தமிழ் ஆண்டுகள்:
உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.
அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.
இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம். கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.
எண் தமிழ் வருடங்கள்
1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 நள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய