அந்த நாள் அலுவலக நேரம். பேருந்திற்காக எல்லோரையும் போல காத்துக்கொண்டிருந்த காலை. பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்து புறப்பட தையாரானது. தூரத்திலிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பிராமணப் பெரியவர் அந்தப் பேருந்தில் ஏற ஓடி வந்தார். அதற்குள் பேருந்து நகர்ந்து விடவே 'நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ!' என்று கத்திக் கொண்டே அருகே வந்து அடித்துப் பிடித்து ஏறினார். ஐயோ பாவம் பெரியவருக்கு என்ன அவசரமோ என்று நான் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் 'கல கல' வென சிரிப்புச் சத்தம் கேட்டது. அருகாமையில் நின்றிருந்த கல்லூரி யுவதிகள் மூன்று பேர் குடுமி வைத்த அந்த பெரியவர் பேருந்தை நோக்கி நிறுத்துங்கோ! நிறுத்துங்கோ! என்று கூறி ஓடி வந்ததைப் பார்த்து பொத்துக் கொண்டு சிரித்தார்கள்.
அவர்கள் அந்தக் காட்சியை ஒரு நகைச்சுவை காட்சியைப் போல் பார்த்திருக்கிறார்கள். ப்ராமணப் பெரியவரின் அவஸ்தை இவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரனம் தமிழ் சினிமா. நடிகர் விவேக் முதல் பலதரப்பட்ட நடிகர்களும் குடுமி வைத்த ப்ராமணரைக் காட்டியே சிரிப்பு மூட்டி பழக்கப்படுத்தி விட்டதால் இந்த குடுமி வைத்த பிராமணரைப் பார்த்த உடன் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் இந்த யுவதிகள். அவசரத்தின் அவஸ்தையில் ஓடும் ஒரு வயதானப் பெரியவர் என்ற பச்சாதாபம் கூட அவர்களிடம் உண்டாகவில்லை. என்ன அவசரத்தில் என்ன அவஸ்தையில் ஒரு பெரியவர் பேருந்து பிடிக்க ஓடியிருப்பாரோ என்கிற யோசனையையும் மீறி பிராமணப் பெரியவர் அவஸ்தைப் படுவது பொத்துக் கொண்டு சிரிப்பை வரவழைத்தது பிராமணர்களை தொடர்ந்து காமெடி பீஸுகளாகவே அடையாளப்படுத்தின் தமிழ் சினிமாவின் தாக்கம்.
சமீபத்தில் குரு சிஷ்யன் என்ற சத்தியராஜ் சுந்தர் சி நடித்த பட்த்தை பார்க்க நேர்ந்தது. படத்தில் ஒரு காட்சி வருகிறது. சுந்தர் சி சத்தியராஜை ஒரு விபச்சாரி வீட்டிற்கு விஷயத்தைச் சொல்லாமல் அழைத்துப் போகிறார். அங்கே ஷகிலா பல பெண்களை சத்தியராஜிடம் காட்டி விட்டு கடைசியாக திருநெல்வேலி அக்கிரஹாரத்து பொன்னு, இவ மகுடிக்கு மயங்காத ஆம்பளைங்களே கிடையாது என்று கூறி ஒரு பெண்ணை வரவைப்பதாகக் காட்சி. வருபவள் ஷ்பஷ்டமாக மடிசார் கட்டிக்கொண்டு வருகிறாள். “கேட்டேளோ இங்கே வரமாட்டேளோ அங்கே” என்ற பழையாடலின் ரீமிக்ஸில் அத்தனை பெண்களும் மடிசார் கட்டிக்கொண்டு ஆடுகிறார்கள்.
பிராமணப் பெண்கள் இன்று மடிசார் கட்டிக்கொண்டு இருக்கவில்லை தான்
(சில வைதீக பிராமணர் வீடுகளில் இன்றும் தினசரி மடிசார் உண்டு). ஆனால் மடிசார் என்றாலே ப்ராமணர்களின் உடை என்று சினிமாவினாலேயே அடையாளப்படுத்தி விட்டு அதே போன்று பெண்களை விபச்சாரிகளாகக் காட்டி ஆடவிடுவதும் ஒரு ஜாதியினரை அசிங்கப்படுத்தும் செயலாக சினிமாக் காரர்களுக்கு ஏன் தோன்றாமல் போகிறது?
