Sunday, October 28, 2012

வேதம் கூறும் அறிவியல்!


"நமக்கிடையே நடக்கும் இந்தப் புனிதமான உரையாடலைப் படிக்கிறவன் எவனோ, அவன் என்னை ஞான யக்ஞத்தின் மூலம் வழிபட்டவன் ஆவான். இது என் கொள்கை. 

நம்பிக்கையுடன் , இகழாமலும், இதைக் கேட்பவனும் விடுதலை பெற்று நற்செய்கைகள் செய்பவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைகிறார்கள்." - பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் வெறும் திரிக்கப்பட்ட செய்தி! அகழ்வாராய்ச்சி ஆரியர் என்கிற அந்நியப் படையெடுப்பை முற்றிலும் மறுக்கிறது. இதை ஆராய்ச்சி செய்து கூறுபவர்கள் வெள்ளையர்களே. ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் நம்மவர்கள் வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்புவார்கள். பிள்ளையார் முன்னே நின்று தோப்புக்கரம் போடு என்றால் மூட நம்பிக்கை என்பார்கள். அதை வெள்ளையன் வந்து சூப்பர் ப்ரெயின் யோகா என்றால் 'ஆ' வென்று வாய்பிளந்து கேட்பார்கள். இது வரை பார்த்திராதவர்களுக்கு...இதோ வேதம் கூறும் அறிவியல் பற்றி கீழே! 


ஆரியப் படையெடுப்பு கட்டுக்கதை!


பகவான் ஸ்ரீக்ருஷ்னர் உத்தவரிடம் கூறலானார்: "பாக்கியமுள்ள உத்தவரே! இன்றிலிருந்து ஏழாவது நாள் இந்த துவாரகா நகரம் கடலில் மூழ்கி மறைந்து விடும். மிக விரைவில் இங்கு கலி புருஷனும் வந்து விடுவான். கலியில் ஜனங்கள் அதர்மத்தில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். நீ இனிமேல் எல்லா உறவு, சினேகத்தை விட்டு விட்டு என்னிடத்தில் மனதைச் செலுத்தி சம சித்தத்துடன் பூமியில் சஞ்சரிப்பாயாக. இந்த உலகை கண்ணனாகவே பார்ப்பாயாக!" என்றார். 

- ஸ்ரீமத் பாகவதம்!

கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட துவாரகை!



சப்தங்களுக்கு சக்தி உண்டு! அவ்வாறு வடிவமைக்கப்பட்டதே மந்திரங்கள்! 


பகவான், "பார்த்தா! இதை ஒருமனதோடு கேட்டாயா? தனஞ்ஜயா, உனது அறியாமையால் விளைந்த மயக்கம் ஒழிந்ததா?


அர்ஜுனன் சொல்கிறான்! "அச்யுதா, மயக்கம் ஒழிந்தது. உன்னுடைய அருளால் எனக்கு நினைவு வந்துள்ளது. என்னுடைய சந்தேகங்கள் தீர்ந்து விட்டன. நான் உறுதியாக இருக்கிறேன். உன் சொற்படி நடக்கிறேன்"

Sunday, October 21, 2012

பிராமணர்கள் மீதான ஜாதிக்கொடுமை!

நன்றி: சுதேசி

தமிழகத்தில் மட்டும் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு பிராமணர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது. 

நாயுடு ஹால், உம்மிடி பங்காரு செட்டி & சன்ஸ், ஜெயின் பில்டர்ஸ், நல்லி குப்புசாமி செட்டி & சன்ஸ் , தேவர் & சன்ஸ், நாடார் & சன்ஸ், என்று ஜாதிப் பெயரில் இருக்கும் அத்தனை கடைகள் முன்பாகவும் ஏன் இவர்கள் ஆர்பாட்டம் செய்வதில்லை? பிராமணர்களிடம் மட்டும் தான் இவர்களால் வீரம் காட்ட முடியுமா? மற்ற ஜாதியினர் முன்பு நிற்க கூட திராணியற்ற தொடை நடுங்கி ஜென்மங்களா இவர்கள்?

