Tuesday, April 27, 2010

அனுமன் பறந்ததும், ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சியும்!



அறிவியலோடு ஒத்துப்போகாத மதங்கள் இருப்பதை விட அழிவதே மேல். மனிதர்களை தொடர்ந்து இருட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக அந்த மதங்கள் உடனேயே அழிந்து விடுவது மனித குலத்திற்கு நல்லது - சுவாமி விவேகானந்தர்.

இந்து தர்மம் என்றைக்குமே அறிவியலோடு பொருந்திப் போவதாகவே இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. உதாரணமாக ஸ்ரீமன்நாராயணனின் தசாவதார வடிவங்கள் பரினாம வளர்ச்சியின் சித்தாந்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்றால் மிகையில்லை. நீர்வாழ் உயிரியில் தொடங்கி படிப்படியான உருமாற்றத்தால் மனித உருவை வெளிப்படுத்தும் இந்த தசாவதாரக் கருத்தியல் வேறு எந்த மதத்திலும் கண்டறிய முடியாத அறிவியலோடு பொருந்திப்போகும் ஒரு விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேப்பிலை, மஞ்சள் என்று நம் கலாச்சாரத்தில் நாம் அறிவிலை பல வகைகளில் இறையியலோடு தொடர்புபடுத்தி கையாண்டு வந்திருக்கிறோம்.

இப்படி பல்வேறு நிலைகளில் இயற்கையோடும் அறிவியலோடும் நம் மதங்களும் நம்முடைய இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்களும் ஒன்றி வாழும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன.

இன்றைக்கு ஒரு இதிகாச கதாபாத்திரத்தைப் பற்றியும் அதன் சிறப்புத் தன்மை எப்படி அறிவியலோடு பொருந்தியிருக்கிறது என்பதைப் பற்றியும் பார்ப்போம்.!

ராமாயணம்!

ராமாயணம் நிகழ்ந்ததுக்கு அடையாளமாக பூகோளம், தொல்பொருள் ஆராய்ச்சி, சரித்திரச் சான்றுகள், கலாசாரச் சின்னங்கள், காவியத்தின் குறிப்புகள் என்று ஏராளமாய்க் கிடைக்கின்றன. டாக்டர் ராம் அவதார் என்பவர் செய்த ராமாயண ஆராய்ச்சியில் 195 இடங்களை ராமரும், சீதையும் சென்ற இடங்களாய்க் கண்டறிந்துள்ளார்.

அவற்றில் சிருங்கிவேரபுரி என்றழைக்கப்பட்ட சிருங்கேரி, பாரத்வாஜ ஆசிரமம் (அலஹாபாத்), சித்ரகூடம், பஞ்சவடி, சீதாசரோவர், சீதாமடி, ஜனக்பூர், தர்பங்கா, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம், ராமநதீஸ்வரம், புள்ளப் பூதங்குடி ஆகிய இடங்களும் இடம் பெறுகின்றன.

ஸ்ரீலங்காவில் சீதை சிறை இருந்த அசோக வனம் தற்போது “அசோக் வாடிகா” என்ற பெயரில் அழைக்கப்பட்டு புண்ய ஸ்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் பாதுகாக்கப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இத்தனை சிறப்பு பெற்ற ராமாயனத்தில் யாரை மறந்தாலும் ஒருவரை மறக்கவே முடியாது.

ஆஞ்சனேயர்!

ஆஞ்சனேயர் என்ற கதாபாத்திரம் இல்லையென்றால் ராமாயனத்திற்கு சிறப்பே இல்லை
எனலாம். முழு ராமாயனத்தையும் கேட்டு முடிக்கும் நம்மக்களுக்கு ராமர் மீது பக்தி வருகிறதோ இல்லையோ ஆஞ்சநேயர் மீது கண்டிப்பாக பக்தியும் விருப்பமும் பாசமும் வந்து விடும். எல்லோரையும் கவரும் அந்தக் கதாபாத்திரம் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியோடு ஒத்துப்போகிறது என்றால் நம்புவீர்களா?
ஆம். கண்டிப்பாக ஒத்துப்போகிறது என்பேன் நான். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

