Tuesday, March 22, 2011

வேதாந்திரி மகரிஷியின் அருள் மொழிகள்!




பாவத்தின் பதிவுகள் மனித மனத்தில் எப்படித் தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சிகுரிய விஷயம். மனிதனின் பரினாம வளர்ச்சியோடு சேர்ந்து வந்த பல விலங்கினப் பதிவுகளில் இந்த பாவப்பதிவும் ஒன்று. 


முதல் மனிதன் விலங்கினத்தின் வித்துவிலிருந்து வந்தவன். விலங்கினங்கள் உணவிற்காகப் பிற விலங்குகளைக் கொன்று வாழ்கின்றன. பிற உயிர்களினுடைய வாழும் உரிமையைப் பறித்தே வாழ்கின்றன. இவ்வாறே பிறர்வளம் பறித்து வாழ்தல் என்பது மனிதனிடமும் வந்திருக்கின்றது.


அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் இக்குணத்தை மாற்றிக் கொள்ளச் சிந்திக்கவில்லை. 


"நான் ஏன் பிறருடைய வாழ்க்கையைப் பறித்து வாழ்கிறேன்?" என்ற எண்ணம் வந்தவர்களெல்லாம் ஞானியராகி விட்டனர். அவ்வாறு சிந்திக்காதவர்கள் எல்லோரும், ஒருவர் மற்றவரை வாழவிடாது செய்து கொண்டிருக்கின்றனர்.


இது தான் இன்றைய உலகம். பாவம் என்பது விலங்கினத்திலிருந்தே வந்தது. மனித உருவம் விலங்கினத்தின் வித்துத் தொடரிலிருந்தே தோன்றியது.


ஆதலால் அங்கேயே பாவத்துக்கான அடிப்படை ஆரம்பித்து விட்டது. எனவே விலங்கின பதிவுகளிலுருந்து நமக்கு இன்னும் எச்சமாக தொற்றிக் கொண்டிருக்கும் மனப்பதிவுகளைப் புரிந்து கொண்டு அவற்றை நம்மிடமிருந்து அகற்றாதவரை நாம் இன்னும் விலங்குகளே ஆவோம்!






.

1 comment:

அகோரி said...

அருமையாக உள்ளது
உண்மையை உணராதவரை பாவங்கள் தொடர்ந்துகொண்டுதநிருக்கும்