உருவமின்றியும் உருவத்துடனும் கடவுள் விளங்குகிறார். இந்த இரு நிலைகளை கடந்தும் அவரே விளங்குகிறார். அவர் எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை அவர் மட்டுமே அறிவார்.
ஓர் எறும்பு எவ்வளவு தான் முயற்சி செய்து வயிறார உண்டாலும் எடுத்துச் சென்றாலும் ஒரு பெரிய சர்க்கரை குன்று சிறிதும் பாதிக்கப் படுவதில்லை. முன்பிருந்த படியே அது இருக்கிறது. கடவுள் அது போலவே, பக்தர்கள் எவ்வளவு தான் பரவச நிலையில் ஆடினாலும் பாடினாலும் அவர் இன்னும் யாராலும் முழுமையாக அறியப்படாதவராகவே இருக்கிறார். முழுமையாக அவரை அறியவும் அவரது பெருமைகளை அனுபவிக்கவும் யாராலும் முடியாது.
மீன் எவ்வளவோ தூரத்தில் இருக்கலாம். ஆனால் கவர்கின்ற விதத்தில் ஏதாவது உணவைப் போட்டால் எங்கிருந்தாலும் விரைந்து அங்கு வந்து சேர்ந்து விடும். அது போல் அன்பும் நம்பிக்கையும் உடைய பக்தனின் இதையத்தில் இறைவன் விரைந்து வந்து குடிகொள்கிறான்.
இறைவனின் திருப்புகழைப் பாடுகின்ற இடத்தில் தீய சக்திகள் நெருங்குவதில்லை. நோயும் உடலும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளட்டும். மனமே நீ எப்போதும் ஆனந்தமாக இரு.
இறைவனை நெருங்க நெருங்க ஒருவன் அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்கிறான். முடிவில் அவரிலேயே ஒன்று கலந்துவிடுகிறான்.
இறையருள் என்னும் காற்று இடயீடின்றி எப்போதும் வீசிக்கொண்டிருக்கிறது. சோம்பேறி படகோட்டி போன்றவர்கள் பாய்மரத்தை விரித்து அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சுறுசுறுப்பான வலிமையானவர்கள் தங்கள் மனமாகிய பாய்மரத்தை எப்போதும் விரித்து வைத்திருந்து தாங்கள் சேர வேண்டிய இடத்தை விரைவில் எளிதில் அடைகிறார்கள்.
எப்போதும் சிந்தித்துப் பேசு. மனமும் வாக்கும் ஒன்றினைந்து செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு பதில் கட்டயம் கிடைக்கும்.
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
3 comments:
உங்களுடைய blogspot மிக அருமையான தியாக முயற்சி.
இன்றுதான் இந்த blogspot-க்கு வந்தேன். உங்கள் பணி வெகு ஜனங்களுக்குச் சென்று சேர என் வாழ்த்துக்கள்.
இறை அருளைப் பிரார்த்திக்கிறேன்.
இன்றுதான் உங்களுடைய blogspot-க்கு வந்தேன். அருமையான தியாக முயற்சி!
இந்த blogspot வெகுஜனங்களுக்குச் சென்று சேர என்னுடைய வாழ்த்துக்கள்.
கடவுளின் ஆசி மழையும் உங்கள் மேலும் உங்கள் முயற்சிகளின் மேலும் பொழியப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி ராதா அவர்களே!
Post a Comment