சரி கிரிஸ்டியன் காலேஜ் என்று மத பெயருள்ள இந்த கல்லூரி முன்பாக இவர்கள் போராட தயாரா? பிரிவினையைத் தோற்றுவிக்கும் இந்த மதப் பெயரை அதன் பெயர்பலகையிலிருந்து கரி பூசி அகற்ற தயாராக இருப்பார்களா இந்த பிராமண எதிர்ப்பு வீரர்கள்? ஒரு வேளை ராமசாமி நாயக்கரின் கால் நக்கிகளுக்கு வேறு ஜாதிக்காரர்களின் கடைகளுக்கருகே போனாலே அவர்களது ஆண் தன்மை பரிபோய்விடுமோ என்னவோ?





ஆனால் ஏன் பிராமணர்களை மட்டும் தொடர்ந்து தாக்க வேண்டும்? தமிழகத்தில் பிராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை 50 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ராமசாமி நாயக்கர் என்கிற கன்னடர் தமிழர்களிடையே உண்டாக்கிய பேதத்தின் விளைவால் தொடர்ந்து பிராமணர்கள் மீது மிக கொடூரமான இனதுவேஷம் நடந்து வருகிறது. மேலே காணப்படும் செய்தி அதற்கு சாட்சி. 

"நீ ஏன் ஜாதிப் பெயரை வைத்திருக்கிறாய்?" என்று யாரும் கேட்க முடியாது? காரணம் அந்தக் கேள்வி பிராமணர்களை மட்டுமே நோக்கி கேட்கப் படுகிறது என்பதால்! பிராமணர், ஐயர் என்றெல்லாம் பெயரைப் பார்த்த உடனே ஒரு வித இன வெறுப்பு கொப்பளித்துக் கொட்டப்படுவது தமிழகத்தில் கட்டற்ற முறையில் நடந்து வருகிறது என்றே சொலல் வேண்டும். இந்த மனோவியாதியிலிருந்து தமிழகம் விடுபடாமல் தொடர்ச்சியான சைக்கோ தனத்தில் அமிழ்ந்திருக்கிறது என்பதற்கு இன்னொரு சாட்சி.. ஜனனி ஐயர்!



தமிழகத்தைத் தவிற இந்தியாவில் மற்ற  அனைத்து மாநிலத்திலும் குடும்பப் பெயர் அல்லது தங்கள் ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னல் வைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெயரில் மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது மற்ற விஷயங்கள் அனைத்திலும் எல்லோரும் ஜாதி வெறியோடு நடந்து கொள்ளலாம் என்கிற மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி 'ஐயர்' என்கிற பெயரை 'சர் நேமாக' வைத்துக் கொண்ட காரணத்திற்காக இயக்குனர் கரு பழனியப்பன் ஜனனி ஐயரை கண்டித்தாராம்.

ஒருவர் எப்படி பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமையே, தவிர கரு பழனியப்பன், சொரி முனியப்பன், காரி உமிழப்பன் என்று தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவற்றில் தலையிட எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. அதைக் கண்டிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.


சரி அப்படியே திரு.கரு.பழனியப்பனார் இதைக் கண்டிக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்..ஐஸ்வர்யா ராய், ஷ்ரேயா ரெட்டி, லக்ஷ்மி ராய், காஜல் அகர்வால், சோனியா அகர்வால், மேக்னா நாயுடு, நவ்யா நாயர், அனுஷ்கா ஷெட்டி, சமீரா ரெட்டி, காம்னா ஜெத்மலானி, லக்ஷ்மி மேனன் என்று பலர் ஜாதிப் பெயர்களை சர் நேம்களாகக் கொண்டு நடிக்கும் போதெல்லாம் எங்கே ஓடிப்போய் ஒளிந்து மறைந்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் பெயரில் 'ஐயர்' என்ற அடைமொழியைப் பார்த்த உடன் கரு பழனியப்பனுக்கு வீரம் பொங்கி வந்து விட்டது. உடனே அவர் பலரும் இருக்கும் மேடையில் ஜனனி 'ஐயரை' ஏதோ அவர் ஜாதி வெறி கொண்டவர் என்பது போல சித்தரித்து ஜாதி மோகத்தை கண்டித்தும் பேசி அவமானப்படுத்தி இருக்கிறார் இந்த வீரர். 

