Thursday, January 7, 2010

யோகிராஜ் வேதாந்திர மகரிஷியின் பொன்மொழிகள்!


முன்னோர்களால் சொல்லப்பட்ட சம்பிரதாயங்கள் பலவும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளவை.

உதாரணமாக அமாவாசை அன்று சூரியன், சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால், பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும்.

அமாவாசை நாட்களில் ஏன் தர்பணம் செய்ய வேண்டுமென்றால், பூமியின் ஆகர்ஷண சக்தி அந்நாட்களில் அதிகரிக்கும். நம் ஒவ்வொருவரிடத்தும் இறந்து விட்ட பெரியவர்களின் ஆற்றல் உள்ளடங்கியிருப்பதால், அந்நாட்களில் அவர்களை நினைக்கவும், நம் சக்தியை வீணாகச் செலவிடாது இருக்கவும் அந்நாளை நினைவு நாளாக வைத்து, பெரியவர்களுக்குத் தர்பணம் செய்யும் விரத நாளாகவும் வைத்தார்கள்.

அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாகும்.
மூளை நோய் உள்ளவர்களைக் கட்டி வைக்க வேண்டிய அளவுக்கு வெறி அதிகப்படும். மரணத்தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரிந்து விடும்.

அந்த நாளைச் சிற்றின்பத்திற்குச் செலவு செய்வதோ, குழந்தைப் பேறு உண்டாவதோ நன்மையாக அமையாது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகக் கூடும். ஏனெனில் நிலவு பூரணமாக ஒளி அற்ற நாளாகும் அது.

(அதனால் தான் அமாவாசை விரதம் என்று குறைவாக உண்பார்கள். மூக்குப் பிடிக்க சாப்பிட்டால் ஏதாவது செய்வோம் என்று உடம்பு தினவெடுக்கும். சிற்றின்பத் தூண்டுதல் உண்டாகும். அதைத் தவிர்க்கவே அமாவாசை விரதம் என்று குறைவாக உணவு உண்ணுதை வழக்கமாகக் கொண்டார்கள் என்பது புரிகிறதா?)

அதே போல் முழு நிலவு நாள் அன்று பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வருகிறது. அந்நாள் தான் பௌர்ணமி. அந்நாளிலும் மனித உடல் அதிகமான சக்தி வந்து விந்து நாதத்தில் ஒரு பூரிப்பை ஏற்படுத்துகிறது.

அந்நாளில் ஒரு குழந்தை உண்டானாலும் மனவளர்ச்சி இல்லாத குழந்தையாக அது உருவாகக் கூடும்.

எனவே அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களைப் புனிதமான நாட்களாகவும், விரத நாட்களாகவும் மனதில் கொண்டு மதித்து இறைவனிடம் மனதைச் செலுத்தச் சொன்னார்கள்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.

16 comments:

thiruchchi said...

அமாவாசை, ப‌வுர்ண‌மி நாளில் குழ‌ந்தை உருவானால் அது நிச்ச‌ய‌மாக‌ ம‌ன‌ வ‌ளர்ச்சி குன்றிய‌தாக‌ தான் இருக்குமா? அமாவாசை, ப‌வுர்ண‌மி நாளில் புண‌ராம‌ல் நேர‌ம் கால‌ம் பார்த்து புண‌ர்ந்தும், ம‌ன‌ வ‌ள‌ர்ச்சி இல்லாத‌ குழ‌ந்தைக‌ள் பிற‌ப்பது ஏன்?

இந்தியாவை த‌விர‌ பிர‌ இட‌ங்க‌ளில் நேர‌ம் கால‌ம் பார்க்காம‌ல் புண‌ர்ந்து ந‌ல்ல‌ குழ‌ந்தைக‌ள் பிற‌க்க‌வில்லையா?

கிர‌ஹண‌ம் எப்ப‌டி உருவாகிற‌து? ச‌ந்திர‌ன் சூரிய‌னுக்கும் பூமிக்கும் இடையில் நேர்க்கோட்டில் வ‌ருவ‌தாலா அல்ல‌து வேறு ஏதாவ‌து பாம்பு பிடிப்ப‌தாலா?

