என் கூட ஐஸ் க்ரீம் சாப்டரீங்களா!
ஒரு காட்டுப் பகுதியில் குரங்கு ஒன்று வெகுநாட்களாக வசித்து வந்தது. அது மிகவும் சேட்டைக்கார குரங்காக இருந்தது. பின் விளைவுகளை எண்ணாமல் மிகுந்த குரும்புத்தனம் செய்யும் குரங்காக இருந்தது.
அந்த குரங்கு வசித்த மரத்தடியில் ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்குள் இருந்தது அவன் குடிசை. மரங்களை வேட்டிவருவது, கோடரியால் பிளப்பது, துண்டுகளாக்கி பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்துவது என அவனது அன்றாட வேலை. அன்று அப்படித்தான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். களைப்பு வந்து அடிமரத்தைப் பாதியளவு பிளந்திருந்த அப்பிளவுக்கு இடையில் ஒரு மரச்சக்கையை (ஆப்பு) வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
விறகு வெட்டியின் செயலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்த குரங்கு அவன் சென்றவுடன் கீழே இறங்கி வந்தது.
விறகு வெட்டி விட்டுச் சென்ற மரத்துண்டின் மீதேறி பிளவுப்பட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் அமர்ந்து கொண்டது. தனது வால் மரத்துண்டின் பிளவில் இருப்பதை அது அறியவில்லை. பின் தனது குறும்பு வேலையைச் செய்ய ஆரம்பித்தது. ஆப்பாக செருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது.
திடீரென்று அந்த ஆப்புத்துண்டு குரங்கின் கையோடு வந்துவிட்டது. உடனே பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது. பிளவுக்குள் தொங்கியிருந்த வால் நசுங்க குரங்கு அலறியது. ஓய்வாக உள்ளே இருந்த மரவெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் குரங்கு வலி தாங்காமல் பரிதாபமாக மாண்டு போனது.
பாடம்: 'பின்' விளைவுகளை ஆராயாமல் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.
நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.
ஆட்ரா ராமா! ஆட்ரா ராமா!
எவ்வளவு நேரந்தாண்டா என்ன ஆடச்சொல்லுவ!
6 comments:
நல்ல கருத்துள்ள கதை. 'சமஸ்க்ருத' வகுப்பில் ஆசிரியர் நடத்திய நாட்கள் ஞாபகம் வருகிறது.
ஓரத்தில் உள்ள படமும் கேள்வியும் நல்லாயிருக்கு!
அப்படியே இந்து சாமியார்கள் இனி என்ன என்ன ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு ஒரு படம் போடுங்க!
இப்போதெல்லாம் ஆப்பில் மாட்டுவது மனித சாமியார்கள் தான்!
//அப்படியே இந்து சாமியார்கள் இனி என்ன என்ன ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு ஒரு படம் போடுங்க!//
அதுக்குதான் நீங்க இருக்கீங்களே நண்பா!
நன்றி மாதவன்
ஆப்பசைத்த குரங்கின் நிலையில் இன்று நான் பார்ப்பது :
கலைஞர் கையில் தமிழகம்...
Post a Comment