வேறு எந்த விதத்திலும் சக மனிதர்களை, நடிகர்களை, நடிகர்களை அவமதிக்க துணியாதவர்கள் 'ஐயர்' என்ற பெயர் கொண்ட ஒருவரைப் பார்த்த உடன் பலர் முன்னிலையில் அவமதிக்கத் துணிகின்றனர். இது பிராமணர்களுக்கு எதிராக அப்பட்டமாக நடக்கும் ஜாதிக் கொடுமை என்பது தவிற வேறில்லை.


சமீபத்தில் பாடகி சின்மயி, சிலர் தொடர்ந்து முக நூல் மற்றும் ட்விட்டரில் தரக்குறைவான முறையில் தன்னைப் பற்றி எழுதுவதாக புகார் தெரிவித்திருந்தார். அந்த அவரது முகநூல் பக்கங்களுக்குச் சென்று பார்க்கும் போதும் , அவருடன் உரையாடியவர்களையும் உரையாடிய விஷயம் மற்றும் முறைகளை பார்க்கும் போது தெளிவாக சின்மயி ஒரு பிராமணப் பெண் என்பதாலேயே தொடுக்கப் பட்ட இழிவான தொடர் தாக்குதலாக உணர முடிந்தது. இது குறித்து சின்மயியின் தாயார் ஒரு நீண்ட பதிவிட்டிருப்பதை சின்மயி தனது முக நூலில் சுட்டிக் காட்டி இருந்தார். பதிவு இங்கே

அப்பதிவில் மிகத் தெளிவாக எந்தளவிற்கு கீழ்தரமான தாக்குதல் இருந்தது என்பதையும் தெரியப்படுத்தி இருப்பதைப் பார்க்கும் போது ப்ராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை இந்தளவிற்கு மோசமான வெறித்தனத்துடன் நடந்து வருவது தெளிவாக தெரியவருகிறது. ஆனால் இத்தகைய கேவலமான வார்த்தைகளைக் கொண்ட ஜாதிக் கொடுமை வேறு ஒருவருக்கு நடந்திருந்தால் இன்று சட்ட சபை விவாதமாகவே கூட ஆகியிருக்கலாம். ஆனால் கீழ்காணும் மிக மோசமான ஜாதித் தாக்குல் மிக வெளிப்படையாக பிராமணர்கள் மீது கேட்பாரில்லாமல் நடந்து வருவது மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கும் விஷயம்! கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி வந்திருப்பதாகக் கூறுகிறார்.

'பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' என்பதாக ஜாதியை வைத்து கொடுமையாக எழுதப்பட்டிருப்பதும், அதோடு நிற்காமல் "இந்த பாப்பார நாயிங்கள சங்கு சங்கா அறுத்து எறியனும் தல" என்றும் கொடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

"Now came the first onslaught. The group that has been trolling Chinmayi for over a year now had a lively conversation of atmost perversion. ‘Karuthu SolraLamo? Modalla indha pappara’ ……’ roadla izhuthupottu rape pannonum’. Next one to give his valuable idea: adhoda ille indha pappara nayingala sangu sanga aruthu eriyanum thala ’ Even before this could subside the next was unleashed."

மிக மோசமான மன வக்கிரத்துடன் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாசகங்கள் ஒரு தருணம் வரும் போது அவ்வழியே செயல்படுத்தப்படமாட்டாது என்பது என்ன நிச்சயம்? பிரபலமான பாடகியே பிராமணராக இருந்ததால் இந்தளவுக்கு ஜாதிக் கொடுமையை அனுபவித்தார் என்றால் சாதாரண பிராமணர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் எந்தளவிற்கு இருக்கும். சின்மயி இதை காவல் துறைகு புகார் கொடுத்ததன் மூலமாக ஆவனப்படுத்தி இருக்கிறார். ஆனால் வேறு பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட வெளிவராத ஜாதிக் கொடுமைகள் எத்தனையோ? இன்னும் எத்தனை விதமான கொடுமைகளுக்கு மேற்கண்ட வக்கிரத்தைப் போல திட்டமிடப்படுமோ