"நாளென் செயும், வினை தான் என் செயும் , எனை நாடி வ‌ந்த‌ கோளென் செயும்' என்று பாடினாரே அருண‌கிரியார், அவ‌ர் இந்து ம‌த‌ அறிங்க‌ர் இல்லையா?

"கிருஹ‌ ப‌ல‌மேதி" என்று பாடிய‌ தியாக‌ராச‌ர் இந்து ம‌த‌ அறிங்க‌ர் இல்லையா?

ப‌ல‌ர் ப‌ல‌ ந‌ம்பிக்கையை இந்து ம‌த‌த்தின் தலையிலே க‌ட்டி விட்ட‌ன‌ர். புத்த‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர் இந்து ம‌த‌த்தை அறிவுப் பாதையில் மாற்றியும் மீண்டும் ப‌ல‌ர் அதை பின்னோக்கி த‌ள்ளுகின்ற‌ன‌ர். நீங்க‌ளும் பிற்போக்கு பாதையில் சென்று இந்து ம‌த‌த்தை இருட்டில் த‌ள்ளாதீர்க‌ள்.

hayyram said...

//"நாளென் செயும், வினை தான் என் செயும் , எனை நாடி வ‌ந்த‌ கோளென் செயும்' என்று பாடினாரே அருண‌கிரியார், அவ‌ர் இந்து ம‌த‌ அறிங்க‌ர் இல்லையா? //

//கிருஹ‌ ப‌ல‌மேதி" என்று பாடிய‌ //இந்த பாடல்களை முழுமையாக பாடினால் அர்த்தம் புரியும். தர்கத்திற்கு தேவையானதை மட்டும் சொல்லி மீதியை விட்டால் என்ன அர்த்தம்?

//பாம்பு பிடிப்ப‌தாலா?// அது பொய்.

//ப‌ல‌ர் ப‌ல‌ ந‌ம்பிக்கையை இந்து ம‌த‌த்தின் தலையிலே க‌ட்டி விட்ட‌ன‌ர்//

மகரிஷி சொன்ன நம்பிக்கையில் லாஜிக் உதைக்கவில்லையே! குறிப்பிட்ட இரு தினங்களிலும் பூமியின் மீதான அழுத்தமும் சந்திரனின் ஈர்ப்பு சக்தியும் அதிகரிப்பது அறிவியல் பூர்வ உண்மை தானே. சரி அமாவாசை,பௌர்ணமி நாட்களில் அதுவும் இரவில் நோய் கொண்டவருக்கு அது அதிகரிப்பது ஏன்? இதை நான் கண்கூடாகவே கண்டிருக்கிறேன். எனது தாத்தாவுக்கு ஆஸ்மா உண்டு. பெரும்பாலும் இரவில் அதிகரிக்கும். அமாவாசை, பௌர்ணமி நாட்ளில் தூங்க முடியாதபடி மூச்சுத் திணருவார். நான் நேரடியாக அருகிருந்து பார்த்து உணர்ந்தது.

இது இந்து மதத்தை பின்னால் தள்ளும் முயற்சி அல்ல. ப்ரபஞ்சத்துக்கும் நம் வாழ்வுக்கும் இருக்கும் சம்பந்தம் பற்றி ஆராய வேண்டிய விஷயம்.

இவற்றையெல்லாம் யாம் எடுத்துச் சொல்வது நம்புங்கள் என்பதற்கல்ல, நம் முன்னோர்கள் சொல்லும் விஷயங்களில் அர்த்தமுண்டு. அதனால் அவற்றைப் புரந்தள்ளாமல் யோசியுங்கள் என்று சொல்வதற்கே.

மகரிஷியின் வாக்கை நான் நம்புகிறேன். நீங்கள் வேண்டுமானால் அமாவாசை , பௌர்ணமி தினத்தில் உறவுகொண்டு குழந்தை பெற்று பாருங்களேன்! வாழும் சாட்சியாக நீங்கள் இருந்தால் நான் அன்று முதல் உங்களை நம்பிவிட்டுப் போகிறேன். சரிதானே? முயற்சி செய்யுங்கள்.

thiruchchi said...

