியார் அதற்கு உடன் படாத பிடிவாதக்காரராக இருந்ததாலேயே நாம் சுபாஷ் தந்திர போஸின் அளப்பறிய வீரத்தை முழுமையாக உணரமுடியாமல் இழந்தோம் என நினைக்கிறேன். சுபாஷ் இந்திய நாணயத்தி்ல் பொறிக்கப்பட வேண்டிய இரண்டாவது முகம்!

எல் கே said...

அவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணினார் . அது நடக்கவில்லையே ? சுபாஷ் ஒரு மாணிக்கம் . நாம் இழந்துவிட்டோம் அவரை

Unknown said...

காந்தி ஒருதலைப்பட்சமாக இந்துக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள போராடும் சமயம் அமைதி காக்குமாறு உன்ன நோன்பை ஆரம்பிப்பார் . இந்துக்கள் கொல்லப்படும் நேரத்தில் வாயை திறந்ததில்லை. ஜவஹர்லால் நேரும் அவ்வாறே . காந்தியை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் சந்தர்ப்பவாதியும் முதுகெலும்பும் இல்லாத கூத்தாடி கமலிடம் வேறு எதைப் பார்க்கமுடியும்

Dr.Anburaj said...

நாம் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் நம்மை காபீர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்று பழித்துக் கொண்டிருக்கும் அரேபிய கிறிஸ்தவ காடையா்களால் ஆளப்பட்டோம் என்பதை மறந்து விடக்கூடாது. நமது இரத்தத்தில் அடிமைத்தனம் வோ்விட்டுள்ளது. கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதில் இறந்தவர்கள் இந்துக்கள் எனவே அவர்கள் குறித்து அக்கறை கொள்பவா்கள் மனதில் சில கேள்விகள் எழ வேண்டும். 1.ரயில் பெட்டியை தீகொளுத்தியவர்கள் ஏன் கொளுத்தினாா்கள் 2. 62 பேர்களை கொளுத்தும் அளவிற்கு அவர்கள் என்ன தவறைச் செய்து விட்டார்கள் 3. கொளுத்தியவர்கள் அனைவரும் ஒரு மதத்தவர்கள் -அரேபிய மதமாயிருப்பது ஏன் ? 4. 62 பேர்களை உயிரோடு துடிக்கத்துடிக்கக் கொல்லும் மனக் கொடுமை அவர்கள் மனதில் உருவாவதற்கு என்ன காரணம் 5.காலைகாரர்களை இயக்கிய தத்துவம் என்ன 6. குரான் மற்றும் முகம்மது என்ன அரேபிய வல்லாதிக்க வாதியின் போதனைதானே ? 6.ரயில் பெட்டி தீயை அணைக்க வந்த தீயணைப்பு படை லாரியை ரயில் நிலையத்திற்கள் நுழையவிடாமல் தடுத்தவர்கள்களின் மதம் என்ன - அரேபிய மதம் மாயிருப்பதேன் ? என்றெல்லாம் ஒவ்வொரு இந்தியனும் நினைக்க வேண்டும். கோத்ரா சம்பவம் நமக்கு பாடம் புகட்டவில்லை. வரலாற்றிலிருந்து பாடம் கற்காத மடையா்களாக இந்தியர்கள் - இந்துக்கள் இருப்பதுதான் உண்மை. நல்ல கட்டுரை இன்னும் விர்வாக எழுத வேண்டும்.