இவ்வளவு மோசமான வகையில் வெளிப்படையாக தமிழகத்தில் ஜாதிக் கொடுமை பிராமணர்கள் மீது ஒரு சிலரால் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற முறையற்ற ஜாதிக் கொடுமையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கன்னட ராமசாமி நாயக்கரால் பிராமண எதிர்ப்பு என்கிற பிரிவினை வாதப் பேச்சால் மூளை சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது கம்யூனிச சித்தாந்தத்த சைக்கோக்களாக இருப்பார்கள். ஆனால் அதன் தாக்கம் பல்வேறு தரப்பு சக மனிதர்களிடமிருந்து வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

இதில் விசித்திரம் என்னவென்றால், இது போன்ற மனநோயாளிகள் ராஜபக்ஷேவைத் திட்டுவதை ஒரு ஃபேஷனாக செய்து வருவார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இன துவேஷத்தை எதிர்த்து இங்கே மேடை போட்டு அல்லது இணைய வழியில் வீராவேசமாகப் பேசுவார்கள். ஆனால் அடுத்த நிமிடமே, ராஜபக்ஷே இலங்கையில் தமிழர்களுக்கெதிராக என்ன செய்தாரோ அதையே பிராமணர்களுக்கெதிராக தமிழகத்தில் செய்துவிட ஆயத்தமாகி விடுகிறார்கள். 

ஜாதிக் கொடுமை, இனரீதியான துவேஷம் போன்றவை எந்த மனிதக் குழுவிற்கு எதிராக நடந்தாலும் அது கண்டிக்கப் பட வேண்டியதே! 

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை பிற ஜாதியினர் மீது நடத்தப்படும் உடல் மற்றும் மனோரீதியான தாக்குதல்களே ஜாதிக்கொடுமைகளாகவும், அதுவே பிராமணர்கள் மீது நடத்தப்பட்டால் அது பகுத்தறிவுப் புரட்சி போலவும் பார்க்கப்படுவது மோசமான ஜாதிக் கொடுமை!

பிராமணர்கள் மீதான இந்த மோசமான தொடர் ஜாதிக் கொடுமை கேட்பாரற்று நீண்டு கொண்டே போவதைப் பார்க்கும் போது, தமிழகத்து ராஜபக்ஷேக்களால் இங்கொரு முள்ளிவாய்க்கால் உருவாக்கப்படுமோ என்கிற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது!!

பிராமணர்களை இழிவு செய்யும் முகமாக 'பார்ப்பான் பாப்பாத்தி' என்று விளிப்பதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்! கீழே ஒருவன் அப்படி விளிப்பதில் இருக்கும் ஜாதிக் கொடுமை வன்மத்தைப் பாருங்கள்..!

Friday, October 19, 2012

பேசும் படம்!

யாரென்று தெரியாவிட்டாலும் இதை வடிவமைத்த அந்த சமூக சேவகருக்கு நன்றி!

Thursday, October 18, 2012

பிறவிக் கடலை கடக்க உடலே ஓடம்!



உத்தவர் கேட்கிறார்.."பரந்தாமா! முக்தியை விரும்புகிறவன் உம்மை எப்படி எந்த ரூபத்தில் தியானிக்க வேண்டும்?

அந்தத் தியான முறையை எனக்கு உபதேசித்தருள வேண்டும்" என்றார்.

பகவான் கூறலானார்.. ப்ரிய உத்தவ! சமமான் ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, கைகளள மடி மீது வைத்து புருவ மத்தியில் பார்வையை நிலை நஅட்டி, ப்ராணாயாமம் ச்எய்து ப்இரணவ சக்தியைப் புருவ மத்தியில் நிலை நாட்ட வேண்டும்.

இவ்வாறு தினந்தோறும் மூன்று வேளைகளிலும் பிரனவ ஜபத்துடன் இராணாயாமத்தைப் பத்து முறை செய்து வந்தால் ஒரு மாத காலத்தில் மனம் அடங்கி சுவாசத்தை வெற்றி கொள்ளலாம். அப்பொழுது எட்டு இதழ்களும், கர்ணிகையும் கொண்ட இதயத் தாமரையை மேல் நோக்கி மலர்ந்திருப்பதாக பாவித்து அங்கே சூரியன் சந்திரன், அக்னி இவைகளை முறையாகத் தியானித்து, அக்னியின் நடுவே தியானத்திற்கு உகந்ததான எனது திவ்ய மங்கள வடிவத்தை நிணைக்க வேண்டும்.

