Thursday, September 8, 2011

மீண்டும் குண்டுவெடிப்பு!




தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொலை செய்து என்ன தான் சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இந்த காங்கிரஸ் அரசும் அதன் உளவுத்துரையும் அது சார்ந்த மந்திரிகளும் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்களோ தெரியாது. தீவிரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தை மதசாயத்தோடு காங்கிரஸ் அனுகுவதாலேயே இவர்களால் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புக்களை தடுக்க முடியவில்லை என்று நன்றாகத் தெரிகிறது!

சரி குண்டு வெடித்தாகி விட்டது. சில அப்பாவிகளும் இறந்துவிட்டார்கள். அடுத்தது சோனியா அரசு என்ன செய்யும்?

ஒரு கற்பனை!


பிரதமர்: இது துரதிஷ்டவசமானது. கோழைத்தனமானது. எங்களை இப்படி எல்லாம் மிரட்டி விட வேண்டும் என எண்ணுபவர்களின் சிந்தனை பலிக்காது. எத்தனை முறை குண்டு வெடித்தாலும் நாங்கள் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்!

சோனியா: இப்படி மனிதாபிமானம் அற்ற செயலைச் செய்பவர்களை வன்மையாக தண்டிக்க வேண்டும். குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராகுல்: முஸ்லீம் அமைப்புகள் தீவிரவாத செயல்கள் செய்வதுகூட பரவாயில்லை. ஆனால் ஹிந்து அமைப்புகளின் எழுச்சிதான் கவலை கொள்ளச் செய்கிறது.

ப.சிதம்பரம்: இது அந்நிய நாட்டு சக்திகளின் வேலையாக இருக்கலாம். உளவுத்துறை எச்சரிக்கத் தவறிவிட்டது. ஆனால் உளவுத்துறையின் தவறு அல்ல. ஏனென்றால் உளவுத்துறைக்கே தெரியாமல் குண்டு வைத்து விட்டார்கள். இது போன்ற குண்டு வெடிப்பை நடக்கவிடாமல் கண்காணிப்பது அந்த மாநில முதல்வரின் வேலை. குண்டு வெடிப்பு நடந்துமுடிந்து விட்டபடியால் இந்தியா முழுவது அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்களை பஸ் ரயில் பிடிக்கவிடாமல் தொடர்ந்து சோதனை போட்டு படுத்துமாறு உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். அடுத்த குண்டு வெடிப்பிற்கு முன்பாக சோதனையை நிறுத்தி விடுவோம்! தீவிரவாதிகள் என்ன செய்கிறார்கள் என்று என் ஒருவனால் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆதலால் மக்கள் தான் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கோஷ்டிகள்: ஆர் எஸ் எஸிர்க்கு தொடர்பு இருக்கிறதா என பார்க்க விசாரிக்க வேண்டும். 

அத்வானி: தீவிரவாதத்தை தடுக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

மக்கள்: போங்கடா பொசக்கெட்ட பயலுகலா... குண்டு வெக்கிறவன் இந்த அரசியல் வாதிங்க வீடா பாத்து வெச்சாதாண்டா இவனுகளுக்கு பயம் வரும். அதுவரைக்கும் இப்டிதாண்டா பேசிக்கிட்டே இருப்பானுவ!

தீவிர வாதிகள்: அடுத்த குண்டுவெடிப்பு அட்டவனை:

செப்டம்பர் 25: ஹைதராபாத் 

அக்டோபர் 10 : வாரனாசி....

(திட்டமிட்டபடி மீண்டும் குண்டு வெடிக்கிறது...மீண்டும் அதே அறிக்கைகள்...அடப்போங்கய்யா..)

....

3 comments:

kargil Jay said...

very good..

delay pannalainna podhu janam action edukkalaingarathai nambaathu

Madhusudhanan D said...

It is not IB's failure. If it had got information it would have taken action. It is the mistake of terrorist to plan the attack secretly. They should have published in newspaper and given advertisements well in advance, so that IB can give the details before the attack.

RAJA said...

நல்ல கற்பனையாக இருந்தாலும் இது தான் உண்மை. நாட்டுநடப்பை தெளிவாக கூறிவிட்டீர்கள்.