ஷொட்டு: மிகத்தெளிவான முடிவை அளித்த மக்களுக்கு
குட்டு: எதிர் கட்சி தகுதியை கூட இழந்த தி மு க விற்கு
பூச்செண்டு: எதிர் கட்சி தலைவராக உயர்ந்த விஜயகாந்திற்கு!
கேள்விக்குறி: ஸ்டாலின் உண்மையிலேயே ஜெயித்தாரா?
மகிழ்ச்சி: விடுதலை சிறுத்தைகளும், பா ம கவும் மண்ணை கவ்வியது!
கேள்வி: கலைஞருக்கு, ஆ ஊ என்றால் பார்பன சதி, ஆரிய சதி என்று ஜாதி பிரிவினையை தூண்டிவிடும் கலைஞரே!, இந்த தேர்தலில் திமுக வை கேவலமாகத் தோற்கடித்தவர்கள் எல்லோருமே பிராமணர்களா?
.
6 comments:
ஆம், நாடாளுமன்றதேர்தலில் சிதம்பரத்திற்கு வெற்றியை கொடுத்தனுப்பியது போல கொள்ளைப்புரம் வழியாகவே ஸ்டாலின் வெற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றே சந்தேகிக்க முடிகிறது.
எப்படியோ இந்த வகையில் ஒரு கேவலமான தோல்வி அவர்களுக்கு கிடைத்ததே நாட்டிற்கு உண்டான நன்மை. அதுவே நல்ல முடிவு.
திருமங்கலம் பார்முலா மாதிரி சிவகங்கை பார்முலா :)
இல்லீங்க இது ஆதிக்க/ஆரிய/பார்ப்பனீய சக்திகளின் கூட்டு சதி :))))
இப்போ ஆரியம் வென்றது அப்டீன்னு அறிக்கை விடாம கம்முன்னு இருக்காரு கருனாநிதி! அவருக்கு தெரியும் இப்பவும் இது மாதிரி பேசினா பிராமணர் அல்லாதவர்களே காரி துப்புவாங்கன்னு!
அட போங்க ராம் நீங்க. இன்னும் நம்ம தமிழ் இணையத்தை புரிஞ்சிகல நீங்க. எத்தனையோ பெற பார்த்துகிட்டு இருக்கேன். படிச்சு அமெரிக்கால இருப்பன், இல்ல இங்க பெரிய உத்தியோகத்தில் இருப்பான். அவனும் இவரை மாதிரிதான் எதுக்கெடுத்தாலும் ஆரியம்/திராவிடம்னு .
அதாவது யாரும் பேசமாட்டாங்கன்னு நான் சொல்லலை. கலைஞர் பேசினா, இந்தாளு எதுக்கெடுத்தாலும் இதைப் பேசறாங்கற எரிச்சல் பலருக்கு இருக்கிறது. அதைப்பற்றிக் கூறினேன். இந்த பார்பன எதிர்ப்பு விஷயத்தில் தமிழர்களிடன் இருவேறு முகங்கள் நான் பார்த்திருக்கிறேன். பொதுவான மனிதர் பற்றி அல்லது விஷயம் பற்றி பலர் நடுவில் பேசும் போது வேறு மாதிரியாக விவாதிப்பார்கள். அதையே ஒரு பிராமணனோடு தனிப்பட்ட முறையில் விவாதிக்கும் போது நீ பாப்பான் தானே அப்படித்தான் பேசுவாய் என்று பிராமணர்களுக்கு எதிராக திரும்பிக்கொள்வார்கள். ஒரே விஷயத்தில் பிராமணர்களிடமும் , பொதுவாகவும் இருவேறு முகமூடிகளுடன் பேசும் மனிதர்கள் தான் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவர்கள் பார்ப்பன எதிர்ப்பு என்கிற ஆழ்மன பதிவை விட்டு வெளியே வர முடியாத மன நோயாளிகள் என்று நினைத்து பரிதாபப்படுவதை தவிற வேறென்ன செய்ய முடியும்.
Post a Comment