சில மாதங்களுக்கு முன்பு வெளியான அங்காடித்தெரு திரைப்படத்தில் வயதிற்கு வந்த சின்னப்பெண்ணை ஒரு பிராமண மாமி நாய் கூண்டில் அடைத்து வைத்தது போன்ற காட்சிப்படுத்தல் வைத்திருந்தார்கள். 'நாங்க ரொம்ப ஆச்சாரமானவா, உன் தங்கச்சிய பின்னாடி வெச்சிருக்கேன் போய் கூட்டின்டு போ' என்று வசனம் பேசும் பிராமண மாமியையும் காட்டி இருப்பார்கள். நாய் கூண்டுக்குள் அடைத்து வைக்கும் அளவிற்கு கொடுமைக்காரியை சித்தரிக்க இவர்களுக்கு பிராமண சமூக பெண்கள் தான் கிடைத்ததா? எல்லா ஜாதியிலும் விதவிதமான கொடுமைக் காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவான ஜாதியில்லாத ஒரு கொடுமைக்கார பெண்ணை சித்தரித்திருக்க கூடாதா?
கொடுமைககரர்களை அம்பலப்படுத்தும் துணிவு மிக்க இந்த கனவான்கள் எந்த படத்திலாவது 'தலித்' மனிதன் வாயில் மலம் தினித்த ஜாதிக்காரர்களை அவர்கள் ஜாதீய அடையாளத்தை குறிப்பிட்டு காட்சிப்படுத்தி இருப்பார்களா? எங்கள் தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு கூட நீ நடக்ககூடாது என்று கூறும் ஜாதீய மனிதர்களை அவர்களின் ஜாதி அடையாளத்தோடு இவர்கள் காட்சிப்படுத்தி இருப்பார்களா? கீழ்விஷாரம், காயல்பட்டினம் போன்ற ஊர்களில் முஸ்லீம் பெரும்பான்மையினரால் இந்துக்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறார்கள் என்பதை படமாக்கி இருப்பார்களா? அவற்றிர்கெல்லாம் துணிவு தான் இவர்களுக்கு இருக்கிறதா?
ஆனால் பிராமணர்கள் என்றாலே கொடுமைக்காரர்கள் என்கிற உணர்ச்சியை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி அதன் மூலம் பிராமண காழ்புணர்ச்சியை தூண்டி விட்டு குளிர்காய எத்தனிக்கிறார்களே ஒழிய சமூகத்தின் நிஜமான கொடுமைகள் இவர்களால் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை.
இப்படி வெளியான இந்த அங்காடித்தெரு திரைப்படத்தின் வசனகர்த்தாவான திரு. ஜெயமோகனிடம் இது பற்றி வினவியபோது அவரது பதில் "நீங்கள் பிராமணராக உணரும் வரை அந்த அம்புகள் வந்து தைத்தபடியேதான் இருக்கும். இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும்" என்பதுதான். (தொடர்புடைய சுட்டி) அதாவது பிராமணர்களை இப்படி மோசமாக காட்டாதீர்கள் எங்கள் மனம் புண்படுகிறது என்று கூறினால் அப்படித்தான் புண்படும். நீங்கள் அடக்கிகொள்ளுங்கள் என்கிறார்கள்.
'உத்தம புத்திரன்' பட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், கௌண்டர்களை இழிவு படுத்தியதாக கூறப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறியதோடு, தங்கள் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
ஆனால் அப்படித்தான் செய்வோம், நீங்கள் அடக்கிகொள்ளுங்கள் என்ற பதிலை இந்த சினிமாக்காரர்களால் கௌண்டர்களிடம் ஏன் கூற முடியவில்லை? தேவர்களும் கௌண்டர்களும் புண்படும் போது அவர்களிடம் மன்னிப்பு கோர தயாராகும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் திரையில் காட்சிப்படுத்துகிறார்கள்?
