Wednesday, March 2, 2011

ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 3



வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

பவளம் போன்ற திருமேனியும் துதிக்கையையும் கொண்ட விநாயகரின் பாதங்களை சரணடைந்து, நாள்தோறும் தவறாமல் உடற்சோம்பல் கொள்ளாமல் பூவைக் கொண்டு பூஜிப்பவர்களுக்கு நல்ல சொல்வளமும், நல்லதை நினைத்து நல்லதைச் செய்யும் நல்ல மனமும், மாமலர் மேலமர்ந்திருக்கும் லக்ஷ்மி தேவியின் அருள் பார்வையும் உண்டாகும். 

 - ஒளவைப் பாட்டி


மேற்கண்ட ஒளவைப் பாட்டியின் அருந்தமிழைப் படிக்கும் போது ஒரு விஷயம் குறிப்பிடத் தோன்றுகிறது. தமிழன் என்றாலே நாத்திகனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு தமிழர்கள் மீது நாத்திக மதத்தை தினித்து மக்களின் அறிவை மழுங்கச் செய்து வருகிறார்கள் நாத்திக மத போதகர்கள்! ஆனால் அருந்தமிழின் அத்தனை வடிவங்களும் ஆன்மீகத்தின் உச்சத்தில் தான் இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.


அருந்தமிழச்சியான ஒளவைப்பாட்டி எழுதிய மூதுரையின் முதற்பாடலே இறைப்பாடல் தான். அதுவும் யாரைப் பற்றி? ராமசாமி நாயக்கர் நாத்திக மதம் பரப்ப போட்டுடைத்து உபயோகித்தாரே அந்த விநாயகர் பற்றிய பாடல் தான். 


ஆக தமிழின் சிறப்பு ஆன்மீகத்திலும், பழந்தமிழர் பக்தியிலும், ஆன்மீக தர்மத்திலும் சிறந்தும் விளங்கினார்கள் என்றுனர்ந்து தமிழையும் ஆன்மீகத்தையும் ஒருசேர நேசிக்க வேண்டும் என்பதையே இப்பாடல் காட்டுகிறது.


ஆன்மீகமில்லாமல் தமிழ் இல்லை என்பதற்கு ஒளவையே சாட்சி!

.

3 comments:

thiruchchikkaaran said...

பெரியார் காலத்தில்தான் திருவிளையாடல், தேவரின் "தெய்வம்", பட்டினத்தார் , திருமலைத் தென் குமரி.....போன்ற பல படங்கள் வெளி வந்து வெற்றிகரமாக ஓடின. என்ன பிரச்சாரம் செய்த போதும் தமிழ் நாட்டிலே கோவில்களில் கூட்டத்திற்கு குறைவு இல்லை.

மக்களுக்கு ஆன்மீகம் தேவையாக இருக்கிறது. பகுத்தறிவு அடிப்படையிலான அமைதியான ஆன்மீகத்தை முன் வைக்க வேண்டும். எல்லா பிரிவு மக்களிடமும் ஆன்மீகத்தை கொண்டு செல்ல வேண்டும். எல்லா பிரிவு மக்களும் ஆன்மீகத்தில் முன்னேறும்போது ஆன்மீகமும் சிறக்கும், சமத்துவமும் உருவாகும்.

hayyram said...

//பெரியார் காலத்தில்தான் திருவிளையாடல், தேவரின் "தெய்வம்", பட்டினத்தார் , திருமலைத் தென் குமரி.....போன்ற பல படங்கள் வெளி வந்து வெற்றிகரமாக ஓடின// ஆனால் அந்த தாக்கம் என்னவோ இப்போது தான் பிரதிபலிக்கிறது. போல தமிழில் பக்திப்படங்களே வருவதில்லை. எல்லாம் காமம் தான்!

Madhusudhanan D said...

@Thiruchchikaaran: Everyone knows about these people. All knows that what Karunanidhi speaks is total absurd. Even those times many knows that what Anna spoke is full non sense.

But they were surviving because, if someone else comes to power also, same thing is going to happen. No change. (Some exceptions like Kamaraj). That's the reason.