சியாமள நிற மேனியில் பீதாம்பரம் தரித்து , சதுர்புஜங்களில் சங்கு , சக்ர , கதா பத்மங்களுடன் விளங்குகின்றதும், மகர குண்டலங்களுடன் மங்களமான சாந்தமான பரிசுத்தமான புன்னகை தவழுகின்ற ஸர்வாங்க சுந்தரமான மனதிற்கினியதாக விளங்குகின்ற எனது திவ்ய ரூபத்தை, எனது எல்லா அவயங்களிலும் தனித்தனியே முறையாக மனத்தை நிலை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். முடிவில் புன்சிரிப்புடன் கூடிய முக மண்டலத்தைத் தியானிக்க வேண்டும். சித்தத்தை வேறு எதிலும் செலுத்தக் கூடாது"

"உத்தவ! மேலும் கேள்!  என்னையே இடைவிடாமல் பக்தியுடன் தியானிப்பவன் எனது பாவனையைப் பெறுவதால், அவனுடைய கட்டளைகள் வீணாகப் போவதில்லை. தோல்வியும் அடைய மாட்டான். அந்தப் புருஷனை ஒருவராலும் ஜெயிக்க முடியாது.

இப்பிறவிக் கடலைக் கடப்பதற்குச் சிறந்த ஓடமாக இருப்பது மனித சரீரமே ஆகும். அதைச் செலுத்தும் படகோட்டியாக சிறந்த குருவும், எனது அருள் என்கிற காற்றும் இருக்கும் போதே எவன் என்னைத் தியானித்துப் பிறவிக் கடலைக் கடக்க முயற்சிக்கவில்லையோ அவன் தனது ஆத்மாவையே கொன்றவனாகிறான்" என்றார் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.

- ஸ்ரீமத் பாகவதம்

Sunday, October 14, 2012

மிருக வதை!



தினமலர் செய்தி!

அக்டோபர் 08,2012,

இறைச்சிக்காக கால்நடைகள் கடத்தல்

சென்னை:தமிழகத்தில், அடி மாட்டு விலைக்கு வாங்கப்படும் கால்நடைகள், இறைச்சிக்காக கடத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னையில், சமூக நல ஆர்வலர் ராதா ராஜன் மற்றும் பத்ரி இயக்கிய, "கடைசிப் பயணம்' எனும் ஆவணப்படத்தை ஆலய வழிபடுவோர் சங்கம் தயாரித்துள்ளது. படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில், ஆலய வழிபடுவோர் சங்கத்தலைவர் ரமேஷ் கூறியதாவது:

அதிர்ச்சியான உண்மை: கோவில் பாதுகாப்பு மற்றும் கால்நடைப் பாதுகாப்பு ஆகிய, இரண்டு முக்கிய குறிக்கோள்களுடன் இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது. ஆலயங்கள் மற்றும் அதன் சொத்துகளை, இந்து அறநிலைய துறை எப்படி பராமரித்து, நிர்வாகம் செய்கிறது என்பது குறித்தும், கால்நடைப் பாதுகாப்பில், அதன் அக்கறையின்மை குறித்தும், ஆய்வு செய்துள்ளோம். இறைச்சி உற்பத்தியின் வளர்ச்சிக்கும், வேளாண்மையின் வீழ்ச்சிக்கும், நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. பசுவதைத் தடுப்பு விவகாரத்தில், தொடர்ந்து அரசுகள் ஏமாற்றி வருகின்றன. இந்த ஆய்வில், நாங்கள் தெரிந்து கொண்ட அதிர்ச்சிகரமான உண்மைகள் தான், இந்த படத்தை தயாரிக்க தூண்டுதலாக அமைந்தது." இவ்வாறு ரமேஷ் கூறினார்

தொடர்ந்து, சமூக ஆர்வலர் ராதா ராஜன் பேசியதாவது:

உலகில், அதிகளவில் இறைச்சி உற்பத்தி செய்யும் முதல் மூன்று நாடுகளில், இந்தியாவும் ஒன்று. கடந்த 1999-2001 ம் ஆண்டில், 229 மில்லியன் டன்னாக இருந்த இறைச்சி உற்பத்தி, வரும் 2050ம் ஆண்டில், 450 மில்லியன் டன்னாக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரளாவின் தேவை: கேரளாவில், 80 சதவீதம் பேர் இறைச்சியை உண்கின்றனர். அங்கு தினமும், 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. ஆனால், அங்கு தினமும் வெறும், 264 டன்கள் மட்டுமே இறைச்சி உற்பத்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 4,780 டன், ஆடு, மாடு, கோழி, பசு உள்ளிட்ட அனைத்து கால்நடைகளும், அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை கூறியுள்ளது.