இது போன்ற பல கேள்விகளை அடுக்கிய பின்னர் ஜெயமோகன் அவர்கள் ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டார். அதாவது "அதேசமயம் தம்ழி சினிமாக்களில் பலர் பிராமணர்களை திட்டமிட்டே இழிவுசெய்கிறார்கள், பிறசாதிகளை அப்படிச்செய்ய துணிவதில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்" என்றார். (தொடர்புடைய சுட்டி) இந்தக் கருத்தை வெளிப்படையாக சொல்வதற்கு கூட பலர் தயங்கும் நிலையில் திரைத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கும் ஜெயமோகன் எழுத்துக்களில் பார்ப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஒரு வரியாவது ஏதாவது ஒரு சினிமா கதாசிரியரையோ, இயக்குனரையோ அல்லது நடிகர்களையோ யோசிக்க வைத்தால் அதுவே பெரிய நிகழ்வாக இருக்கும்.
ஜாதியில்லாமல் சினிமா எடுத்தால் கதை கெட்டு விடும் என்பது மதிப்பிற்குரிய ஜெயமோகனின் கருத்தாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூச்சல் போடும் சினிமாக்காரர்களால் கேவலம் இரண்டரை மணிநேர சினிமாவை ஜாதி இல்லாமல் எடுக்க முடியாது என்று கூறுவது பொட்டைத்தனமான வாதம்.
பிராமண துவேஷிகளை அதிர வைத்த திரைப்படம் 'அந்நியன்'
இங்கே குறிப்பிடப்படப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அந்நியன் படம் வந்த போது 'பார்ப்பனத் திரைப்படத்தை பார்க்காதீர்கள்' என்று போஸ்டர் அடித்தே ஒட்டினார்கள் பிராமண துவேஷிகள். அதன் காரணம் பின்னால் தான் புரிந்தது. வழக்கமாக பிராமணர்களை காமெடிப்பீஸாகவும், ஆபாசமாகவும், கொடுமைக்காரர்களாகவும் மட்டுமே சித்தரித்து வெளிவரும் சினிமாக்களைப் பார்த்து பழகிப்போய் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த பிராமண துவேஷிகள் நவீன கலத்தில் பிராமணனை சமூக அக்கரை உள்ளவனாகவும், இரக்கமுள்ளவனாகவும், நல்லவனாகவும் காட்டியது பொறுக்கவில்லை.
அவர்களால் தாங்கிகொள்ள முடியாத இன்னொரு முக்கியமான விஷயமும் இதில் இருக்கிறது. அதாவது பிராமணப் பெண் பிராமண ஆணையே கல்யாணம் செய்வதாக அந்தத் திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் வைத்து விட்டார்கள். இந்த அதிர்ச்சியை பிராமண துவேஷிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ தாங்கள் மோசம் போய்விட்டதாக எண்ணினார்கள். அதெப்படி சினிமா விதிகளை மீறி ஒரு ப்ராமணப் பெண் பிராமண ஆணையே திருமணம் செய்ய முடியும். ஆகவே இது ஒரு பார்ப்பனத் திரைப்படம் என்று கூறி அதை பார்க்காதீர்கள் என்றும் போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள். சினிமாவில் பிராமண துவேஷத்தை வியாபாரமாக்கியே தீருமளவிற்கு இருக்கும் இந்த நிலை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது.
பிராமணர்களுக்கு சங்கங்கள் இருந்தும் இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் போராடிக் கொண்டிருப்பதில்லை. அது நேரத்தை வீனடிக்கும் செயல் என்றும் அந்த நேரத்தில் நாம் உருப்பட ஏதாவது வழியைப்பார்க்கலாம் என்றும் இருந்து விடுகிறார்கள். இரண்டாவது இவர்களிடம் போராடி ஒன்றும் பிரயோஜனப்படாது என்கிற எண்ணமாகவும் இருக்கலாம். மூன்றாவது நாம் ஏதாவது போராடப்போய் இன்னும் அதிகமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரலாம் என்ற பயமும் காரணமாக இருக்கலாம். ஆனால் கேள்விகள் மட்டும் மனதில் எழாமல் இருப்பதில்லை.
தியேட்டருக்கு முன்னே போய் படத்தை ஓடவிடமாட்டோம் என்று போராடினால் பயப்படும் திரையுலகம் தூரத்தில் இருந்து கொண்டே இப்படிச் செய்ய வேண்டாமே என்று மெதுவாகக் கேட்டால் ஏறி மிதிப்பது ஏன்?
