சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவு வியாதிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு இந்து மதத்தை மட்டும் அவமதிப்பதில் அளவில்லாத பிரியம் கொண்டவர்களை சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவின் மூலம் சாடியதன் சாரத்தைப் பார்ப்போம்.
சென்னையில் நடந்த ஒரு சொற்ப்பொழிவின் போது சுவாமி விவேகானந்தர் இவ்வாறு உரையாற்றுகிறார் "சிறுவர்களே, மீசைமுளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச்
செல்லாத நீங்கள் தைரியத்தோடு எழுந்து நின்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் (அந்தக்காலத்தில்) முதுகில் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்கு, சட்டத்தை அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களைக் கட்டளையிடுகிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லை. அத்தகையத் தெய்வ நிந்தனையிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியப் பாடத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
புனிதமற்ற சிறுவர்களே, நீங்கள் வெறுமனே தாளில் சில வரிகளை எழுதி அதை வெளியிட சில முட்டள்களைக் கண்டுபிடித்து வெளியிடுவதாலேயே நீங்கள் இந்த உலகத்தின் கல்வி கற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் தான் இந்தியாவின் பொதுமக்களின் கருத்து என்று நினைக்கின்றீர்களா?
நீங்கள் தான் இந்தியாவின் சீர்திருத்தக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா? இந்தியாவில் எந்தக் காலத்திலாவது சீர்திருத்தக்காரர்கள் இல்லாமல் இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? சங்கரர் யார்? ராமானுஜர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்? தாது யார்? ஒளிமிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள் போல் ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த மகத்தான ஆச்சாரியர்கள் எல்லாம் யார்?
ராமானுஜர் தாழ்ந்த குலத்தவர்களுக்காக வேதனைப் படவில்லையா? தன் வாழ்நாள் முழுவதும் பறையனைக் கூட வைணவ சமயத்தில் அனுமதிக்கப் பாடுபடவில்லையா? தன்னுடைய சமயத்தில் முகமதியர்களைச் சேர்த்துக்கொள்ள அவர் முயலவில்லையா? இந்துக்களோடும் முகமதியர்களோடும் உறவாடி ஒரு புதிய நிலையைக் கொண்டுவர நானக் முயலவில்லையா? அவர்கள் எல்லாம் முயன்றார்கள் அவர்களுடைய பணி இன்னும் நடந்து கொண்டே தானிருக்கிறது. வித்தியாசம் இது தான். அவர்கள் இன்றையச் சீர்திருத்தக்காரர்களைப் போல எக்காளமிடவில்லை. இன்றையச் சீர்திருத்தக் காரர்கள் போல் அவர்களின் வாய்களில் சாபமே இல்லை. அவர்கள் யாரையும் இழிவு படுத்திப் பேசியதில்லை.
அவர்களுடைய உதடுகள் வாழ்த்துக்களை மட்டுமே கூறின. அவர்கள் எந்தக் காலத்திலும் நிந்திக்கவில்லை. அவர்கள் மக்களிடம் "இந்துக்களே, நீங்கள் இதுவரை செய்தவை எல்லாம் நல்லதே. ஆனால் என் சகோதரர்களே, அதை விட நல்லதை நாம் செய்வோம்" என்றே கூறினர். இன்றைய சீர்திருத்தக்காரர்களைப் போல் "நீங்கள் எல்லாம் கெட்டுப் போனவர்கள். இப்போது நாம் நல்லவர்களாக முயற்சிப்போம்" என்று சொல்லவில்லை. அவர்கள், "நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். இப்போது மேலும் நல்லவர்களாவோம்" என்றே கூறினார்கள். இதுதான் இரண்டு பேரிடையே அமைந்துள்ள மிகப் பெரிய வித்தியாசம்." என்றார் சுவாமி விவேகானந்தர்.
ராமசாமி நாயக்கர் தோற்றுவித்த இந்து மத ஒவ்வாமையை அது என்னவென்றே ஆராயாமல் அது தான் பகுத்தறிவு என்று மூடநம்பிக்கை கொண்டிருக்கும் தற்க்கால போலி சீர்திருத்தவியாதிகள் இந்த பகுதியப் படித்தால் அல்லது சுவாமி விவேகானந்தரது புத்தகத்தை யாரிடமாவது ஓசிக்கு வாங்கி படித்தாவது கொஞ்சம் உண்மையான பகுத்தறிவு பெறுவர்களா என்று பார்ப்போம்.