அதற்கு முன்பாக ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரிபற்றி கொஞ்சம் பார்ப்போம். 1905-ல் ஆல்பர் ஐஸ்டீனுக்கு இருபத்தி ஐந்து வயது தான். அப்போதே ஆராய்ச்சியாளர். ஒளியின் வேகத்தைப் பற்றி இன்னபிற ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அதை சில ஆராய்ச்சிகள் மூலம் அதிரடியாக நிரூபித்து அதிரவைத்த அதிர்வேட்டுக்காரர். அதாவது ஒளியின் வேகம் என்பது பூமிப்பந்து சுழலும் திசையிலும் சரி அதன் எதிர் திசையிலும் சரி மாறவே இல்லை. அது எப்படி? என்று ஒரே குழப்பம்.

இதற்கு ஐன்ஸ்டீன் கொடுக்கும் தீர்வு எப்படி ஆஞ்சநேயர் பறப்பதோடு ஒத்துப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்!



ஒளியின் வேகம் பூமிப்பந்து சுழலும் திசையிலும், எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் எப்படி பிரயானிக்க முடியும் என்பதை இவ்வாறு விளக்குகிறார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல் என்று கூறப்படுகிறது. இந்த வேகத்தில் ஒரு பொருள் பிரயானித்தால் கண்டிப்பாக அந்த பொருளின் மீது ஒரு மாற்றம் உண்டாகும் என்கிறார் ஐன்ஸ்டீன். அந்த மாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரயானிக்கும் எந்தப் பொருளும் பூமியின் சுழற்சியின் எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் பிரயானிக்க முடியும் என்பது அவரது வாதம்.

நமக்குப் புரியும் வகையில் ஒரு உதாரனம் பார்ப்போம். சித்திரைப் பொருக்காட்சிக்குப் போகிறோம். அங்கே ஜெயன்ட் வீல் ராட்டினத்திலோ, அல்லது ரோலர் கோஸ்டரிலோ நாம் பிரயானிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அவை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு நம்மைக் கொண்டுபோய் அப்படியே கீழே விழுந்து விடுவது போல புவியீர்ப்பு விசையின் வேகத்திலேயே நம்மை தரைக்குக் கொண்டு வரும். மயிற்கூச்செரிய உணர்ச்சி மேலிட கூச்சலிடுவோம். நாம் அப்படி கூச்சலிடவும் காரனம் இருக்கிறது. புவியீர்ப்பு விசையின் வேகத்தில் நாம் கீழே இறங்கும் போது ரத்த அழுத்தம் வழக்கத்தை விட மாறுபட்டு உடலின் ரத்தத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதை சமாளிக்கவே அதில் பயணிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆக ராட்டினத்தில் ப்ரயானிக்கும் போதே நம் உடலில் மாறுதல்கள் உண்டாகுமானால் ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஒரு பொருளின் மீது என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்று கற்பனை கூட செய்ய முடியாது.

ஆனால் ஐன்ஸ்டீன் இதை கற்பனை செய்தது மட்டுமல்ல ஒரு ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தும் விளக்கினார். ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் பிரயானிக்கும் போது அதன் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதன் அளவு பாதியாக குறைந்து விடுகிறது. அதாவது ஆறடி இருக்கும் ஒரு மனிதன் ஒளியின் வேகத்தில் பிரயானித்தால் மூன்று அடியாக மாறிவிடுகிறான் என்கிறார்.



