இந்து தர்மத்தின் எந்த சடங்கும் மூடநம்பிக்கை கிடையாது. இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது சப்தமாக மேளம் வாசிப்பது ஏன் தெரியுமா?
தாலி கட்டும் நேரத்தில் அமங்களமான வார்த்தைகள் எந்த மூலையிலிருந்தும் கேட்கக் கூடாது. மாங்கல்யம் சூட்டப்படும் போது ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒரு தாய் தன்னுடைய மகனையோ மகளையோ மற்றவர்களையோ பார்த்து, சனியனே நாசமாய்ப்போக என்று திட்டக்கூடும். அந்த அமங்களமான வார்த்தைகள் மணமக்களின் காதில் விழக்கூடாது.
எந்த மூலையிலிருந்தும் தவறான வார்த்தை விழக்கூடாது என்பதற்க்காகவே அங்கே மேளம் கொட்டப்படுகிறது - கண்ணதாசன்; அர்த்தமுள்ள இந்து மதம்.
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.