கடத்தல்: இதைத் தொடர்ந்து, தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, தென் ஒடிசா, மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, கால் நடைகள், குறிப்பாக மாடுகள், கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்கிறது. வேலூர், புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், மணப்பாறை, பொள்ளாச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு கால்நடை சேகரிப்பு மையங்களில் இருந்து, களியக்காவிளை, செங்கோட்டை, தேனி மற்றும் பொள்ளாச்சி வழியாக, கேரள எல்லைக்குள் இவை கடத்தப்படுகின்றன.

சராசரியாக ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் ஒவ்வொரு வாகனங்களிலும், 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் திணிக்கப்பட்டு 45 வாகனங்களில், அதாவது, 1,800 கால்நடைகள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. ஒரு வாரத்தில் குறைந்த பட்சம், 9,000 கால்நடைகளும், ஒரு மாதத்திற்கு, 1.8 லட்சம் கால்நடைகளும், இறைச்சிக்காக கடத்தப்படுகின்றன.இது குறித்து, கேரள கால் நடைப் பராமரிப்புத்துறை மூலம், 2009 -10ம் ஆண்டில், பல்வேறு சோதனைச் சாவடிகள் வழியாக,61 லட்சம் கால்நடைகள் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இதில், 18 லட்சம் கால்நடைகள் சோதனை இன்றி, கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
நடவடிக்கை எப்போது?:

எஸ்.பி.சி.ஏ எனும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும், சட்ட ரீதியான அமைப்பிற்கு, வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை போடும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரிகள், துன்புறுத்தப்படும் விலங்குகளை பாதுகாப்பது மட்டுமின்றி, விதிமீறி விலங்குகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை பறிமுதல் செய்ய முடியும். பெரும்பாலும் யாரும் அவ்வாறு செய்வதில்லை.தமிழக அரசு கால்நடைக் கடத்தலுக்கு பயன்படுத்தும், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராதா ராஜன் தெரிவித்தார்.


Saturday, October 13, 2012

வரலாற்றுப் பிழை!




தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசியல்வாதிகளால் தொடர்ந்து கூறப்பட்டு வரும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்து மதத்திற்கு எதிரான விமர்சனத்தை வைப்பதையே அதற்கு தீர்வாக கருதுகிறார்கள். ஹிந்து மதத்தை விட்டு விலகி விடுவதால் தங்களின் நிலை உயர்ந்து விடும் என்றும் சிலர் நினைக்கின்றனர். குறிப்பாக தலித்துகளில் பெரும்பாலானவர்கள் இந்த விதமான மூளைச்சலைவைக்கு ஆளாகி இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்?

திரு. அம்பேத்கார்

தலித்துகள் என்றால் மதம் மாறியே தீரவேண்டும் என்கிற டெம்ப்ளேட் உணர்ச்சியை அவர்கள் மனதில் ஆழப்பதிய வைத்த வரலாற்றுக் குற்றத்தை அம்பேத்கர் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அம்பேத்கரை பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டிருப்பவர்களின் பெரும்பாலானவர்கள்  இன்றைக்குச் கிறிஸ்தவத்தில் தான் இருக்கிறார்கள். அம்பேத்கர் இவ்வளவு பாடு பட்டு ஆய்வெல்லாம் செய்து 'இஸ்லாம் வேண்டாம் , கிறிஸ்தவம் வேண்டாம்' என்று அவற்றை விலக்கி புத்தமதம் மாறியது வீனாகிப் போனது. அவரை தலையில் தூக்கி வைத்து ஆடும் ஒருவரும் அவரை மதித்துப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. 