ஒளியின் வேகத்தில் பிரயாணிப்பதால் காலக்கட்டுப்பாட்டை அவர் கடந்து விடுகிறார் என்றும் கூறுகிறார். ஒளியைத் தவிற வேறு எந்த ஊடகமும் ப்ரபஞ்சத்தில் தடையற்ற முறையில் பறக்க முடியாது என்பதாலும், ஒளியின் வேகத்தில் இப்படிப்பட்ட மாறுதல்கள் உண்டாவதாலும் அதன் வேகம் பூமியின் சுழற்சிதிசையிலும், அதன் எதிர் திசையிலும் மாறாமல் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆராய்ச்சிக் கூடத்தில் அனுத்துகள்களைக் கொண்டு இதை ஆராய்ச்சி செய்து சக விஞ்ஞானிகள் மத்தியில் நிரூபித்தும் காண்பித்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் ரெலேட்டிவிட்டி தியரி ஆங்கிலத்தில் இங்கே

சரி அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்ததற்கும் இந்த ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஏற்படும் பொருளின் மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒரு கற்பனை ஒப்பீடு.

அனுமார் சஞ்சீவி மலையை கொண்டுவர கிளம்பும் முன் தனது உடலை பல மடங்குப் பெரிதாக ஆக்கிக் கொள்கிறார். பிறகு ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார். இப்போது அவரது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

ஏற்கனவே மலைபோல உருவமும் அதற்கேற்ற எடையும் கொண்ட வடிவெடுத்திருக்கும் அனுமார் தன்னுடைய சம எடையுள்ள மலையை கையில் தாங்கிக் கொள்கிறார். பின்னர் ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார் என்று கொண்டால், இப்போது அனுமாரின் எடை இரண்டு மடங்காகி விடுகிறது. அதாவது சஞ்சீவி மலை அவரது எடையில் பாதி. ஆக தனது எடையில் பாதியாக போய்விட்ட சஞ்சீவிமலை அனுமாருக்கு இப்போது கனமில்லை தானே!

மேலும் ஒளியின் வேகத்தில் வரும்போது உருவம் பாதியாகி விடுவதால் பெரிய மலையை தலைக்கு மேல் தூக்கிக் கொள்ள வசதியாகி விடுகிறது. இல்லை யென்றால் சம அளவு பெரிய உருவத்தை கையில் பிடிக்க வசதி இருக்காதே! மேலும் ஒளியின் வேகத்தில் பறப்பதால் காலத்தின் கட்டுப்பாட்டையும் உடைத்தெரிந்து விடுவதால் அவர் நினைத்த வினாடிகளில் ராமரை அடைந்து ராம லக்ஷ்மனரைக் காப்பாற்றி விடுகிறார்.

இப்படி ப்ரபஞ்சத்தின் கால அளவைகளுக்குள் கட்டுப்பட்டும் அறிவியலின் நிரூபிக்கப்பட்ட சித்தாந்ததுக்குள்ளேயே இந்த கதாபாத்திரம் செயல் பட்டிருப்பதால் அனுமார் சஞ்சீவி மலையையே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்க வாய்ப்பிருப்பது சாத்தியமே என்று என்னத் தோன்றுகிறது. ஆக ஒரு மலையைத் தூக்க முடியுமா அல்லது இப்படி தூக்கிக் கொண்டு ஏ பி டி பார்சல் சர்வீஸ் படத்திலிருப்பது போல பறக்கத்தான் முடியுமா? இது ஒரு கட்டுக்கதை. மாயாஜாலம் என்று கூறுபவர்களுக்கு... ஒளியின் வேகத்தில் பறந்து பாருங்கள்...ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி சாத்தியமே!



தற்காலத்தில் கூட ப்ரானனைக் கட்டுப்படுத்தி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடக் கற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் பறந்து காட்டி இருக்கிறார்கள். எந்த உபகரனமும் இல்லாமல் மனிதனால் உடலோடு பறக்கமுடியும் என்பது வரை இந்தக் காலத்திலும் கூட நிரூபிக்கப்பட்ட ஒன்றே. அதை டூப் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒளியின் வேகத்தில் பிரயானிக்கும் அளவிற்கு பயிற்சியெடுத்தவர் யாரும் இல்லை. அப்படி பிரயானித்தால் அப்போது அவர் பெயர் அனுமார்.

