Saturday, March 19, 2011

மிக்ஸி க்ரைண்டர் லேப்டாப் அரிசி இலவசம்!



தி மு க வின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இலவசங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், அரிசி, மின்சாரம் என அதீத இலவசங்களால் இன்னும் நாட்டை குட்டிச்சுவராக்க கிளம்பியுள்ளார்கள்.


சரி இந்த இலவசங்கள் யார் வீட்டு காசில் கொடுக்கப் போகிறார்கள்? அறிவாலய பணத்தில் இருந்தா? தி மு க வினர் வீட்டுச் சொத்துக்களில் இருந்தா?


வரிகட்டும் சாமானிய சம்பளக்காரன் வீட்டு உலையில் இருந்து பிடுங்கிக் கொடுக்கப்படப் போகிறது இந்த இலவசம். இதனால் உண்டாகப் போகும் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?  ஒரு யூகம்! - 


வரிகள் அதிகரிக்கப்படலாம், 
அரசுகட்டணங்கள் உயர்த்தப்படலாம்.
டாஸ்மாக் விற்பனை இன்னும் ஊக்குவிக்கப்பட்டு குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.
இலவசச் செலவுகளை ஈடுகட்டும் பொருட்டு இன்னும் பல கோடிக்கோடிகள் ஊழல் செய்து அக்கம்பக்கத்துத் தீவுகளில் கண்டெய்னர் கண்டெய்னர்களாக அடுக்கி வைக்கப்படலாம்.
தொழிலதிபர்களிடமும் தெருக்கடைக்காரர்களிடமும் அதிக வசூல் வேட்டைகள் நடத்தப்படலாம்.


ஆனால் இவை யாவும் தேர்தல் அறிக்கையில் வராது. தேர்தலுக்குப் பிறகு மக்கள் தலையில் விழும்.


இது எதுவுமே சாத்தியப்படவில்லை என்றால் கையளவு நிலம் வழங்கியது போல தமிழக மக்கள் இலவசங்களுக்காக வானத்தைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்க வாய்ப்பு கொடுக்கப்படலாம்.


மொத்தத்தில் இலவசம் என்கிற தூண்டில் போடப்பட்டுள்ளது. விழுந்து விடாமல் இருப்பது மக்களின் சாமர்த்தியம்! எச்சரிக்கை! எச்சரிக்கை!


இனி அ தி மு க வின் தேர்தல் அறிக்கை என்னவாக இருக்கப் போகிறதோ என்கிற பேச்சுக்கள் அதிகரிக்கும். அ தி மு க வின் தேர்தல் அறிக்கை என்னவாக இருந்தாலும் தி மு க விற்கு ஓட்டில்லை என்பதில் மக்கள் (இலவசங்களுக்கு ஆசைப்படாமல்) தீர்மானமாக இருந்தால் நல்ல மாற்றம் மாநிலத்தில் நடக்கலாம். 


இல்லையேல் காலம் ஒரு விதிசெய்யும்!

.

10 comments:

jagadeesh said...

கொடுமை. மக்களை மயக்க என்னவெல்லாம் செய்யறாங்க. மாயையில் விழச் செய்யறாங்களே.. மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை. யார் யாரெலாம் தி மு கா வுக்கு ஆதரவா ஓட்டுப் போடறாங்களோ,, பல ஜென்மம் எடுப்பாங்க,, சூரிய தோஷம் வரட்டும்...சாபம் கொடுக்கறேன்..

jagadeesh said...

இனி தமிழ்நாட்டுல queue வுக்கு பஞ்சமே இருக்காது..

பாலா said...

தடை இல்லாத மின்சாரம் எப்ப கிடைக்கும்?

virutcham said...

அல்ப இலவசங்களை இப்படி வாரி வாரி வழங்கும் அரசுக்கு தரமான கல்வியை இலவசமாக தர முடியவில்லை என்றாலும் குறைந்த செலவில் கூட தர விருப்பமில்லை.மக்களுக்கும் அடிப்படை தேவை எது என்பது தெரிவதில்லை

hayyram said...

அதச்சொல்லுங்க! கல்வியையும் மருத்துவத்தையும் தனியாரிடமிருந்து அரசே கையிலெடுத்து அடிப்படை வாழ்க்கைப் பிரச்சனைக்கே விழிபிதுங்கும் மக்களை காப்பாற்ற வக்கில்லை. மக்களுக்கும் எதை கேட்க வேண்டும் கேட்டுப் பெற வேண்டுமென்பதில் வெட்கமில்லை. என்ன செய்வது. அடுத்த போட்டி இலவசத்தில் ஜெயலலிதாவும் குதிப்பதைத் தவிற வேறு வழி இல்லாமல் செய்து விட்டார். குறைந்த பட்சம் மருத்துவத்தை அரசு கையிலெடுக்க இவர்கள் முயற்சித்தால் புண்ணியமாகப் போகும்!

Madhusudhanan D said...

Those who are attracted towards the free schemes are very less. If more people are attracted towards such free schemes, last time DMK would have got majority. Last time ADMK lost as many votes of ADMK are acquired by DMDK.

The votes for free schemes will reduce this time. Hence, more chance for ADMK to win. Besides problem with ADMK like MDMK, etc the dissatisfaction on the DMK government is more with the people.

I feel Congress is trying to fail DMK so that the fame of DMK reduces, and hence Congress in TN can grow. Hence they try to make EC strict.

No matter Congress gets fame, DMK fails this time.

hayyram said...

//Those who are attracted towards the free schemes are very less. If more people are attracted towards such free schemes, last time DMK would have got majority// நிதர்சனமான உண்மை! உணர்ச்சி வசப்பட்டே முடிவெடுக்கும் நம்மக்கள் நிதானமாக சிந்தித்தால் தி மு க தலைவருக்கு கொஞ்ச ஓய்வு கொடுத்து மகிழ்விக்கலாம்

Arun Ambie said...

நல்ல கல்வியை இலவசமாகக் கொடுத்தால் ஆளாளுக்கு உங்களைப்போல கேள்வி கேட்பார்கள். கொள்ளையடிக்க அதாவது அரசியல் நடத்த முடியாது. இப்போதே தேர்வுகளில் காப்பி அடிப்போரைப் பிடிக்கக்கூடாது என்று உத்தரவாகியிருக்கிறது. அவமானத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வர் என்று காரண்ம் காட்டுகிறார்கள். காப்பி அடித்துத் தேறி தண்ணியடித்து திரியும் தற்குறிக்கூட்டம் தான் வளரும். படிக்காத சோம்பேறியான முட்டாள்களே தமக்குத் தேவை என்ற பெரியாரியத்தை அமல்படுத்துகிறார் திமுக.

hayyram said...

அது மட்டுமல்ல, ஏழைகள் என்றைக்கும் இருக்கவேண்டும். எல்லாரும் பணக்காரர்களாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அப்போது தான் பிச்சை போட்டுக்கொண்டே இருக்க முடியும். அதை வாங்கும் கூட்டம் ஓட்டுப்போட்டுக் கொண்டே இருக்கும். மொத்தத்தில் நாம் ஏழைகளாக இருந்தால் அதற்கு நாம் மட்டும் காரணமில்லை. இது போன்ற அரசியல் வாதிகளும் தான்.

Madhusudhanan D said...

Raja avamaanam thaangaamal tharkolai seidhukolvaar endru avarai viduvikka sollalaam.

Kasab tharkolai seidhu kolvaar endru avar thooku dhandanaiyai niruthalaam. en viduvikkavum seiyyalaam.

I heard a joke:
Microsoft is planning to have its next Operating System's name as 'KASAB'. They claim, it will never hang.