Thursday, March 17, 2011

ஆடுகளம் - தேர்தல் ஜுரம்


ஆடுகளம்!

வாழ்க்கை ஒரு போர்க்களம்
வேட்டையாடி பார்க்கனும்
போராடி வெல்லடா
போட்டி போட்டு கொல்லடா





இன்றைய செய்திகளின் படி அதிமுக கூட்டனி ஒரு ஆடுகளமாகவே காட்சியளிக்கிறது. மதிமுக வெளியேற்றம், தேமுதிகவின் திக்குமுக்காடல், கம்யூனிஸ்டுகளின் அதிருப்தி என ஊரே ஒரு பரபரப்பில் மூழ்கி இருக்கிறது எனலாம். மீடியா இதற்கு முக்கிய காரணம். எனக்குத்தெரிந்து அதிமுக கூட்டனி உடைந்தால் ஜெயலலிதாவை விட ஜனங்கள் தான் அதிகம் கவலைப்படுவார்கள் போலத் தெரிகிறது. அதிமுக மற்றும் கேப்டன் அபிமானிகள் முகத்தில் கவலை ரேகை!

கேப்டன் தொலைக்காட்சியில் இன்று எந்த முடிவும் சொல்ல முடியாது. பேசவேண்டி இருக்கிறது. நாளை தான் முடிவு சொல்வோம் என்று தெளிவாக கேப்டன் அறிவித்தாலும் மாலை முரசுவில் 'உருவாகிறது மூன்றாவது அணி' என்று செய்தி வெளியாகிறது. பாவம் மக்கள். "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்" என்று எஃப் எம் மில் பாட்டு கேட்கிறது!

மீடியாக்கள் 'ஜெயலலிதா ஒரு அகங்காரம் கொண்ட பெண்மணி' என்கிற முத்திரையை அவர் மீது 
மீண்டும் குத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே இந்த கூட்டனி குழப்பத்தை பயன்படுத்த துவங்கி இருப்பது தெரிகிறது.


விஜயகாந்த் உட்பட கூட்டனி கட்சிகள் அதிருப்தியானதற்கான காரணம் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ள தொகுதகளில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி விட்டதாக கூறுகிறார்கள். அப்படி அமோக வெற்றி பெற்று விடுபவர்கள் யாரென பார்ப்போம்!

தெ மு தி க: இதுவரை விருதாச்சலத்தை தவிர ஒரு தொகுதியிலும் ஜெயிக்காத கட்சி. ஏற்கனவே சில இடங்களில் ஜெயித்து விட்டு, இது எங்கள் தொகுதி, தே மு தி க கோட்டை அதை எங்களுக்கே விட்டு விடுங்கள் என்று கேட்டால் ஞாயம் இருக்கிறது. ஆனால் கடந்த தேர்தல்களில் டெப்பாசிட்டுகள் கூட இழந்துவிட்டு இப்போது அ தி மு க விடம் தொகுதி கோரிக்கையில் பிடிவாதம் காட்டுவது ஞாயமா தெரியவில்லை.

இரண்டாவது, தெ மு தி கவிற்கு நிரந்தர சின்னம் கூட கிடையாது. தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்கும் அளவிற்கு தெ மு தி கவிற்கு இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் அ தி மு க கூட்டனியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று பத்து பதினைந்து எம் எல் ஏக்களை பெற்று அங்கீகாரம் கிடைக்க வழி செய்யலாம். அதை விட்டு விட்டு அ தி மு க வுடன் மல்லுக்கட்டுவது எந்த விதத்தில் தெ மு தி க விற்கு வெற்றியைக் கொடுக்கும் என்று தெரியவில்லை.