இப்படி இந்து தர்மத்தின் பல இதிகாச கதாபாத்திரங்கள் அறிவியல் மற்றும் மனோவியல் சூட்சமங்களோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டவையாகவே இருந்திருக்கிறது எனலாம்.

ஆகவே தான் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

8 comments:

Anonymous said...

நன்றி திரு ராம். நலம். நேத்து தான் நினச்சேன் எப்படி அனுமார் மலை தூக்கி இருப்பார் என்று...நீங்கள் பதிவு போட்டுடீங்க. அதற்கு ஒரு நன்றி. நான் இன்னும் படிக்கவில்லை படித்த பிறகு பின்னோட்டம் இடுகிறேன். நன்றி சுவாமி

Anonymous said...

கலக்கீட்டிங்க ராம் அண்ணே !!தலைய பத்தி அருமையான கட்டுரை போட்டு ...ஜெய் ஹனுமான் !!அப்பறம் முடிஞ்சா இந்த விஸ்வரூபம் எடுப்பது பற்றியும் சொல்லுங்கள் ...
அன்புடன்
குமார்

hayyram said...

நன்றி குமார்!

Madhavan Srinivasagopalan said...

When Hanumaar(1) travels at light speed, the parvath(2) also travels at the same speed. Won't the size ratio(between 1 & 2) & weight ratio (between 1 & 2) remain same ?

It will be better, we find an answer to this too. That will make your article doubtless.

Good message is conveyed by you.

hayyram said...

கருத்திற்கு நன்றி மாதவன். இந்த கட்டுரையை படித்த மாத்திரத்தில் என் நண்பர் மோகன் கூட இதே கேள்வியைக் கேட்டார். அது பற்றி நானும் யோசித்தேன். மலை என்பது ஏற்கனவே இறுகிய பாறை அந்தத் திடப்பொருள் சுருங்க வாய்ப்பிருக்காது என்று அனுமானிக்கலாம். உதாரணமாக திடப்பொருளான இரும்பால் செய்யப்பட்ட ராக்கெட் அதிவேகத்தில் பறந்து ஒளியாண்டுகளைக் கடந்து வேற்று கிரகத்தை சில மாதங்களில் அடைகிறது. அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படுவதில்லை. வேகத்தால் அதிகரிக்கக்கூடிய அதன் எடைக்கு ஈடான எரிபொருளும் முன்னமேயே நிரப்பி செலுத்தப்படுகிறது. இதை மனதில் வைத்து உருவான ஒரு ஒப்பீடு தான் இந்த கட்டுரை. எனவே சரியான ஒளியின் வேகத்தில் அனுமன் பறந்திரா விட்டாலும் அதற்கு நிகரான ஒரு வேகத்தில் பறந்திருக்க முடியும் என்று அனுமானிக்கலாம், அவ்வளவுதான். மற்ற படி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இது ஒரு கற்பனை ஒப்பீடே. அறிவியல் விதிகளுடன் பொருந்திப் போகும் சாத்தியக்கூறுகள் பற்றி அடியேன் மனதில் அலைபாய்ந்த ஒரு அலசல் தான். அப்படியே பகிர்ந்து கொண்டேன். எனவே ஒரு முழுமையான அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான வடிவத்தைக் கொடுத்து இயற்பியல் ஃபார்மொலாக்களை கேட்டு விடாமல் கொஞ்சம் பொருத்தருளுங்கள். மேலும் புதிய விஷயங்களை நிறைய பகிர்ந்து கொள்வோம். உங்கள் தொடர்ந்த கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

http://scienceline.ucsb.edu/getkey.php?key=1571

Dr.Anburaj said...

அனுமாா் தூக்கிச் செல்லும் மலையும் ஒளியின் வேகத்தை அடையும்போது இரு மடங்கு எடை கொண்டதாகிவிடுமே. சாியா தவறா. அறிவியல் துறையில் நாம் சிறந்திருந்தோம் என்பதற்கு வேறு காரணங்களைத் தேடலாம். இதுபோன்ற விசயங்களை தோ்வு செய்வது பொருத்தமானதாக இருக்க வேண்டியதில்லை.