Tuesday, May 24, 2011

கடவுள் என்கிற சிசிடிவி! - 1

 

சிறு வயதில் தெரியாமல் ஒரு தவறு செய்தாலோ, அல்லது பெற்றோரிடம் பொய்யுரைத்தாலோ தாயோ தந்தையோ நம்மை மிரட்டியிருப்பார்கள். 

"பொய் சொன்னா உம்மாச்சி கன்ணகுத்தும்." 

"சாமி உன்னை எப்பவும் பாத்துக்கிட்டே இருக்கும். தப்பு பண்ணினா சாமியே உன்னை தண்டிச்சிரும்." என்று கூறியிருப்பார்கள்.

அதாவது கடவுள் நம் செயல்களைப் பார்த்துக்கொண்டே இருப்பார் என்றும் நம் செயல்களுக்கான பரிசுகளை அதாவது நன்செயலுக்கு நற்காரியங்களையும் துர்செயலுக்கு தண்டனைகளையும் பரிசாகக் கொடுத்துவிடுவார் என்று கூறுகிறார்கள்.

கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டே இருப்பாரா? முழுநேரமும் நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொண்டே இருப்பது தான் கடவுளின் வேலையா? 

நான் சாப்பிடுகிறேனா? தூங்குகிறேனா? பொய் சொல்கிறேனா? உண்மை சொல்கிறேனா? நேர்மையாக இருக்கிறேனா? துரோகம் செய்கிறேனா?
லஞ்சம் வாங்குகிறேனா? லஞ்சம் கொடுக்கிறேனா?

இப்படி என் வாழ்நாளின் அத்தனை நிகழ்வுகளையும் கடவுள் பார்த்துக் கொண்டே இருப்பாரா?

நான் தவறு செய்தால் அதை குறித்து வைத்துக்கொண்டு உடனே என்னை தண்டித்தும் விடுவாரா?

சரி, அவர் தான் கடவுளாயிற்றே! சர்வ வல்லமை பொருந்திய கடவுளால் இதை செய்ய முடியாதா என்ன? முடியும் என்று நம்பலாம். 

சரி, கடவுள் நாம் செய்யும் தவறுக்கு தண்டனைக கொடுப்பார் ஆனால் இந்த உலகத்தில் நான் மட்டுமா இருக்கிறேன். எத்தனைக் கோடி மனிதர்கள்? தமிழகத்தில், ஆந்திராவில், டெல்லியில், பம்பாயில், சைனாவில், ஜப்பானில், அமெரிக்காவில் எத்தனைக் கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் அத்தனை பேர் தவறுகளையும் கடவுள் பார்த்து அத்தனை பேருக்கும் தண்டனை கொடுத்துவிடுவாரா?

"கொடுப்பார்" என்று மொத்தமாக ஒரே வார்த்தையில் முடித்து விட்டால் கடவுள் என்கிற அபார சக்தியின் மீது நம்முடைய அதீத நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கும். ஆனால் "எப்படி?" என்ற கேள்வி எழுந்தால்..

கடவுள் எங்கே இருந்து எல்லோரையும் பார்க்கிறார்? எங்கே குற்றங்களைப் பதிந்து வைக்கிறார்? தண்டனையை எந்த வழியில் கொடுக்கிறார்? என்ற கேள்விகள் எழுகிறது. 

எல்லோருடைய நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் பார்த்து அதே நேரத்தில் பதிந்து வைக்க கடவுள் விண்ணில் சிசிடிவி கேமிராவா வைத்திருக்கிறார்?

ஆம். ஆனால் அது செயல்படும் விதமும் அதன் சூக்ஷமமும் சுவாரசியமானது. 

சிசிடிவி கேமிராக்கள் எப்படி வேலை செய்கின்றன? ஒரு அலுவலகத்தில், மின்தூக்கியில், நகைக்கடையில், மக்கள் புழங்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கேமிராக்கள் நடக்கும் விஷயங்களை அப்படியே பார்த்துக்கொண்டே இருக்கிறது.

வேறிடத்தில் உள்ள கணிணி அதை அப்படியே பதிந்து வைத்துக்கொள்கிறது.

ஒரு இடத்தில் ஒரு பொருள் களவு போய்விட்டால், உடனே காமிரா மூலமாக கணிணியில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும் விஷயங்களை தட்டிவிட்டால் களவு செய்தவரை காட்டிக்கொடுத்து விடும்.

அதே போலத்தான் கடவுள் என்கிற கேமிராவும் வேலை செய்கிறது. மனிதர்களின் நன்மைதீமைகளை பார்த்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அது எங்கே அவற்றை பதிவு செய்து வைத்துக்கொள்கிறது என்பதிலும் அவை எப்படி வெளியே கொண்டு வரப்படுகின்றன என்பதிலும் தான் சூட்ஷமம் அடங்கி இருக்கிறது.

நம் முன்னோர்களின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. மனோவியல் பற்றிய நுண்ணறிவு வெளிப்படுகிறது. 

அவற்றைப் பார்ப்போம்..



.

4 comments:

Dr Rama Krishnan said...

God does not punish or reward for our actions. We are responsible for our actions, good or bad. This is Karma and it's effects.

hayyram said...

yes.. RK. wait.. till to complete it.

Dr Rama Krishnan said...

Sorry

jaiganesh said...

GOOD... CARRY ON.... :)

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
திருஞானசம்பந்தர்

பொழிப்புரை :
`நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம்` என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
WWW.THEVAARAM.ORG