Wednesday, September 2, 2009

தன்வினை தன்னைச் சுடும் - 1


"நல்லது செய்தால் நல்லது நடக்கும்" என்று சென்ற பதிவில் பார்த்தோம். நல்லதே செய்யுங்கள், அவை அலையாகப் பரவி உங்களையே வந்து சேரும் என்பதை வலியுறுத்தும் ஒற்றை வாசகம் அது. அதே நேரத்தில் தீயது செய்யாதீர்கள் என்பதற்கும் நமது கலாச்சாரத்தில் சொல்லப்படும் ஒற்றை வரி தான் "தன்வினை தன்னைச் சுடும்".

ஆம் நாம் செய்யும் நன்மையும் தீமையும் நேரடியாக இல்லாவிட்டாலும் யார் மூலமாகவோ கூட நமக்கே திரும்பி வந்து சேரும் என்பதை நமது தர்மம் மிகவும் வலியுறுத்துகிறது. உணர்வுகள் அலைவடிவாக ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவும் கண்ணுக்குத் தெரியாத அந்த இயக்கத்தை இதைவிட யாரும் எளிமையாகச் சொல்லி விட முடியாது.

பட்டினத்தார் வசனத்திலும் முக்கியத்துவம் பெரும் வசனம் "தன் வினை தன்னைச் சுடும்".

எந்த தத்துவமும் நிஜ வாழ்க்கையில் கண்முன்னே நிரூபனம் ஆகும் போது தான் அந்தத் தத்துவத்தின் மீது நம்பிக்கை உண்டாகிறது. அப்படி நிஜ வாழ்க்கையில் இந்தத் தத்துவம் நிரூபனம் ஆனதை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

ஒருவரது வினை அவரைச் சுட்டது. அவரது பெயர் " மைக்கேல் ஓ டையர்". ஆம், 1919 ஆம் ஆண்டு வாக்கில் பஞ்சாபின் கவர்னராக பணியாற்றி வந்தவர் மைக்கேல் ஓ டையர்.

வழக்கமாக இந்தியர்கள் மீது வெள்ளையர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்ச்சியை விட அதிகமாகவே வெறுப்பையும் அடக்குமுறை மனோபாவத்தையும் கொண்டிருந்தான் இந்த மைக்கேல் ஓ டையர். ஜெனெரல் ஓ டையர் என்ற கொலைகாரனுக்கு அப்பாவி மக்களை கொன்று குவிக்க ஊக்கம் அளித்தும் அவன் செய்தது சரிதான் என்றும் அவனுக்கு வக்காலத்து வாங்கியதும் தான் இவன் செய்த வினை. அவனது வினை அவனைச் சுட்டது.

அன்று 1919 ஏப்ரல் 13, ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் அப்பாவி பொதுமக்கள் கையில் ஆயுதங்கள் இல்லாதவர்களாய் நாம் அமர்ந்திருக்கும் இந்த பூமி நமக்கே சொந்தம் என்பதை வெள்ளையர்களிடம் உறுதியாகச் சொல்ல கூடியிருந்த இடம்.

இறுதியான கூட்டமாக அவர்களுக்கு அது மாறப்போவதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சட்ட விரோதமாக கூட்டத்தைக் கூட்டி அரசுக்கெதிரான புரட்சி நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுடனும் கூடியிருப்பவர்கள் மனிதர்கள் அல்ல ஆட்டு மந்தைகள் என்ற மமதையுடனும் உள்ளே வந்தான் ஜெனரல் டையர்.

பீரங்கி நுழைய முடியாத குறுகிய பாதையாதலால் துப்பாக்கியும் தோட்டாக்களையும் தொங்கவிட்டபடி 90 பேர் உள்ளே நுழைந்தார்கள். மிருக வெறியுடன் கூட்டத்தைப் பார்த்த டையர் மான் கூட்டமென அமர்ந்திருந்த அமைதியான மக்களைத் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தெடுக்கச் சொன்னன்.

துப்பாக்கி வாயிலிருந்து துப்பப்பட்ட தோட்டாக்கள் அப்பாவி மக்களைத் தப்பவிடாமல் தாக்கிக் கொன்றது. ஆயிரக்கணக்கானோர் அங்கேயே மடிந்தனர். குண்டுகளுக்கு பயந்தோடிய பலர் பாழும் கினற்றில் பாய்ந்து குதித்தனர். சிலர் மடிந்தார்கள், சிலர் பிழைத்தார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கானவர்களை ரத்தச் சகதியில் புரட்டி எடுத்தவன், இனியும் கூட்டம் கூடுவது பற்றி யோசித்தீர்களானால் எஞ்சியவர்களும் மடிவீர்கள் என்று மிரட்டி சென்றான்.


பிறகு நடந்தது என்ன? பஞ்சாப் மாகானத்தின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டையர், "ஜெனெரல் ரெஜினால்ட் டையர் செய்தது சரியே!" என்று அவனுக்கு ஆதரவு அளித்தான். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் மைக்கேல் டையரை கண்டித்தது. தவறாக படைகளை வழிநடத்தி பெருமளவு கொலை நிகழக்காரணாக இருந்தாய் என்று கூறி அவனை கவர்னர் பதவியில் இருந்து நீக்கி இந்தியாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. ஆனால் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த அவனுக்கு தண்டனை?