ஸ்ரீரங்கத் தெருவில் மறைந்த ராமசாமி நாயக்கரின் தோற்றம் கொண்ட உருக்கல்லை யாரோ சேதப்படுத்தினார்கள் என்பதற்காக சென்னை அயோத்தியா மண்டபத்தில் சென்னை அயோத்தியா மண்டப வாசலில் ஐம்பது பைசா லாபத்திற்கு பூனூல் விற்றுக்கொண்டிருந்த கிழவரை பிராமண துவேஷ காழ்ப்புணர்ச்சியால் வெட்டிப் போட்டது ஒரு கும்பல். எத்தனையோ பிராமணர்கள் உடன் பழகுபவர்களாலேயே தினந்தோறும் பரிகசிக்கப்பட்டு வருகிறார்கள். இது போன்ற சினிமாக்காரர்கள் பிராமண துவேஷ காட்சிப்படுத்தலை மிகைப்படுத்தி தொடர்ந்து காட்டுவதன் மூலம் ஏற்கனவே பிராமணர்கள் பற்றிய வெறுப்புணர்ச்சியை சைக்கோத்தனமாக வளர்த்துக்கொண்டவர்கள் இன்னும் ஆத்திரம் கொள்ள மாட்டார்களா? அப்படி காழ்புணர்வு தூண்டப்பட்ட பலர் இன்னும் பல பிராமணர்களை வெட்டி வீழ்த்த கிளம்பமாட்டார்களா? பிராமணப் பெண்களை மானபங்கம் செய்ய அலைய மாட்டார்களா? அதைத்தான் இந்த திரையுலகம் விரும்புகிறதா? (தொடர்புடைய சுட்டி)
அதே போல 'துரோகி' என்றொரு கேவலமான ப்ராமண துவேஷ படம்..அது பற்றி அடுத்த பதிவில்
தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...
தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...
தொடரும்.......
18 comments:
வாழையடி வாழையாக அரைவேகாடாக இருந்துவரும் சில குறைப்புத்திக்காரகள் அந்தணர்களைத் ஏசிவிட்டு அவர்களின் கோபமான எதிர்வினைகளை இரசிப்பதை வாடிக்கையாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.
யூதர்கள் ஒரு காலத்தில் நாசிகளால் இப்படிப்பட்டதும் இதைவிடக் கொடுமையானதுமான இன்னல்களுக்கு ஆளாயினர். இன்று அவர்களை எதிர்க்கும் அரபு நாடுகள் புலம்புவதைத் தவிர பெரிதாக ஏதும் செய்ய முடியவில்லை. அமெரிக்காவும் ஐரோப்ப்பாவும் அவர்களைப் பகைத்துக் கொள்வது வீண்வேலை என்று வாளாயிருக்கின்றன.
இஸ்ரேலியர் போலவே அறவாழி அந்தணர்கள் இந்த ஓசியில் ஓப்பியடிக்கும் அரைவேக்காட்டுக் கூமுட்டைகளுக்கு உட்கார்ந்து பதில் சொல்லிக் காலத்தை வீணடிப்பதை விட தம்மை இழிவுபடுத்துவோரை எப்படிக் கவனித்துக் கையாள்வது என்பதில் கவனத்தைச் செலுத்துவது நன்று.
dear friend....
All are true...
Just made a random sampling from a prominent matrimony....
each page has one brahmin women marrying another religion/caste..
best part is ... Its mostly girls are brahmins
பிராமணப் பெண்களின் மனதிலெல்லாம் பிற ஜாதிக்காரரை மணப்பது தான் ஹீரோயினியிஸம் என்று விதைத்து விடுவதாலும், பிராமண சமூகப் பெண்களை பெண்டாடுவதற்கென்றே பெரிய லாபி தங்களைச் சுற்றி நடப்பதைப் பற்றியோ, சமூகத்தில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ சிறிதும் அக்கரையில்லாத பிராமண பெற்றோர்களாலும் தங்கள் வீட்டுப் பெண்களை ஒரு கலாச்சார வட்டத்திற்குள் ஏன் குடும்பத்திற்குள்ளே கூட காப்பாற்றிக்கொள்ள முடிவதில்லை. இந்த நூற்றாண்டில் தாங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற சுரணை கூட இல்லாமல் நாகரீகம் என்கிற போர்வையில் குருடராகவும் முட்டாள்களாகவும் கையாலாகாதவர்களாகவும் இருக்கும் ஒரே இனம் பிராமண இனம் தான். அடுத்த இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு பிராமணர்கள் என்கிற கலாச்சார வகுப்பினர் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்!
