Saturday, May 2, 2009

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்:


சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்:

அன்பிற்குறிய சகோதர சகோதரிகளே!  

கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். திட்டம் எதுவும் தேவையில்லை. இதற்க்கு திட்டமிடுதலால் ஆகப்போவதும் ஏதுமில்லை.  

ஒரு மனிதனை வீறு கொண்டு எழுந்து வேலை செய்ய வைப்பது எது? பலம். பலமே புண்ணியம், பலவீனம் பாவம். 

வெடி குண்டின் ஆற்றலுடன் உபநிஷத்துகளிலிருந்து வெளிவருகின்ற ஒரு வார்த்தை இருக்குமானால் அது அச்சமின்மை என்பதேயாகும். அச்சமில்லாதவன் இந்த உலகத்தை வெல்வான்.  

இறைவன் ஒளிர்வதாலேயே அனைத்தும் ஒளிர்கின்றன. எங்கெல்லாம் எதுவெல்லாம் அறிவுமயமாக ஒளிர்கிறதோ சூரியனில் வீசுகின்ற ஒளியாகட்டும் அல்லது நம் அறிவில் ஒளிர்கின்ற சைதன்யமாகட்டும் அது இறைவனேயன்றி வேறில்லை.  

தாமரை இலை போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும். அது நீரிலேயே இருந்தாலும் நீரால் நனைக்கப்படுவதில்லை. மனிதனும் அவ்வாறே இந்த உலகில் பற்று எதுவும் இல்லாமல், உடல் உலகிலும் உள்ளம் இறைவனிடதிலுமாக வாழவேண்டும். ஏனெனில் இறையடி சேர்தலே நிரந்தரம்.
 
பெரிதும் , சிறிதும் எல்லாமே கடவுள் தான்; வேறுபாடெல்லாம் ஆற்றலின் வெளிப்பாட்டில் தான்.  உருவத்தில் இல்லை.