உலகில் இருப்பது இரண்டே இனம்
ஒன்று ஆணினம் மற்றொன்று பெண்ணினம்
இதில் ஓரினத்திற்கு மட்டுமென்ன தனி தினம்?
தினம் தினம் மங்கயரைக் கொண்டாடும் திருநாட்டில்
தனி தினம் அறிவித்து தனிமைப்பட்டுப் போவதேன்?
மங்களமாக கொண்டாட சாதித்ததென்ன சமூகத்தில்?
ஆண்களையெல்லாம் பெண்களைப்போல் ஆக்கவென்னி
வஞ்சகமாய்ப் பெண்களுகென்றே தனியாக
சட்டங்கள் இயற்றி சாதகமாய்
ஆண்களையெல்லாம் சிறையில் தள்ளி
வென்று விட்டோம் ஆணினத்தை
என்று சொல்லிக் குதித்தாட
வைத்தீரோ மகளிர் தினம்?
மாமியாரை மாமனாரை பள்ளி செல்லும் மச்சினரை,
வஞ்சமில்லாமல் யாவரையும் வஞ்சித்துச் சிறைதள்ளி
வரதட்சினைக் கொடுமையென வழக்குதொடுத்துக்
கொண்டாட மகளிருக்கோர் தினம் வேண்டும்
என்றென்னி வைத்தீரோ மகளிர்தினம்?
மீசை முளைத்தாலும் நீ பெண்தான்,
மீசை இல்லாவிட்டாலும் நான் ஆண் தான்
என்று எகத்தாளம் பேசி
இயற்கையின் படைப்பையே இழிவு
செய்து கொண்டாட தினமொன்று
வேண்டுமென வைத்தீரோ மகளிர் தினம்?
குடித்துக் கூத்தடித்து
புகைபிடித்து உடல்கெடுத்து
முலைதெரிய உடையணிந்து
ஒழுக்கம் கெட்ட நாகரீகத்தை
வளர்த்து விட்டோம் பாரதத்தில்
என கொண்டாடிக் கூத்தாட
வைத்தீரோ மகளிர் தினம்?
கடைத்தெருவில் பேருந்தில் நடுத்தெருவில்
வீடுகளில், பெண்ணியப் பேய்களால்
ஆண்களுக்கு நிகழ்ந்துவரும் அவமானங்கள்
எத்தனை? அவமானங்கள் எத்தனை?
ஆணை ஓர் பெண்ணடித்தால் பெண்ணுக்கு வீரமடி!
அவளையே ஓர்ஆண் அடித்தால் வன்கொடுமை கோரமடி!
தற்காலப் புருஷன்கள்,
பெண்டாட்டி கால்படிந்து
வாய்மூடி சமைத்துப் போட்டால்
நாகரீகக் கணவன்களாம்!
அக்கணவன் கைமாறாய் தாகம்
தீர்க்க தண்ணீர் கேட்டால்
பத்தாம் பசலி ஆண்மகன் என்று
விவாகரத்தே கேட்டிடுவாள்... நாகரீகநங்கயராம்!
கடைத்தெருவில் பேருந்தில் கடைந்தெடுத்த
பொறுக்கிப் பெண்கள் ஆண்கள் மீது
தான் இடித்தால் நாகரீகமென்பார்கள்
ஆண் இடித்தால் அதேகணத்தில் ஈவ்டீசிங் என்பார்கள்!
பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டுமாம்!
ஆண்கள் மட்டும் அத்துனைபேரும் அம்பானிகளின் பேரன்களா?
அடிமைப் பிழைப்பில் மாட்டிக் கொண்டு
குடும்பம் காக்க ஓடாய்த் தேய்ந்து
நாக்கு தள்ளியே வாழ்நாள் தொலைக்கும்
ஆணுக்கும் வேண்டும் பொருளாதாரச் சுதந்திரம்!
