ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 4
- நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
- என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
- தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
- தலையாலே தான்தருத லால்
ஒருவருக்கு நாம் உதவி செய்து விட்டால் அதே போன்ற உதவியை அவர் நமக்குத் திருப்பி எப்போது செய்வாரோ என்று நினைத்திருக்க வேண்டாம். தளராமல் வளர்ந்து நிற்கும் தென்னை மரம் தரையிலிருந்து தானுண்ட நீரை தன் தலை மேலிருந்து இளநீராய் நமக்கு பிரதிபலன் எதிர்பாராமல் தருவது போலே பலன் எதிர்பாராமல் உதவுவதே மனித மான்பு!
- தமிழ்ப் பாட்டி ஒளவையார்
மொத்தத்தில் தர்மம் தலைகாக்கும் என்கிறார். 'அன்கண்டீஷனலாக' உதவ வேண்டும் !
.
No comments:
Post a Comment