9 comments:
Nalla seithi
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Haiku charles
Thanks for the post.
Ramaswamy Naickers chelas garlanded his statue on his birthday.They are incapable of being helped, as they live by deluding themselves. This will help those who need and those who would take good advice.
"கடவுள் இருக்கிறார்" என்பதை பழித்திடும், இன்றைய சமூக சீர்திருத்த வாதிகளுக்கு, "கடவுள் இல்லை" என்ற இவர்களின் கூற்றும் பழிப்பிற்கு உரியதே என்பதை மறந்து விடுகின்றனர். கடவுள் இல்லை என்று நம்புபவர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளை குறை கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
நிலாவை காட்டி அதனை "வா" என்று சொல்லி குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் தாய்மார்களின் நோக்கம், குழந்தைகளை முட்டாள் ஆக்குவதற்காக அல்ல. குழந்தைகளின் நலனுக்காகவே. அது போல, சில கதைகளையும், சம்பரதாயங்களையும் சொல்லி அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு "இந்து மதம்" மிக கடுமையாக போராடி வந்துள்ளது. போராடியும் வருகிறது. ஆனால் இந்த நேற்றைய மழையில் முளைத்த சீர்திருத்த காளான்கள், மற்றவர்களை முட்டாள்கள் ஆக்குவதுடன் அவர்களும் ஏமாந்து போகிறார்கள்.
மிகவும் அருமையான பதிவு தோழரே...
//கடவுள் இருக்கிறார்" என்பதை பழித்திடும், இன்றைய சமூக சீர்திருத்த வாதிகளுக்கு, "கடவுள் இல்லை" என்ற இவர்களின் கூற்றும் பழிப்பிற்கு உரியதே//
மிகச்சரியாகச் சொன்னீர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே!
மிக மிக சிறந்த பகிர்வு ஆசிரியர் அவர்களே,
சுவாமி விவேகனந்தர் போல் ஒரு பகுத்தறிவுவாளர் மற்றும் ஆன்மீகவாதி உண்டா?, நான் அவரை பின்பற்றுகிறேன், இருந்தாலும் அந்த அடிப்படையில் அவரை புகழ வில்லை, உண்மையாக அவருடைய புத்தகங்களை படித்தால் உணர முடியும் உண்மையான பகுத்தறிவு என்றல் என்ன, ஆன்மிகம் என்றல் என்ன, எது ஆன்மிகம் என்று. என் வாழ்கையில் நான் உணர்ந்து படித்த முதல் புத்தகம் கர்ம யோகா, சுவாமி விவேகனந்தர் அவர்களால் எழுதப்பட்டது.
நம் நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஹிந்துக்களை இழிவு படுத்தும் படி பல துண்டு பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்களை நான் பார்த்துள்ளேன், அது மிகவும் தாழ்வான செயல் என்றே கூற வேண்டும். உண்மையான பகுத்தறிவுவாதி யார் மனதையும் புண் பற்றும் வகையில் பேச கூட மாட்டார்கள், அப்படி இருக்கையில் சிலர் மிக இழிவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து எந்த ஒரு பயனும் இல்லாமல் தான் போகிறது மேலும் பொன்னான நேரத்தை வீண் அடிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும், முதலில் எது நாத்திகம் என்று உணர்ந்து, பிறகு அதை பற்றி பேசுங்கள் என்று தான் சொல்கிறேன் தவிர வேறு எதுவும் நான் சொல்ல முயலவில்லை.
கடவுள் இருந்தால் என்ன கவலை, இல்லை என்றல் என்ன கவலை, இல்லை என்பவர்களுக்கு கவலை ஏன் இருக்கு என்பவர்களை பற்றி.
வருக கார்த்திக் பாபு,
//உண்மையான பகுத்தறிவுவாதி யார் மனதையும் புண் பற்றும் வகையில் பேச கூட மாட்டார்கள்,//
ஆனால் பகுத்தறிவாளர்களுக்கு இது பற்றி தெரியாது போலும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
அருமை...
😊super
Post a Comment