பெண்ணாய் விரும்பி விவாகரத்து கேட்டாலும்
பெண்ணுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் எனச்சொல்லும்
பெண்ணியச் சட்டத்திலிருந்து விடுபட்டு வெளியேற
ஆண்களுக்கும் வேண்டும் சட்டச் சுதந்திரம்!
ஆண் இறந்தால் சொத்திற்கெல்லாம்
மனைவியையே வாரிசாக்கி ஆணைப்
பெற்ற தாய்,தந்தையரை நடுத்தெருவில்
அலைய விடும் அடாவடி சட்டத்திலிருந்து
அப்பாவி ஆண்களின் பெற்றோரைக் காக்க
ஆணுக்கும் வேண்டும் உரிமைச் சுதந்திரம்!
பெண்ணியப் பேய்களின் அடாவடி
ஆட்டத்தைத் தடுத்து நிறுத்திட
ஆண் இனத்தைக் காத்திட
ஆண்களுக்கும் வேண்டும்
உணர்வுச் சுதந்திரம்!
பாரதத் திருநாட்டில்
பண்போடு வளர்ந்துவந்த
பெண்களெல்லாம் அடிமையென்று
வாய்கூசாமல் பேசிவிடும் பெண்ணியப்
பேய்களுக்கு ஆன்போடு ஆண்டவன்
ஆசீர்வாதம் அளிப்பானாக..
அடுத்த ஜென்மமொன்று
அவர்களுக்கு உண்டென்றால்
ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும்
பிறந்து மகிழந்திட வேண்டுமென்று!
.
5 comments:
////ஆணை ஓர் பெண்ணடித்தால் பெண்ணுக்கு வீரமடி!
அவளையே ஓர்ஆண் அடித்தால் வன்கொடுமை கோரமடி!
தற்காலப் புருஷன்கள்,
பெண்டாட்டி கால்படிந்து
வாய்மூடி சமைத்துப் போட்டால்
நாகரீகக் கணவன்களாம்!
அக்கணவன் கைமாறாய் தாகம்
தீர்க்க தண்ணீர் கேட்டால்
பத்தாம் பசலி ஆண்மகன் என்று
விவாகரத்தே கேட்டிடுவாள்... நாகரீகநங்கயராம்! ////
:)))))
\\அக்கணவன் கைமாறாய் தாகம்
தீர்க்க தண்ணீர் கேட்டால்
பத்தாம் பசலி ஆண்மகன்\\this is true..
arumaiyaana kavithai kalakeeteenga
Like International Women's day, International Men's day is also being celebrated. I think it is on Nov 19. I'm not sure of the date.
Welcome தனி காட்டு ராஜா
thanks kumar
mr.madhu,
//Men's day is also being celebrated// அதை யாரும் கொண்டாடுவதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் இதற்கெல்லாம் ஒரு தினமா? "நீ ஆணாய்ப் பிறந்ததற்கு எனது வாழ்த்துக்கள்" என்று ஆணுக்கு ஆண் சொல்லிக்கொள்ள ஒரு தினமா? அல்லது அந்த ஒரு தினம் தான் ஆணாக இருக்கப் போகிறார்களா? அர்த்தமற்ற தினங்களை அடுக்கி அதை மக்கள் மத்தியில் தினித்து மடையர்களாக்கப் பாரிக்கிறார்கள். ஆண் பெண் என்பதையும் தாண்டி மனிதர்கள் பண்புகளுக்காக போற்றப்பட வேண்டும் என்று கற்றுக்கொடுத்த நாட்டில் வெறும் இனப்பிரிவைக் கொண்டாட ஒரு தினமாம்..அதையும் கொண்டாடுகிறார்கள் மூட ஜனங்கள்!
I do not know who celebrates it, but there is a day so.
It is western culture to celebrate a day for everything. Men's day, women's day, mother's day, father's day, parents' day, wife's day, etc. Let us not comment on that culture. If our people wish to celebrate, let them do it without disturbing others. Anyway festivals and celebrations unite people.
Post a Comment