திரு. ராம் அவர்களே......
துவேஷப்பிரச்சாரத்திலேயே ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் திராவிட இயக்க குப்பைகளையும்,போதைப்பொருள் வியாபாரம் செய்து வயிறு வளர்க்கும் சினிமாக்காரர்களையும் விடுங்கள்,பிராமணனாக பிறந்து ,பிழைப்பிற்காக நம் மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களையும் நாம் அடையாளம் காண வேண்டும்.ஹிந்துக்களுக்கு எதிரான செயல் என்றால் முதலில் நிற்கும் என். ராம் [ ஹிந்து நாளிதழ்] யார்?கடைசி காலம் வரை கருணாநிக்கு வால் பிடித்த சாவி [ சா. விஸ்வநாதன் ] யார் ? ஹிந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிராக விஷத்தை பரப்பியும் ,இடது சாரி பயங்கரவாத கருத்துக்களை தொடர்ந்து தூக்கிப்பிடித்தும் வரும் ஆனந்த விகடன் உரிமையாளர் பாலன் யார்?
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான் ..[ இதைச் சொன்னவரும் பிராமணரே...]
//ஹிந்து என். ராம் சாவி [ சா. விஸ்வநாதன் ] ஆனந்த விகடன் உரிமையாளர் பாலன் யார்?/// இவர்களெல்லாம் தங்களை பிராமணர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவே பயந்திருக்கும் கோழைகள் என்றுதான் சொல்ல வேண்டும். கமலஹாசன் போன்றோரும் இதில் அடக்கம். இவர்கள் யாவருமே திராவிட கட்சிக்காரர்கள் முழுவீச்சில் இருந்த போது வளர்ந்தவர்கள். அதனால் தங்களை பிராமணன் என்று சொல்லிக்கொண்டால் எங்கே நாம் ஒதுக்கப்படுவோமே என்ற சிந்தனையில் தங்களைத் தாங்களே தாக்கிக் கொள்ள பழக்கப்பட்ட கோழைகள். ஆனால் பிராமணர்கள் எல்லோரும் அப்படி இருப்பதில்லை.
துக்ளக் சோவை மறந்து விட்டீர்களே! இன்று வரை பிராமண எதிர்ப்பாளர்களையும், திராவிட கட்சிகளையும் அதன் போலித்தனத்தையும் கடுமையாக சாடுபவர். பிராமணர்கள், பிராமணர்களாகவே இருந்து கொண்டு தன்னைத்தானே கேலி செய்து
கொள்ளும் தொடைநடுங்கிக் கோழை பிராமணர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். பிராமண சமூகம் தம்மைச் சுற்றி சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். இந்த அடிப்படை பிரக்ஞை ஏதும் இல்லாத ஒரு சமூகம் எளிமையாக
ஆதிக்க சமூகத்தினரால் அழிக்கப்பட்டு விடும். பிராமணர்கள் அந்த விதத்தில் இப்போது விளிம்பு நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
சாதியத்தை வியாபாரப்பொருளாக்கும் சினிமாக்காரர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் தாங்கள், ஓரிடத்தில் வாதத்திற்கு “பொட்டைத்தனமான வாதம்“ என வகை வியாக்கியானம் கொடுப்பது உறுத்தலை தருகிறது, இது ஒட்டுமொத்த பெண் குலத்தை நோக்கிய உங்கள் கீழ்முகப் பார்வையை வெளிப்படுத்துகிறத
வ்ருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு மலரவன்.
'பொட்டைக் கண்ணன்' என்று பேச்சு வாக்கில் கூறுவார்கள். குருட்டு கண்ணுள்ளவன் என்று பொருள் படும் பேச்சு வழக்கு. அது போல குருட்டுத் தனமான வாதம் என்று கூறுவே அவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தைக் கையாண்டேன். அதை ஏன் பெண்களோடு முடிச்சுப் போட்டு பெண்ணியம் பேசுகிறீர்களோ தெரியவில்லை.