அம்பேத்கரை குலதெய்வம் போல் கொண்டாடுபவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாதிரிமார்களின் மூலைச் சலவைக்கு ஆட்பட்டு மிஷனரிகளுக்கு விலை போய்விட்ட மக்களாகவே உள்ளனர். அல்லது விலை போய்விட்ட தங்களை, இந்திய பாரம்பரிய நீரோட்டத்தில் தொடர்ந்து தங்கள் இருப்பை வெளிப்படுத்த அம்பேத்கரை உபயோகப்படுத்தி வருகின்றனர். அம்பேத்கார் உயிருடன் இருந்திருந்தால் மிஷனரிகளுக்குவிலை போவதை விட தலித்துகளைப் பார்த்து நீங்கள் இந்து மதத்திலேயே இருந்துவிடுங்கள்என்று கூட கூறியிருப்பார். காரணம், ஜாதிகள் இல்லை என்று சொல்லி  ஊரை ஏமாற்றி ஜாதிக்கொரு சர்ச் கட்டி இருக்கிறார்கள் என்பது தான்.

வாழ்க்கை முறை , வாழிடம், சுற்றம் சூழம் வாழும் மனிதர்கள் என்று எதுவும் மாறாத நிலையில், தலித்துகள் தங்கள் வழிபாட்டு முறையையும் வழிபடும் தெய்வத்தையும் மாற்றினாலே அவர்களின் வாழ்க்கை நிலை மாறிவிடும் என்று ஒரு படித்த மேதை எப்படி கணக்கிட்டாரோ என்று தெரியவில்லை.

மதம் என்பதை ஏதோ ஒரு கம்பெனி வேலையை ராஜினாமா செய்து, இன்னொரு கம்பெனி வேலைக்குச் செல்வதைப் போல அம்பேத்கார் நினைத்து விட்டார் போலும். பொதுவாக ஒரு மனிதன் கடவுளைக்கும்பிடுவதும், ஒரு மதத்தில் இணைந்திருப்பதும் தனக்கு மரியாதை கிடைக்கும் என்பதற்காக அல்ல. ஏதோ ஒரு அபார சக்தியும், மகிமையும் நாம் இணைந்திருப்பதால் தன்னைக் காக்கிறது என்று எண்ணுவதாலேயே அதில் இருக்கிறான். மனிதர்கள் இறைவழிபாட்டால் பிரச்சனை தீரும் என்று நம்புவதாலேயே அதனைச் செய்கிறார்கள். 

அம்பேத்கார் வழியில் தலித்துக்கள் எல்லாருமே புத்தம் தழுவாமைக்கு முக்கியக் காரணம், புத்தரிடம் மகிமைக் கதைகள் இல்லை. புத்தர் ஒரு மனிதராகவே, போதனை மட்டுமே செய்யும் குருவாகவே அறியப்பட்டார். ஆனால் தலித்துக்கள், அம்பேத்காரே தனக்கு வேண்டாமென்று ஒதுக்கி விட்டுப் போன, 'கிறிஸ்தவத்திற்கும், மிஷனரிகளுக்கும்' விலை போவதற்கு முக்கியக் காரணம், ஏசுவிற்கு நிறைய மகிமைக் கதைகள் இருக்கின்றன. அவற்றைச் சொல்லிச் சொல்லி, 'ஏசுவைக் கும்பிட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றன' என்று ஆழப்பரப்பப்படுவதால். ஆனால் புத்தரிடம் அந்த ஈர்ப்பும் மகிமையும் கிடைக்கவில்லை. ஆக உணர்வுப்பூர்வமாக அனுகப்பட வேண்டிய விஷயத்தை அம்பேத்கார் அறிவுப்பூர்வமாக மட்டுமே அனுகி தலித் சகோதரர்கள் வெளிநாட்டு மிஷனரிகளிடம் கூட்டம் கூட்டமாக விலை போகும் வாய்ப்பை, தோற்றுவாயை ஏற்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

இதனால் தலித் சகோதரர்கள் இழந்தது தங்களது சொந்த பாரம்பரியம். மூதாதையர்களின் அற்புதமான இறைசார்ந்த கலாச்சார வாழ்க்கை முறை. மூலைச் சலவையற்ற சுதந்திரமான வாழ்க்கை தர்மம். தலை முறைத் தலைமுறையாக வந்த முன்னோர்களின் சங்கிலிப் பிணைப்பான உறவுத் தொடர்புகள், ஆழமான வாழ்வியல் தத்துவங்கள். 

கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்துக்கோ மாறினால் இவற்றையெல்லாம் நம் மக்கள் இழந்து விடக்கூடும் என்பதாலேயே இந்திய பாரம்பரியத்தின் வேரிலிருந்தே உருவான புத்தத்தின் பின்னால் போக நினைத்தார் அம்பேத்கார். ஆனால் அம்பேத்காரின் சொல்படி கேட்காமல் அவர் வழி நடக்காமல் 'கிறிஸ்தவத்துக்கும் , இஸ்லாத்துக்கும்' மாறும் தலித்துக்கள் தங்களுக்காகவே வாழ்நாள் முழுதும் போராடிய மதிப்பிற்குரிய அம்பேத்கரை மோசமாக அவமதிக்கின்றனர்.

நல்லவர்களோ கெட்டவர்களோ, தி க மற்றும் தி மு க போன்றவர்களால் அரசாங்க சட்டதிட்டங்களில் மாற்றம் ஏற்பட்டு தலித் மக்கள் இன்று சக மனிதர்களைப் போல் செல்வமும், செல்வாக்கும் பெற்று வாழ்கின்றனர். ஆனால் அப்படி அடிப்படை வாழ்க்கையை மாற்ற முயலாமல் ஒரு மதத்தை மாற்றுவதால் அவர்கள் வாழ்க்கை மாறி விடும் என்று மதிப்பிற்குரிய அம்பேத்கார் நினைத்தது, ஏதோ ஒரு வேகத்தில் எங்கோ சறுக்கியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இது ஒரு வரலாற்றுப் பிழை!

Thursday, October 4, 2012

பிறப்பின் ரகசியம்!





"நைமிசாரண்ய முனிவர்களே! மானிட சரீரம் எப்படி உண்டாகிறதென்பதே விநதா புத்திரனின் கேள்வி. அதற்கு ஸ்ரீமத் நாராயணன் கூறிய பதிலைக் கேளுங்கள்" என்று சொல்லிக் கூறலானார் சூதபுராணிகர்.

"கச்யப குமாரா!" ஆணும், பெண்ணும் தாம்பத்ய உறவு கொள்வதால் கரு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.

ஸ்த்ரீயின் மாதவிலக்கு ஆனதிலிருந்து ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையிலான இரட்டை நாட்களில் ஸ்தீர்யுடன் கூடினால்ஆண்மகவு உண்டாகும்.

பொதுவாக ஒரு பெண் மாத விலக்கான நான்காம் நாளிலிருந்து எட்டாம் நாள் வரை கருவுற வாய்ப்புண்டு.

மதவிலக்கிலிருந்து ஐந்தாம் நாள் முதல் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தரித்துக் கொண்டு குவிந்த சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும்.
                                                                    
அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும். மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.

சேர்க்கை நிகழ்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெரிதாகும். இருபதாவது நாளில் மேலும் அதற்க்குச் சிறிது தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. 

நான்காவது மற்றும் ஐந்தாவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். 

ஆறாவது மாதத்தில் கழுத்தும்தலையும், பற்களும் உண்டாகும். 

ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும்.

எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான்.

ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்ற நாடியின் மூலத்தை சிசு அடைகிறது. பத்தாம் மாதம் தன் பிஞ்சுக்கால்களால் உதைத்து உதைத்து கருவறைக் கதவைத் திறப்பதால் தாய்க்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

அன்னையின் கருவில் இருக்கும் போதே உயிருக்கு ஆயுளும், கல்வி, யோகம் ஆகியவைகளும், எந்த நேரத்தில் எந்தவிதமாக இறப்பு நேரிடும் என்பதும்முன் ஜென்ம பாப, புண்ணியங்களுக்கேறப கர்ம வினைகளும் பிரம்மனால் எழுதப்பட்டு விடுகிறது. பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளின்பயனையே ஜீவன் மறுபிறவியில் அனுபவிக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

கருடா! உன் மூலம் உலகத்தவர்களுக்குப் பிறப்பின் ரகசியத்தைச் சொன்னேன்.

- கருடபுராணம்