//நீங்கள் வேண்டுமானால் அமாவாசை , பௌர்ணமி தினத்தில் உறவுகொண்டு குழந்தை பெற்று பாருங்களேன்! வாழும் சாட்சியாக நீங்கள் இருந்தால் நான் அன்று முதல் உங்களை நம்பிவிட்டுப் போகிறேன். சரிதானே? முயற்சி செய்யுங்கள்.//


அநாக‌ரீக‌மாக‌ இருக்கிர‌து உங்க‌ள் ப‌திவு. அமேரிக்காவில், சீனாவில் அமாவாசை ,ப‌வுர்ண‌மி பாத்தா உற‌வு வைக்கிறான். அங்கெ உட‌ல் குறைவுட‌ன் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் ச‌த‌வீத‌ம், இந்தியாவில் உட‌ல் குறைவுட‌ன் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ளின் ச‌த‌வீத‌த்தை விட‌ மிக‌வும் குறைவு. இப்ப‌டி தெளிவான‌ புள்ளி விவ‌ர‌ங்க‌ள் நித‌ர்ச‌ன‌ உண்மையை காட்டும் போது, என்னை பிள்ளை பெற்றுக் காட்டும் ப‌டி நீங்க‌ள் கூறுவ‌து, அவ‌ச‌ர‌த்தில் நிதான‌த்தைக் கை விட்ட‌ செய‌லே.

உங்க‌ளுக்காக அமாவ‌சையில் பிள்ளை பெற்றுக் காட்ட‌ வேண்டும், இன்னொருவ‌ர் இராகு கால‌த்தில்
பிள்ளை பெற்று காட்ட‌ சொல்வார். இன்னொருவ‌ர் எம‌ க‌ண்ட‌த்தில் பிள்ள பெற்றுக் காட்ட‌ சொல்லுவார்.

அறிவாளிகளே உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ல‌ரும் நேர‌ம‌ கால‌ம் பார்க்காம‌ல், அமாவ‌சை, ப‌வுர்ண‌‌மி, இராகு கால‌த்தில் புண‌ர்ந்து ந‌ல்ல‌ பிள்ளைக‌ளை பெற்றுக் கொண்டுதான் உள்ளன‌ர்.

ஏன் இந்த‌ ராகு, கேது சூரிய‌னை பிடிப்ப‌தாக‌ சொல்லும் க‌தைக‌ளை கை விட்டு விட்டீர்க‌ளா?

இவ‌ர்‌க‌ளிட‌ம் இருந்து அறிவின் அடைப்ப‌டையிலான‌ ச‌ரியான‌ இந்து ம‌த‌த்தைக் காப்பாற்றுவ‌தே பெரும்பாடாக‌ உள்ளது.

thiruchchi said...

//"நாளென் செயும், வினை தான் என் செயும் , எனை நாடி வ‌ந்த‌ கோளென் செயும்' என்று பாடினாரே அருண‌கிரியார், அவ‌ர் இந்து ம‌த‌ அறிங்க‌ர் இல்லையா? //

//கிருஹ‌ ப‌ல‌மேதி" என்று பாடிய‌ //இந்த பாடல்களை முழுமையாக பாடினால் அர்த்தம் புரியும். தர்கத்திற்கு தேவையானதை மட்டும் சொல்லி மீதியை விட்டால் என்ன அர்த்தம்?//

மீதிப் பாட‌லில் என்ன‌ சொல்லி இருக்கிற‌து? அமாவ‌சை ப‌வுர்ண‌மியில் புண‌ராதே என்று சொல்லி இருக்கிற‌தா?

அப்ப‌ர், ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர் இவ‌ர் போன்ற‌வ‌ர் எப்போதாவ‌து -‍ இந்த‌ நேர‌ம் , கால‌ம், கிர‌க‌ம் இதை எல்லாம் பார்ப்ப‌து அவ‌சிய‌ம் , ந‌ல்ல‌து - என்று சொல்லி இருக்கிறார்க‌ளா?

