Friday, September 2, 2011

கீதோபதேசம் - நீ யோகியாக இரு!






அர்ஜுனன் கேட்கிறான்:

ஹே கிருஷ்ணா! யோகத்தில் நம்பிக்கை உடையவன், நிலை பெறாமல் அலையும் மனம் காரணமாக முயற்சி குறைவினால் யோகத்தில் பூரண நிலையை எட்டாவிடில் அவன் என்ன கதியை அடைகிறான்?

கண்ணா! உறுதியான நிலை இல்லாமல் பிரம்ம மார்க்கத்திலிருந்து நழுவியவன், இரண்டு வழிகளிலும் வீழ்ச்சியடைந்து சிதறிய மேகத்தைப் போல் அழிந்து போகிறான் அல்லவா?

இந்த சந்தேகத்தை நீ முற்றிலும் தீர்த்து வைக்க வேண்டும். உன்னைத் தவிர வேறு யாராலும் இந்த சந்தேகத்தைத் தீர்க்க முடியாது.


பகவான் சொல்கிறார்:-

அர்ஜுனா! அவனுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அழிவு கிடையாது.  'உண்மையில் நற்காரியங்களைச் செய்யும் எவரும் எப்பொழுதும் துன்பம் அடைய மாட்டார்கள்.'

பார்த்தா! யோகத்திலிருந்து வீழ்ச்சி அடைந்த ஒருவன் நல்வினை செய்தவர்களுடைய உலகங்களை அடைந்து அங்கு நீண்ட காலம் இருந்து பிறகு தரும நெறியுள்ள ஆன்மாக்களின் தூய்மையும், செல்வமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் மறுபடியும் பிறப்பான்.

அல்லது அவன் ஞானவானாகிய யோகி ஒருவரின் வீட்டில் பிறப்பான், உண்மையில் இவ்வுலகில் இம்மாதிரியான ஒரு பிறவி கிடைப்பது மிகவும் கடினமானது.

அர்ஜுனா! அவனுக்கு முற்பிறவியில் பெற்ற ஞானத்தோடு தொடர்பு ஏற்படுவதால் பக்குவநிலை அடைய இப்பொழுது வெகு தீவிரமாக முயற்சி செய்கிறான்.

முற்பிறவியில் அவன் செய்த பயிற்சியின் காரணமாக, அவன் தன்னை அறியாமலேயே அதிக தீவிரத்துடன் பயிற்சியை மேற்கொள்ளுகிறான். யோகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே இருந்தாலும், வேதம் சொல்லும் கர்ம பலனைக் கடந்தவன்
ஆகிறான்.

பார்த்தா! உறுதியுடன் விடாமுயற்சி செய்துவரும் யோகி, பாபங்கள் நீங்கித்
தூய்மை பெற்று, ஒவ்வொரு பிறவியிலும், படிப்படியாகப் ப் அக்குவம் அடைந்து மேலான இலட்சியத்தை அடைகிறான்.

தவங்கள் புரிந்தவனை விட யோகியே மேலானவன், கல்வி ஞானம் உடையவர்களை விட அவன் மேலானவனாகக் கருதப்படுகிறான்.

செயலில் ஈடுபடுபவர்களை விடவும் யோகி மேலானவன்.

எனவே அர்ஜுனா! நீ ஒரு யோகியாக இரு!

எல்லா யோகிகளுக்குள்ளும், எவன் ஒருவன் முழு நம்பிக்கையுடன் என்னிடம் முழு மனத்தையும் வைத்து, என்னிடமே லெயித்து என்னை வழிபடுகிறானோ, அவனையே நான் மிகச் சிறந்த யோகிகாகக் கருதுகிறேன்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.


.

2 comments:

Parthasarathy said...

Thought of sharing this...

http://balhanuman.wordpress.com/2010/06/28/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F/

hayyram said...

i read it already partha! generally people are like that only as peaceful. whenever they are influenced by jihadi type group then only the problem starts as they hv done against sania mirza.