நீ யாருக்காக வேலை செய்கிறாயோ அவர் உனது தேவைகளை எல்லாம் கவனித்துக் கொள்வார். உன்னை இந்த உலகிற்கு அனுப்புமுன்னர் நீ வாழ்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் இறைவன் செய்தே வைத்திருக்கிறார்.
காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கி நிற்பதாலேயே கப்பல் திசை மாறாமல் செல்கிறது. அது போல மனிதனின் உள்ளமும் இறைவனை நாடி நிற்கும் வரையில் அவன் இந்த உலக வாழ்க்கையில் வழி தவற முடியாது.
இறைவனின் திருப்புகழைப் பாடுகின்ற இடத்தில் தீய சக்திகள் நெருங்குவதில்லை. நோயும் உடலும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளட்டும். மனமே நீ எப்போதும் ஆனந்தமாக இரு.
இறைவனை நெருங்க நெருங்க ஒருவன் அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்கிறான். முடிவில் அவரிலேயே ஒன்று கலந்துவிடுகிறான்.
எப்போதும் சிந்தித்துப் பேசு. மனமும் வாக்கும் ஒன்றினைந்து செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு பதில் கட்டயம் கிடைக்கும்.
கடவுள் கற்பக மரம் போன்றவர். வேண்டிய அனைத்தையும் கற்பக மரம் தருவது போல, இறைவனை அடைந்தவனும் எல்லா ஆசைகளையும் கடந்து நிம்மதி பெறுகிறான்.
No comments:
Post a Comment