முக்கிய‌ம் இல்லாத‌ எக்ஸ்டிரா ல‌க்கேஜை எல்லாம் இந்து ம‌த‌த்தின் மீது ஏற்றி அதை குனிய‌ வைக்கிறீர்க‌ள், இதனால்‌ தான் க‌ருணாநிதியார் போன்ற‌வ்ர்க‌ள் ந‌க்க‌ல் அடிக்க‌, கேலி செய்ய‌ எளிதாகி விடுகிற‌து. க‌ருணானிதி, வீர‌ம‌ணியுட‌ன் கூட்ட‌ணி வைத்து, இந்து ம‌த‌த்தின் மீது குப்பைக‌ளைப் போடுகிறீர்க‌ள்.

இந்து ம‌த‌த்தின் பெயரால் யார் எது சொன்னாலும் அதைக் கெட்டுக் கொண்டு, ஆமாம் சாமி போட்டு அதை நியாய‌ப் ப‌டுத்த‌ முய‌ல‌க் கூடாது. சிந்தியுங்க‌ள். மறுப்பு வாத‌ங்க‌ளை வையுங்க‌ள். சிந்திக்க‌ அனும‌தி த‌ரும், ம‌றுப்பு வாத‌ங்க‌ளை வூக்குவிக்கும் ஒரே மார்க்கம் இந்து ம‌த‌ம்.

hayyram said...

//அநாக‌ரீக‌மாக‌ இருக்கிர‌து உங்க‌ள் ப‌திவு//

உங்களை எள்ளி நகையாட எண்ணியோ புண்படுத்தும் நோக்கமோ எனக்கு அனு அளவும் இல்லை. நான் சொல்ல வந்ததெல்லாம், அங்கே அவர்கள் செய்தார்கள், இங்கே இவர்கள் செய்தார்கள் என்று மேம்போக்காக பேசி நல்ல விஷயங்களை ஆராயாமலே எதிர்ப்பதை குற்றம் சாட்டுகிறேன்.

நான் இப்படித்தான் செய்தேன் என்று அனுபவத்தில் ஒருவர் சொன்னால் அவரது எதிர்வாதத்தை ஏற்கலாம். இந்து தர்மம் இந்த அளவிற்கு தழைத்தோங்கி நிற்பதற்கு காரணமே அனுபவம் சார்ந்த பதிவுகளை நம் முன்னோர்கள் நிறுத்திச் சென்றார்கள் என்பதாலேயே. சித்தர்களும் ஞானிகளும் சுய பரிசோதனை மூலமாகத்தான் கண்டரிந்து சொன்னார்கள். எலிகளை வைத்து பரிசோதனை செய்யவில்லை.

அது போல் உங்களால் நிரூபிக முடியுமா என்ற ரீதியில் தான் குறிப்பிட்டேனே ஒழிய உங்களை ஏளனப்படுத்தும் எண்ணம் இல்லை. உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

முன்னோர்கள் சொல்வதில் லாஜிக் ஒத்துப்போனால் கூட ஆராயக்கூடாது அதை ஒத்துக்கொள்ளக்கூடாது என்றால் எப்படி. நான் நம்புகிறேன். எனக்கு அங்கே ஆராய்ச்சி தேவையில்லை. நீங்கள் என்னை நம்பாதீர்கள் என்று சொன்னால் நான் கேட்கும் முறைகளில் அதை நிரூபித்துக் காட்டுங்கள் ஏன் நம்பக்கூடாது என்று.

வெறும் மேம்போக்கான உட்டாலக்கடி உதாரணங்கள் புண்படுத்துமேயன்றி அறிவை தெளிய வைக்காது. நம்புபவன் நிரூபிக்க வேண்டியதில்லை. அவன் நம்பிவிட்டான். நம்பக்கூடாது என்று நீங்கள் சொன்னால் சரியான நிரூபணம் காட்டுங்கள்.

hayyram said...

