Tuesday, May 5, 2009

விதுர நீதி


பாண்டவர்களை அடைந்த‌ விதுரரை ஐவரும் அன்புடன் வரவேற்க்கின்றனர். ஓர் அழகான இருக்கையில் அவரை அமர்த்தித் தகுந்த முறையில் மரியாதை செய்தனர். யுதிஷ்டிரர் வினவிய பிறகு, விதுரர் த்ருதராஷ்ட்ரர் கூறிய வார்த்தைகளை அவரிடம் சொன்னார்: 

" திருதராஷ்ட்ரருக்கு நான் அங்கிருப்பது தேவையில்லை என்று தோன்றிவிட்டது. இதனால் நான் இங்கு வந்துவிட்டேன். அவருடைய மனம் மோத்தினாலும் பற்றுதலாலும் கலங்கித் தெளிவில்லாமல் இருக்கிறது. தர்மம் செய்வதற்கான வார்த்தைகளைக் கேட்பதற்க்குக் கூட அவர் விரும்பவில்லை. இப்போது கௌரவர்களுடைய அழிவு நெருங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பகைவர் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அனுகூலமான காலத்தை எதிர்பார்த்திருப்பவனுக்குப் பின்னால் சுகம் நிச்சயமாகக் கிடைக்கும்." என்று கூறினார்.  

விதுரர் மேலும் பாண்டவர்களுக்கு இவ்வாறு உபதேசிக்கிறார்:  

"செல்வச் செழிப்பில் இருக்கும் போதும் , சுகங்களை அனுபவிக்கும் போதும் தானே தன்னந்தனியாக அவற்றை அனுபவிக்காமல் பிறருக்கு உதவி செய்து எவன் அவற்றை சமமாகப் பங்கு கொடுக்கிறானோ, அவனுக்கு துக்கம் நேர்ந்த காலத்தில் துன்பச் சுமையை அவன் மட்டும் தனியாகச் சுமக்க வேண்டிவராது.  

அவனுடைய இன்னல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் கிடைப்பார்கள். ஆதரவாளர்கள் கிடைப்பதற்கான மிகச் சிறந்த உபாயம் இதுதான். உதவிக்கு ஆட்கள் கிடைத்த பின் , வேண்டியனவெல்லாம் கிடைத்து விட்டன என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  

பணிவுள்ளவனாகத் தன்னை க்கிக் கொள்வதுதான் நன்மை பயக்கும். இதனாலேயே அவர்களுக்கு உயர்வு ஏற்படுகிறது." - விதுரர்