பெண் எது செய்தாலும் சரி! அதுவே ஆண் செய்தால் கொடுமை?
இந்த செய்தி எத்தனை நாள் பழையதோ, இப்போதுதான் பார்க்க நேர்ந்தது! ஒரு ஆணை அடித்து மிரட்டி கட்டாயத்திருமணம் செய்து வைக்கிறார்கள். இதே போல ஒரு ஆணை பல ஆண்டுகள் காதலித்து ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசிவிட்டு, உணர்ச்சிகளுக்கு வடிகாலாக பயன்படுத்திவிட்டு சத்தமே இல்லாமல் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் எத்தனையோ பேர் எண்ணிலடங்காமல் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களின் ஏமாற்று வேலைகள் வெளியே தெரிவதில்லை. அவர்களில் ஒரு பெண்ணையேனும் இப்படி அடித்து மிரட்டி ஆண் வீட்டார் திருமணம் செய்து வைத்திருந்தால் அதை இதே மீடியா இப்படித்தான் ஏதோ பெருமைக்குரிய சமாச்சாரமாக காட்டியிருக்குமா?
இந்த கருமத்தைச் செய்யும் ஒருவனுக்கு செகுவேரா டி ஷர்ட் வேறு! புரட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள்!
.
No comments:
Post a Comment