//நான் போதுமான‌ விள‌க்க‌ம் அளித்து இருக்கிறென்// இது தான் பிரச்சனையே! உங்களைப் போன்றவர்கள் நேரடியாக பதில் சொல்வதில்லை. முடிவெடு! இல்லை கொல்லப்படுவாய் என்ற தருணத்தில் என்ன செய்வீர்கள்?

hayyram said...

//அத‌ன் சூட்சும‌ம் என்னா?// அது என்னுடைய சூட்சமம் இல்லை. ப்ளாகரில் டீஃபால்ட் டஸ்ட் பின். உங்கள் பின்னூட்டங்களை நீங்களே டெலிட் செய்யலாம். அது உங்கள் வசதிக்கான ப்ளாகர் ஆப்ஷன்.

thiruchchi said...

"அமாவாசையில் புணர்ந்தால் குழந்தை வூனமாக பிறக்கும்" என்று நீங்கள் கருதினால் அதை நிரூபிக்க வேண்டியது நீங்கள்தான்!

உலகிலே பல நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளனர். பல சிகிச்சை முறைகளையும் கண்டு பிடித்து வருகின்றனர். நோய்க் குறிப்பு , நோய் தடுப்பு , ஆரோக்கிய வாழ்வு பற்றி பல அறிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

எந்த மருத்துவ பல்கலைக் கழகமும், இப்படி அமாவாசையில் புனாராதே என்று அறிக்கை விடவில்லை. ஒரு சித்தரும் சொல்லவில்லை. காடு வெளி சித்தர் சொல்லவில்லை. புலிப் பாணிச் சித்தர் சொல்லவில்லை. பட்டினத்தார், ஆதி சங்கரர் , அருணகிரியார், விவேகானந்தர் யாரும் சொல்லவில்லை.

யாரோ சொன்னதைக் கேட்டு, இந்து மதத்தையும் தொல்லை செய்து, எல்லோருக்கும் கால விரயமும் ஆகிறது.

உங்களைப் போன்றவர்களைப் பார்த்தாலே, "ஐயா , ஜாலி" என்று கருணாநிதி போன்றவர்கள் குதிப்பார்கள்.

hayyram said...

//நிரூபிக்க வேண்டியது நீங்கள்தான்!
//

நான் பிரபஞ்ச மாற்றங்கள் நம்ம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நம்புகிறேன். அறிவியலாளர்களும் அதை ஒத்துக்கொள்கிறார்கள். அதனால் மேற்சொன்ன விஷயத்தை நான் ஆராயப்போவதில்லை.

அது தவறு என்று எனக்கு எடுத்துச் சொல்ல விரும்பினால் நீங்கள் அதன் நிரூபனத்தைக் காட்டுவது உங்கள் பொறுப்பு. இல்லையேல் எனது ஞாயமான நம்பிக்கையில் குறுக்கிடாமல் இருப்பது நாகரீகம். ரெண்டில் எதைச் செய்யப் போகிறீர்கள்?

நிரூபிக்கவும் மாட்டேன் ஆனால் கருணாநிதியைப் போல குடைந்து கொண்டே இருப்பேன் என்றால் உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம்?

இப்போ என்ன டென்ஷன்..365 நாட்களில் அமாவாசை பௌர்ணமி போக 341 நாட்கள் சுதந்திரமாக இருக்கிறதே! எனக்கு அது போதும்.

thiruchchi said...

நான் ஒன்றும் குடையவில்லை.

அது உங்கள் சொந்த நம்பிக்கையாக இருக்கும் பட்சத்தில், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஆனால் அந்த நம்பிக்கையை இந்து மதத்தின் கருத்து போலத் தோற்றமளக்கும் வகையில் கட்டுரை எனக்கு தோன்றியதால் தான் எழுதினேன்.

hayyram said...

