Sunday, May 22, 2011

ஆரிய திராவிட மோசடி!

ஆர்யம் திராவிடம் என்கிற இனவாதம் எப்படியெல்லாம் தவறாகப்பரப்பி அது பிரிவினைக்கும் கிறிஸ்தவ மதப்பரப்பிற்கும் பயன் படுத்தப்பட்டது என்பதை மிகவும் அழகாகவும் ஆதாரங்களுடனும் விளக்குகிறார் ஜெயஸ்ரீ சாரனாதன் அவர்கள்.


"’த்ரு’, ‘த்ரா’ என்று ஓட்டம் என்னும் பொருளில் வருகிறது என்று முன்னமே ஆராய்ந்தோம் (பகுதி 51) உயிருக்குப் பயந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்ததால் அவர்கள் திராவிடர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்!

க்ஷத்திரியத்தை விட்டு ஓடி விட்டதால், க்ஷத்திரியத்தை விட்டவனுக்கு திராவிடன் என்று பெயர் என்று மனுஸ்ம்ருதி சொல்லியிருக்கிறது என்றும் நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.
திராவிடர்கள் என்பது இடம் சார்ந்து சொல்லப்படவில்லை.எந்த இடத்தில் இருக்கும் க்ஷத்திரியனும் திராவிடனாகலாம். சரஸ்வதிநதி தீரத்தில் வாழ்ந்த க்ஷத்திரியன் ஒருவன் திராவிடனாகலாம். 
அதற்கும் மேற்கே சிந்து நதிக்கப்பால் இருந்த சிபி நாட்டில் வாழ்ந்த க்ஷத்திரியனும்திராவிடனாகலாம். 
கங்கைக் கரையில் இருந்த க்ஷத்திரியனும் திராவிடனாகலாம். 
விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த க்ஷத்திரியனும் திராவிடனாகலாம். க்ஷத்திரிய சுபாவத்தை விட்ட மக்கள் திராவிடனாகிஇருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஒரு இடம்அல்லது இனம் அல்லது மொழி தொடர்பாக இந்தத் திராவிடன் சொல்லப்படவில்லை.

தமிழ் நாட்டையே எடுத்துக் கொண்டால், வீரத்துக்கு முதலிடம்கொடுத்த நாடு தமிழ் நாடு.அதாவது க்ஷத்திரிய தர்மம் ஓங்கியிருந்த நாடு தமிழ் நாடு.
ஓயாமல் கொல்லன் பட்டறைக்கு வேலை கொடுத்து வந்த நாடு தமிழ்நாடு. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்று இளம்பருவத்திலேயே 
வீரனாக மக்களைக் கொண்ட நாடு தமிழ் நாடு. 
உடல் முழுவதும் விழுப்புண் தாங்கியிருக்க வேண்டும், போரில் வீரமரணம் பெற வேண்டும் என்னும் மிக முக்கிய க்ஷத்திரியக் கொள்கைகள்கொண்டவர்கள் தமிழ் மக்கள். போரில் இறக்காமல், நோய் முதலான வேறு காரணங்களால் இறக்கநேர்ந்தால், இறந்த உடலை வாளால் கீறி அடக்கம் செய்தவர்கள்தமிழர்கள் 
என்பது புறநானூற்றுச் செய்யுள்கள் மூலம் தெரிகிறது.

இதன் மூலம் முழு க்ஷத்திரியர்களாக தமிழ் நாட்டு க்ஷத்திரியர்கள்வாழ்ந்து வந்தனர் என்பது தெரிகிறது.
வட நாட்டில் 7000 ஆண்டுகளுக்கு முன்பே க்ஷத்திரிய சுபாவத்தை விட்டக்ஷத்திரியர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் 1000 ஆண்டுகள் முன்வரையிலும், க்ஷத்திரியத்தை விடாமல் இருந்தவர்கள் தமிழர்கள்.

எனவே திராவிடன் என்ற பேச்சுக்குத் தமிழ் நாட்டில் இடம் இருந்திருக்கவில்லை". 
"ராமர் சேதுப் பாலத்தை இடிக்க வேண்டும் என்று திராவிடவாதிகள் முனைப்பாக இருக்கிறார்களே, அந்த இடத்தின் அடிவாரம் எரிமலை வெடிப்புகள் 
நேரக்கூடிய இடம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கடலடியில் இருக்கும் 
பழுதுபட்ட அடிவாரத்தை, மைனாக மலையும், ராமர் கட்டிய பாலமும், ஒட்டு போட்டு மூடி வைத்தாற்போல காப்பாற்றி வருகிறது."தமிழன் திராவிடனா?
உண்மையை உண்மையாகவே தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் தமிழன் திராவிடனா? என்று கேட்கும் இந்த தளத்திற்கு சென்று கொஞ்சம் படித்துப் பார்த்தால் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.தொடர்புடைய சுட்டி: ஆர்ய திராவிட என்பது இனமல்ல!


.

7 comments:

YUVA said...

