Monday, January 25, 2010

கோபத்தை குறைக்க பத்து கட்டளைகள்!


கோபத்தைக் குறைக்க வழிமுறைகள் என்று நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்தார். அந்த நண்பருக்கு நன்றி. இது போன்ற சில விஷயங்கள் எழுத்திற்கு அழகு சேர்க்கும் நிஜத்தில் செல்லாது என்று தோன்றும். சரி, முயற்சி பண்ணி பாப்போம்.

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

(அப்படியும் முடியலைன்னா?)

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

(அப்பவும் தனியலைன்னா?)

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

(போடா ங்கொயாலன்னா?)

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

(முடியாது போன்னா?)

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

(அப்பவும் அடங்கலேன்னா?)

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

(அப்படியும் முட்டிக்கிட்டா?)

7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

(அப்பவும் படியலன்னா?)

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

(நம்பர் தெரியலைன்னா?)

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

(இனிமே பொறுக்காதுன்னா?)

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

(தண்ணியில்லைன்னா?)

ரொம்ப கஷ்டம் தான். முயற்சி பண்ணி பாப்போம்! முயற்சித்து வெற்றி பெற்றவர்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்! சரியா!


9 comments:

அ. நம்பி said...

உங்கள் நண்பர் தெரிவித்த வழிமுறைகள் சரியானவை; உங்கள் குறுக்குக் கேள்விகளும் சரியானவைதாம். ஆனால் முயன்று பார்ப்பதில் தவறில்லை.நூறு விழுக்காடு வெற்றி கிட்டாவிட்டாலும் ஓரளவேனும் வெற்றி பெற இயலும்.

hayyram said...

//ஆனால் முயன்று பார்ப்பதில் தவறில்லை.நூறு விழுக்காடு வெற்றி கிட்டாவிட்டாலும் ஓரளவேனும் வெற்றி பெற இயலும்.//

முயற்சி செய்வோம். நல்லது நடந்தால் சரிதான்.

நன்றி
நம்பி அவர்களே.

Anonymous said...

Hello,
Try to use a Indian Girl/Boy image instead of Foreign Image...

Bye
JXXXX

hayyram said...

//Anonymous said... //

அதுக்கு ஏன் கோபப்படறீங்க?

வால்பையன் said...

அப்பவும் முடியலைனா, உங்க கன்னத்தில் நீங்களே நாலு அடி அடிச்சிகோங்க!

hayyram said...

//அப்பவும் முடியலைனா, உங்க கன்னத்தில் நீங்களே நாலு அடி அடிச்சிகோங்க!// இந்த அப்ரோச்சும் எனக்கு புடிச்சிருக்கு ராசா! நெக்ஸ்ட் மீட்பன்றேன்.

ஸ்ரீநி said...

Vanakkam,
Neengal sonnaal nambuveergala yendru theriyadhu. aanal indru ungal peyarudaya oru padhivarai kaalayildhaan thedikondu irundhaen.

Andhap padhivar tami brahmins yendra valayil " Tamil cinemavil Brahmanargal endra thalaippil oru padhivu yeludhi irundhaar.

Adhu neengala.
Aam yendraal vikky66@gmail.com yendra min-elakkathirrku oru sodhanai anjal anuppungal ungaloda pagirvadharkku sila vishayangaludan kaathiruppaen

http://sangadhi.blogspot.com/2010/01/blog-post_20.html


Vikram.S.Vaidya

hayyram said...

வணக்கம் விக்ரம்.

தமிழ் ப்ராமின்ஸ் ல் பதிவிட்டிருந்தது நான் தான். உங்கள் வருகைக்கு நன்றி.
அடிக்கடி வாருங்கள். நிறைய பகிர்ந்து கொள்வோம்.

திருஞான சம்பந்தர் said...

Exhaust through physical exercise. Will help in long run