Wednesday, May 23, 2012

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!

அழிவில் இருந்த பழங்கால தமிழோலைச் சுவடிகளைத் தேடிப்பிடித்து அச்சிலேற்றி தமிழை வாழவைத்த தமிழ்த் தாத்தா உ. வெ. சுவாமிநாத அய்யர்!

ப்ராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பொய்ப் ப்ரசாரங்களைப் பரப்பி தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றிய வரலாறுகளையே மறைத்துவிடுகின்றனர். ஆனால் தமிழ் வளர்த்த ப்ராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா! அதனால் இங்கே ஒரு சிறு பகிர்வு!

பைந்தமிழ் வளர்த்த ப்ராமணர்கள்!


சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

 பாரதியார்!
(ப்ராமணர் என்பதாலேயே இவர் புகழை மறைத்தாலும் தமிழ் மூலம் உலகெங்கும் ஒலிக்கிறார், என்றும் ஒலிப்பார், ஒளிர்கிறார்)



10 comments:

Arun Ambie said...

அருமையான தொகுப்பு. இந்தப் பெயர்களில் ஓரிருவரைத்தவிர பிறர் இருட்டடிப்புச் செய்யப்பட்டு அஞ்சுகத்தம்மாள் பெற்ற மகன் வள்ளூவர் என்பது போலவும், தர்மாம்பாள் பெற்ற மகள் நச்சள்ளை என்பது போலவும் படம் காட்ட முற்பட்டது திருக்குவளை முத்துவேல் கருணாநிதி (திமுக) அரசு கொணர்ந்த சமச்சீர் கல்வி. அதை அதிமுக அரசு மாற்ற முயன்றது தவறு என்று வாதிப்போரை வையத்து வாழ வகையற்றோர் என்று வையத்தான் மனம் வருகிறது.

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்பி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பயனுள்ள அரிய தகவல்களைத் தொகுத்து அளித்துள்ளது மிகவும் பாராட்டத் தக்கது. நன்றி.

hayyram said...

நன்றி கோபாலகிருஷ்ணன் அவர்களே!

gujjan said...

superb!!!

gujjan said...

இந்த பட்டியலைப் பாருங்கள் ... 72 பேர்... இவ்வளவு பேர் இருக்க தமிழ்மொழிக் காவலர்கள் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திராவிட புரட்டுவாதிகள் கண்களுக்குத் தெரியாமல் போனதேன்?? ஏனெனில் அவர்கள் புரட்டு வாதிகள். அதுதான் காரணம்..

இதில் இன்னும் கொடுமை பார்தியை அவர் சாதி அடையாளத்தை வைத்து சிறுமைபடுத்தும் செயல்.. அன்று பெரியாரிலிருந்து அண்மையில் மதிமாறன் வரை இதில் அடக்கம்.. தமிழ் ஹிந்து இணையதளம் மதிமாறனின் கட்டுரைக்கு தனது மறுப்பை சீரிய தெளிவான வழியில் மீண்டும் யாரும் விவாதிக்க இடம் கொடுக்காத வண்ணம் எழுதி வருவது ஒரு ஆறுதல்....


சாதி அடையாளத்தை வைத்து சிறுமை படுத்தப்படும் பிராமணர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப அரசியல்வாதிகளுக்கும், வாசகர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எழுதும் எழுத்தாளர்களுக்கும் தற்போது தேவையில்லை... இதில் எழுத்தாளர் ஜெயமோகனும் அடக்கம்.. சோ பற்றியும் காஞ்சி பெரியவர் பற்றியும் அவரது வலைப்பதிவில் வெளியிட்ட கருத்துக்களே அதனை படம் பிடித்துக் காட்டும்...

அதிலும் காஞ்சி பெரியவர் பற்றிய கருத்து தவறு என பலர் சுட்டிக்காண்பித்தும் "நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என்பது போல நான் அப்போதே சொல்லிவிட்டேனே இப்போதே சொல்லிவிட்டேனே, அவராகப் போய் பார்த்தது இரண்டு பேரைத்தான் என்று தவறை மறைக்க சமாளிக்கும் முயற்சிகள் வேறு

hayyram said...

///அதிலும் காஞ்சி பெரியவர் பற்றிய கருத்து தவறு என பலர் சுட்டிக்காண்பித்தும் "நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என்பது போல நான் அப்போதே சொல்லிவிட்டேனே இப்போதே சொல்லிவிட்டேனே, அவராகப் போய் பார்த்தது இரண்டு பேரைத்தான் என்று தவறை மறைக்க சமாளிக்கும் முயற்சிகள் வேறு// அவரது குணத்தை விமர்சித்து நான் எழுதிய மடலுக்கு அவரது பதிலை அவரது தளத்திலேயே பார்த்திருப்பீர்களே! என்ன செய்வது, அறிவு ஜீவி என்கிற போர்வையில் இந்து மதத்தை அவமதிப்பதும் பார்ப்பன எதிர்ப்பு வீரம் காட்டுவதும் தமிழகத்தில் ஒரு பிழைப்பு!

gujjan said...

பாஎத்தேன்... உங்கள் கடிதத்தை சாதி அடையாளத்தை வைத்து மறுப்புரை தெரிவித்தார். ஆனால் உங்கள் கடிதத்தை தவிர வேறு சிலரும் அவருடைய கட்டுரைக்கு மறுப்பு எழுதியுள்ளனர். முதல் ஒரு சில கடிதங்களுக்கு மொக்கை தர்க்கங்கள் தந்தார். கடைசியில் வந்த கடிதத்தை வெறுமனே வலைப்பதிவில் ஏற்றியுள்ளார் (அதற்கு பதிலே சொல்லவில்லை. தான் சொன்னது சரியில்லை என்றும் ஒத்துக் கொள்ளவில்லை)....

காஞ்சி மடத்தில் பல வெளிநாடுகளை மக்கள் அவரை நேரில் சந்தித்துள்ளனர். அப்படி இருக்க காந்தியை சந்தித்த போது காந்தி பிராமணர் இல்லை என்பதனால் அவர் பசு மாட்டை வைத்துக் கொண்டு சந்தித்தார் என்கிறார் ஜெயமோகன். நம்ப முடிகிறதா?

அப்படியென்றால் வெளிநாட்டு மக்களையெல்லாம் மடத்தில் சந்திக்கும் போது ஏன் அவர் பசு மாட்டை வைத்துக்கொள்ளவில்லை? உடனே வெளிநாட்டுக்காரன் என்பதால் பல்லிளித்து விட்டு விட்டார் என்றோ அல்லது நன்கொடை அதிகமாக கொடுத்திருப்பார்கள் அதனால் விட்டுவிட்டார் என்று அசிங்கமாக ஏதாவது சொல்வார்கள்..

அவரை சந்தித்தது பெரும்பாலும் மத மற்று மொழி ஆராய்ச்சி துறையில் இருந்த வெளிநாட்டு மாணவர்கள் தான். அவர்கள் மொழி மற்றும் மதம் குறித்த சில தகவல்களை பெறத்தான் வந்தார்கள்...

Ramanan.K said...

வேதாந்த தேசிகர்(சுவாமி தேசிகர்) தேசிகப்பிரபந்தம் எழுதியிருக்கிறார்.

Ramanan.K said...

சுந்தரமூர்த்தி நாயனாரும் கச்சியப்ப சிவாச்சாரியாரும் ஆதிசைவ சிவாச்சாரியார்கள்(சிவப் பிராமணர்கள்).