I had been reading your blogs for the last 3 days.. still its going on.. I had knowledge on most of the topics except the attacks on Brahmin in Tamil Cinema. Thanks for putting it on words.. Even though we are aware of these, its very very tough to convince friends or anybody for that matter. I had stopped writing in blogs for a long time, because it made me feel somewhat bad, because i was aware of a bad thing happening, but i was not doing anything to stop it. but you are kind of a motivator, you never stopped writing it looks like.. keep it up.. :)

நா.க.மலர்ச்செல்வன் said...

நான் பிராமணன் அல்ல. ஆரிய திராவிட வாதம் தமிழனை பிரித்தாளும் சூழ்ச்சி என அறிவேன்.
ஆனாலும் நெருடலாக உள்ள விடயங்களை பகிரலாமா ?
உங்களுக்கு ஏற்புடையது இல்லையெனில் தயவுசெய்து என் பின்னூட்டத்தை அழித்துவிடவும்
.
ஏன் பிராமணருக்கு தமிழைவிட வடமொழி ( சமசுகிரதம்) அதிக முக்கியத்துவமாக தெரிகிறது. தமிழ் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு இடுவதில் பிராமணர்களுக்கு தயக்கம் ஏன்? பிராமணர்களே வடமொழியை தூக்கி பிடித்து மற்றவர்களையும் அவ்வாறே செய்ய தூண்டியவர்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தமிழ் தாத்தாவையும், பாரதியையும் இழுக்காமல் பதில் பகிர்ந்தால் மகிழ்ச்சி.
தமிழல்லாத வடமொழி ஓசையோடு கூடிய எழுத்தை எழுதியேதீருவேன் என்பதில் தங்களைப்போன்றவருக்கு கிடைபதென்ன ?
(சத்திரியன் - ஷத்திரியன் "ஷா" - தமிழில் இல்லாத எழுதல்லவா !!!)

Unknown said...

ok.Then,why chirstians and muslims put their name in arab and jews because of religious affinity same thing applicable for all.

Arulalan Thiruvenkatachariyar said...

Dear MalarSelvan,

Who Said Bhramins are not entertaining Tamil. Aazhwaars who sung 4000 Hymns on Lord SriManNarayanan are called Dravida Veda. Which is Now a days a Prime Eve in all Vishnu temples. There are so many Aacharyas from Vaishnavam and also Saivism Written so many Poems in Tamil. U can see whenever Perumal Uthsava moorthy comes out side. He will follow Dravida veda not the Sanskrit veda. Only the Sanskrit veda will Follow both.
Learning Other Language apart from Our Mother Toungue is not offense. And Moreover see our Neighbour state Kerla, Karnataka all the peoples are adopted Hindi also their Language. It is not mean they doesnt like their mother Language or they avoided, Even they Show more Love towards their Mother Lanugage.

Unknown said...

Dear MalarSelvan,

I am a Tamil loving brahmin ( I can type faster in English and I hope you are not looking for proof here )
I have often felt sad, angry, etc. at the affinity that Brahmins have for Sanskrit but then SO WHAT ? Are non-brahmins all that scholarly in Tamil ? If a movie portrays (and even makes fun of) Brahmin's affinity for Sanskrit , I don't think the blogger would have a problem with that. Most of us are making a living thanks to English. appuram enna Tamizh patru pathi pEchu ? Finally let me say something to piss you off ...
Brahmins pronounce zha better than others :)

Shiva

Maya Natarajan said...

அக்காலம் தொட்டு மன்னர்களுக்கு பக்கபலமாய் இருந்து தமிழை வளர்த்ததில் அதிகமானோர் பிராம்மணர்களே. பிராம்மணர்கள் தமிழ் மற்றும் சமஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் பெயர் வைக்கிறார்கள். சமஸ்க்ருதமும் மிழும் எப்போது தோன்றியது என்று கூறமுடியாது. மந்திரங்கள் பல ரிஷிகளாலும் ஞானிகளாலும் சொல்லப்பட்டு தொன்று தொட்டு தலைமுறைகளாக வருவது. அதனை காப்பாற்றி வருகிறார்கள். சமஸ்க்ருதத்தில் பேசியுள்ளனர். ஆனால் பேச்சு மொழி தற்போது இல்லை. தமிழும் சமஸ்க்ருதமும் இரண்டு கண்கள்.. மற்றவர்களின் பாரம்பரியத்தை மறப்பது போல் பிராம்மணர்களும் மறக்க வேண்டுமா என்ன?

Maya Natarajan said...

தமிழிலும் மந்திரங்களும், சுலோகங்களும் பிராம்மணர்களது வீட்டில் படிக்கப்படுகிறது. உதாரணம் " அபிராமி அந்தாதி". அர்ச்சனைகளும் மற்ற பூஜா மந்திரங்களும் அதன் இயல்புத்தன்மையை விடுத்து வேறு மொழியால் மாற்றி கூறுவது தவறு. அதன் சப்தமும், அதிர்வலைகளும் மாறும்.. சில இடங்களில் பொருளும் மாறுபடும்.