மேலும் எல்லாப் பெண்களையுமே ஒட்டு மொத்தமாக மேல் நோக்கித்தான் பார்க்க வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டத்தை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. ஒட்டு மொத்தமாக தாய்க்குலமே என்று மதிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. பெண்களானாலும் சப்ஜெக்டிவ்வாக அவரவர் குணத்தினடிப்படையில் மதிப்பது தான் சரி. மேலும் ஆண்கள் இப்படியெல்லாம் பெண்ணியம் பேசுவது எரிச்சலைத் தருகிறது. ஆண்களும் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். எந்த பெண்ணும் ஆணியம் பேசுவதில்லை. பெண்ணியச் சட்டங்களால் இக்காலத்தில் ஆண்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சேம்சைட் கோல் போடுவதால் சிக்கல் ஆண்களுக்கே! அதனால் இனிமேலாவது யாரையும் பார்த்து நீங்கள் ஏன் பெண்களை மதிக்கவில்லை என்று பொத்தாம் பொதுவாக கேட்காதீர்கள். குறைந்தபட்சம் அடியேனைப் பார்த்து..!
தங்கள் அன்பிற்கு நன்றி. மீண்டும் வருக. நிறைய பகிர்ந்து கொள்வோம்.
ராம் உங்கள் கூற்று தவறு அந்நியன் படத்திலும் பிராமண பெண் அப்பாவி பிராமணனாக வரும் அம்பியை உதாசீனம் செய்வாள் அவள் விரும்புவது நவநாகரீக மேற்கத்திய பாணியில் உள்ள ரெமோவை என்று காட்டி இருப்பார்கள்
Even after all these you will not reduce your superiority complex.You always think you are next to god.How much do you degrade and insult when ever you get a chance in all your activities and speech. Try to be a common man.
பல்லவன்,
///You always think you are next to god.// அப்படி நாங்க திங்க் பன்றோம்ன்னு தெரியுமா? இல்லை அப்படி யாராவது சொல்கிறார்களா? நீங்களாக ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டு புகைந்து காழ்புணர்ச்சியையும் வன்மத்தையும் ஏற்படுத்திக்கொண்டு அதை வைத்து ஒரு இனத்தை அவமதித்து ஜாதிக் கொடுமையை செய்து கொண்டே இருக்க வேண்டியது! உங்களைப் போன்ற லூசுத்தனமான சைக்கோக்களை தமிழகத்தை தவிற வேறெங்கும் பார்க்க முடியாது. பல்லவன் ஒவ்வாமை வியாதியில் தவிக்கிறீர்கள். நல்ல மருத்துவரைப் பாருங்கள்!
hayyram you have correctly said . pallavan better judge yurself and accept the truth
Dear Brothers, we all forgot about one conman truth.We the 700 hundred cores people of today world must have came from single parents.so that we all looks same.there is only to caste. one is men and other is women. Sea the men is within women.man came from women.women is similar to earth.men is smiler to sun. earth is part of sun.sun get respect because of earth and earth will not survive with sun.we all are made by nature. compare us with us nature.you will find the truth about yourself. ADAM (shiva) became BUDDHA AND BUDDHA BECAME CAME AS A JESUS. ASK YOUR SELF INSTEAD OF BLAMING OTHERS AN GET ANSWERS YOURSELF WITHIN FROM YOU,
//We the 700 hundred cores people of today world must have came from single parents.///
எப்டிப்பா, அண்ணனும் தங்கச்சியும் உடலுறவு கொண்டு மொத்த ஜனத்தொகையும் பெருகியதா?? என்ன அபத்தம்!
mr.hayyram
that's true during early age of human civilization.
you first stop killing tamil by mixing it with sanskrit word.
extreme form of racism in your article..there is no god at all. we invent god and religion to control native people.
but we r tamils and its our duty to protect tamil language and tamil culture. we have to prevent sanskritisation. i know u people never wanna do this bcz u wanna culturally dominate in this society
tamil matrimony service
tamil matrimony service
"best Matrimony in "
Muslim matrimony service
tamil matrimony service
"best Matrimony in "
Muslim matrimony service
Kerala matrimony service
Tamilmatrimony
Post a Comment