//எனக்கு தோன்றியதால் தான் எழுதினேன்.// தாராளமாக எழுதுங்கள். என் மேடையில் ஏன் மைக் பிடித்தீர்கள் என்று உங்களை விரட்ட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை நம்பிக்கையை விமர்சனம் செய்வோர் தகுந்த ஆதாரம் கொடுப்பதில்லை. வெறுமனே விமர்சனம் வசவு மட்டுமே காட்டுகிறார்கள். நீங்களும் அதே வழியில் இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உங்களோடு முட்டி மோதி விவாதம் செய்தாலும் உங்களிடம் இருந்துகிடைப்பது முத்துக்களே! லாபம் எனக்குத்தான்! ஆனால் என் சில கேள்விக்கு நேரடியாக பதில் இல்லை என்பது நெருடல்.

thiruchchi said...

நான் ஒரு வசவையும் வைக்கவில்லை. இந்து மதத்தின் மேலே எல்லோரும் தங்கள், தங்கள் நம்பிக்கைகளை ஏற்றி அதுதான் இந்து மதம் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர். உண்மையான இந்து மதம் உள்ளே சிக்கி விட்டது.

உங்களைப் போன்ற இளைங்கர்கள், சரியான உண்மையான இந்து மதத்தை வெளியே எடுக்க வேண்டும், குப்பை கூலங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது.

hayyram said...

///உங்களைப் போன்ற இளைங்கர்கள், சரியான உண்மையான இந்து மதத்தை வெளியே எடுக்க வேண்டும், குப்பை கூலங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது.///

உங்கள் அக்கரைக்கு மிக்க நன்றி. நம்பிக்கைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அதில் தவறில்லை என்பது என் கருத்து அவ்வளவே!

நம்பிக்கைகளாக இருப்பது எல்லாமே எக்ஸ்ட்ரா லக்கேஜுகளாகிவிடுவதில்லை என்பது என் வாதம். அதனால் வாதிட்டேன்.

//நான் ஒரு வசவையும் வைக்கவில்லை// உங்களை வரவேற்கிறேன். நீங்கள் வசவுங்கள். குட்டுங்கள். பாராட்டுங்கள். இந்த தளத்தில் உங்களுக்கு முழு உரிமை உண்டு.

maddy73 said...

I, appreciate the patience that 'hayyram' has in his responses.

I feel 'thiruchi' tries to insists not to give any chance to someone to question 'Hindu-beliefs', by writing something in which one is not sure about.

Both seem to give values to 'Hindu religion'.

Arguments rise when there is any difference in opinion. Here I feel, both have same 'motto' of preserving 'Hindu beliefs' but have differences in 'expressions'

Let's get united and do some 'team work'(btb. plz. visit http://madhavan73.blogspot.com
& share ur opinion on my thoughts in general) to make 'Good things Prevail'

hayyram said...

thanks maddy

Siva said...

சூரியனுடைய மையத்தில் ஏற்படும் ராகு கேது காந்த அலைப்பாதைகளுக்கு நேராக சந்திரன், பூமி வரும் போது சுவடு மறைவு ஏற்பட்டு விடும். இதை கிரகணம் என்று சொல்கிறோம்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க் கோட்டில் வரும் போது அங்கு சூரியன் மையத்தில் ராகு அமையும் போது சூரியனிடமிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை அது மறைத்து விடும். இதை சூரிய கிரகணம் என்கிறோம்.

பூரண சந்திர தினத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க் கோட்டில் இருக்கும். அப்பொழுது பூமி சூரியனிடமிருந்து சந்திரன் மேல் படும் வெளிச்சத்தை மறைத்து விடும். அதை சந்திர கிரகணம் என்கிறோம். பூமி, ராகு, கேது என்ற நிழல்கிரகங்களுக்கு நேராக வரும்போது அந்த மறைவு தெரியும்.

ராகு கேது இரண்டும் கருநிறமான நீண்ட காந்த அலைப் பாதைத்தான். அது நீளமாக வருவதால் பாம்பு என்று சொல்லி வைத்துள்ளார்கள். முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல,.எதையும் இலை மறை காயாக தான் சொல்வார்கள்..Mr.thiruchi