ம தி மு க கடந்த முறை அதிக தொகுதிகள் பெற்றும் ஐந்து ஆறு இடங்களைத் தவிற வேறு இடங்களில் வெற்றி பெற முடியாமல் தவித்த கட்சி. அதிலும் சில எம் எல் ஏக்கள் கட்சி மாறி விட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகளை மட்டும் கேட்டுப் பெற்றால் கூட்டனி சுமுகமாக இருக்க வழிகிடைக்கும். கௌரவத்திற்காகவேனும் அதிக தொகுதிகள் அடம்பிடித்து கேட்டுப் பெற்று அதில் தோற்றும் போனால் கூட்டனிக்கு கிடைக்க வேண்டிய வெற்றி பலவீனப்பட வாய்ப்பிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் எங்கே போனாலும் ஒட்டுன்னிகளாகத்தான் இருக்கப் போகிறார்கள். அந்த வேலையை அ தி மு க கூட்டனியிலிருந்தே செய்வதில் அவர்களுக்கு இழப்பேதும் இருக்கப்போவதில்லை.

இவை எல்லாவற்றிர்கும் மேலே பெரிய கட்சியுடன் கூட்டனி பேசுபவர்கள் தேர்தல் செலவிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதையும் பெற்றுக் கொண்டு அடுத்த கூட்டனி தாவி விடுவதுதான் இன்றைய ஆடுகளத்தின் சிறந்த ஆட்டமோ என்னவோ? யாருக்குத் தெரியும் அரசியல்? 



இவையெல்லாம் நீங்கலாக வைகோ அருமையான பேச்சாளர். இந்த தேர்தலில் அவர் பேசுவதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. ஜெயலலிதா அவரை துச்சமாக ஒதுக்காமல் இருப்பது பலத்தை அதிகரிக்கும். மேலும் கம்யூனிஸ்டுகளுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வாக்கு சதவீதம் இருப்பதையும் அ தி மு க இழக்கக் கூடாது. இத்தனை நாள் நிதானமாக காய் நகர்த்தியவர் இன்னும் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்கலாம். அப்பொழுது தான் ஆடுகளம் சூடுபிடிக்கும். என்ன நடக்கப் போகிறதோ?.


மிச்சம் மீதி நாளை தெரியும், பார்க்கலாம் வேடிக்கை.

அது வரைக்கும் நம்ம வேலையப் பாப்போம் வாங்க!





.

5 comments:

Madhusudhanan D said...

Don't worry Ram. All are just stunts to try for more seats.

hayyram said...

//All are just stunts to try for more seats.// ஆம், ஆனால் அது திருடர்கள் முன்னேற்றக் கழகத்திற்கு மீண்டுமொரு வாய்ப்பாக அமைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஜெயலலிதா உட்பட அனைத்து கட்சித் தலைவர்களின் பொறுப்பாகிறது. தமிழகத்தை ஒரு கொலைகார கும்பலிடமிருந்து காப்பற்ற விஜயகாந்தை வளர்த்து விட்டாலும் தவறில்லை.

Madhusudhanan D said...

The only mistake she did was to announce the list so, early. She could have waited for one or two days and announced the same list.

But she needs time for campaign too. DMK has started with their campaigns in cover right.

Everything, as you said is fate.

reno85 said...

http://ujiladevi.blogspot.com/2011/03/blog-post_09.html

He wrote about your critics and gave his explanation in his blog..
What do you think?

hayyram said...

அங்கேயே எனது கருத்தை தெரிவித்து இருக்கிறேன் ரெனோ! எனக்கு அவரது போக்கில் உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு மனிதரை தொடர்ந்து விமர்சிப்பது தேவையற்ற வேலை என நினைத்து விட்டுவிட்டேன்.

அவரை தொடர்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முக்கியமாக பிராமணர்களை விமர்சிப்பதில் ஏதோ திராவிட அரசியல் வாதிமாதிரி கேள்விகள் எழுப்பி வீன் விவாதங்கள் வளர்க்கிறார். ஆன்மீகம் ஜாதிகளுக்கு அப்பார்பட்டது எனில் அதையும் தாண்டிய விஷயங்களை யோகியர் விவாதிக்கவும் எடுத்துரைக்கவும் வேண்டும்.

சாக்கடையை சுத்தப்படுத்துகிறேன் என்று கிளறிவிட்டு விடுவதால் யாருக்கு லாபம். இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவர் ஏதோ தன்னை சமூகத்திற்காக அற்பனித்துக்கொண்ட தியாகியாக உருவகித்துக் கொள்கிறார். அதனால் அவரது தளம், அவரது கருத்துக்கள், அவர் பாடு அவரை நம்புபவர் பாடு என்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்.