நாடு திரும்பிய மைக்கேல் ஓ டையருக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அவன் மகிழ்ச்சியாக இருந்தான். சொந்த நாட்டில் மதிப்பும் மரியாதையும் கொண்டு சுதந்திரமாக நடமாடினான். தனது ஆசா பாசங்களுடன் அற்புதமாக வாழ்ந்து வந்தான். பெரிய மனிதர்களுடன் கூடிக் குலாவுவதும், மேடையில் கெளரவமாக நின்று பேசுவதும் என்று காலங்கள் சென்றன.

அன்றும் அப்படித்தான் 1940 மார்ச் 13 ஏறக்குறைய இருபது ஆண்டுகள் - சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் மைக்கேல் டையர்.

பேசுவதற்கு எழுந்தான். ஒலிவாங்கியைப் பிடித்தான்.

தனது பேச்சை துவங்கினான்.

"லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்"

அப்போது டையரின் முகத்திற்கு முன்னே உயர்ந்தெழுந்தது 40 வயது மதிக்கத்தக்க இளைஞனின் உருவம். தனது கைத்துப்பாக்கியை நீட்டி ஜனரல் டையரை நோக்கி சுட்டது அந்த உருவம்.

தோட்டாவால் பாதகம் செய்தவன் தோட்டாவாலேயே மடிந்தான். ஆம் டையர் கிழிந்தது.

கிழித்தவன் பெயர் "உதம் சிங்". தெய்வம் நின்று கொல்லும்.



தெய்வத்தை பற்றி நாளை...

தன்வினை தன்னைச் சுடும்-2

8 comments:

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

இதற்கு இன்னொரு உதாரண் சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு நாட்டின் பிரதமர் அடுத்த நாட்டில் ஏறபட்ட உள்நாட்டு பிரச்சினைய( அந்த பிரச்சினையை தன் சொந்த லாபத்துக்காக அந்த நாடு தான் உருவாக்கியது .ஆதரித்தது) தீர்க்க தன் ராணுவ வீரர்களை அனுப்பினான். அவர்கள் அங்குள்ள அப்பாவி மக்க்ளை கொன்றும், பெண்களை கற்பழித்தும் அட்டகாசம் செய்துவிட்டு தன் நாடு திரும்பினார்.
பாதிக்கப்பட்ட நாட்டிலுள்ள ஒரு பெண் கொடுங்கோலனின் நாட்டிற்கு வந்து அவனை அழித்தாள்...
ஆனால் இங்கு சிறு வேறுபாடு.

டைகரை கொன்ற உதம்சிங் தெய்வமானான்.
கொடுன்கோலனை கொன்ற அந்த பெண் தீவிர்வாதியானாள்.
இதில் மற்றொரு விசயம் என்னவெனில், ஒரு இந்தியன் தன் நாடிற்கே வந்து தன் நாட்டு அதிகாரியை கொன்றிருக்கான், ஆனால் அதற்காக அந்த நாடு இந்தியாவை பழிவாங்கவில்லை..அது அவர்களின் பெருந்தன்மை. ஆனால் கொடுங்கோலனின் நாடு என்ன செய்தது என்று சொல்லி தெரிவதில்லை..

hayyram said...

உங்களுக்கு யார் மீது கோபம் , ஒருவனைக் கொன்றவன் மீதா? அல்லது அவனை பழிவாங்கியவன் மீதா? அல்லது பழிவாங்கியவனை புகழவில்லை என்பதன் மீதா?
வன்முறையை யார் செய்தாலும் அது திருப்பித் தாக்கப்படும் அஸ்திரமே. இதில் யாரைப் புகழ வேண்டும் யாரை இகழ வேண்டும் என்கிறீர்கள்? வன்முறையாளர்களில் யாரை
புகழ்ந்தாலும் அது கொலை பாதகத்தை வளர்க்கச் செய்வதேயாகும். மாறாக வன்முறையை எல்லோரும் தவிருங்கள் என்று நமது பாரம்பரியத் தத்துவத்தை விளக்கி உணர்த்துவதே அடியேன் கொண்ட பணி. தெய்வம் என்று நான் குறிப்பிட்டது கூட கண்ணுக்குத் தெரியாத இயக்கம் உன்னைச் சுற்றி எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்தும் சொல்லேயன்றி சுட்டவனை அல்ல.

அது சரி, அது என்ன தமிழ் ஒழிக , ஹிந்தி வாழ்க என்று தலைப்பு? தமிழையும் தமிழரையும் அவ்வளவு வெறுக்கிரீர்களா?

அன்புடன்
ராம்

தேவன் said...

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

பரதேசி பீட்டர் said...

நான் அறிந்து அந்த நேரத்தில் இரு டயர்கள் (கலெக்டர் மற்றும் இந்த டயர்) இருந்துள்ளனர். உத்தம் சிங் அந்த கலெக்டரையே சுட்டதாகக் கேள்வி.
இந்த டயர் தானாகவே இறந்து விட்டார்.
விளக்கவும்.

Madhusudhanan D said...

Hi All,

To know more about Udham Singh, try in Wikipedia. His life history is available. How he went till London, etc.

When the police asked his name, he replied, 'Ram Mohammed Singh Azad'.

hayyram said...

ya its so interesting madhu.

Unknown said...

Super sir.

Anonymous said...

செமையா சொன்னீர்கள்