அந்த ஆன்மா ஒளிமயமானது, வேறெதை விடவும் மிக அருகில் இருப்பது, இதயக்குகையில் உறைவது. வாழ்க்கையின் மேலான லட்சியம் அந்த ஆன்மாவே. செயல்படுகின்ற, மூச்சுவிடுகின்ற இமைக்கின்ர அனைத்து உயிரினங்களும் அதனையே சார்ந்துள்ளன.
தூலமானதும் நுண்ணியதும் அதுவே. உயிரினங்களின் அரிவிற்கு அப்பாற்பட்டது அது. போற்றத்தக்க அந்த ஆன்மாவையே அறிய வேண்டும்.
இனியவனே! அந்த ஆன்மா ஒளிமயமானது, அணுக்களுக்கெல்லாம்
அணுவானது. உலகங்களும் உயிரினங்களும் அதிலேயே நிலைபெற்றுள்ளன.
அந்த ஆன்மா அழிவற்றது. அதுவே இறைவன், பிராண்ண், வாக்கு, மனம் அனைத்தும் அதுவே.
அது உண்மையானது, மரணமற்றது. அதனையே அறிய வேண்டும். அதனை அறிவாய்.
இனியவனே! உபநிஷதங்கள் கூறுகின்ற பெரிய ஆஹுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தால் கூர்மையாக்கப்பட்ட அம்பை அதில் வைத்து, இறை எண்ணங்களால் நிறைந்த மனமாகிய நாணை இழுத்து இலக்கை அடிக்க வேண்டும். அந்த இலக்கே இறைவன். அவரை அறி.
ஓம்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனத்தினனாக இருக்க வேண்டும். அம்பைப் போல அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.
வானுலகம், பூமி, இடைவெளி மற்றும் மனம், பிரானன்கள், புலன்கள் என்று
அனைத்தும் யாரில் நிலைபெற்றுள்ளனவோ அந்த ஒரே ஆன்மாவை அறியுங்கள். மற்ற பேச்சுக்களை விடுங்கள். மரணமில்லா பெருநிலைக்கான பாலம் இதுவே.
- முண்டக உபநிஷத்து!
.
3 comments:
அருமை
Very Good One sir
அருமை
Post a Comment