Friday, March 26, 2010

குஷ்புவும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவும்!


இனி தமிழ் சமுதாயம் இவர் போன்ற நடிகைகளிடமிருந்துதான் ஒழுக்கத்தையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.


சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குஷ்புவின் வழக்கிற்கான தீர்ப்பில் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறல்ல என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உண்டு பண்ணி இருக்கிறது.

பொதுவாக ஒரு வழக்கிற்கான தீர்ப்பை வெளியிடும் முன்னர் தீர்ப்பு அவ்வாறு வழங்கப்பட்டதை விளக்கி அதனால் இந்தத் தீர்ப்பை கொடுக்கிறோம் என்ற வண்ணத்தில் நீதிபதிகள் சில கருத்தை முன் வைப்பதுண்டு. அப்படித் தெரிவிக்கப்படும் கருத்து அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் சார்ந்ததாக இருக்கும். ஆனால் ஒரு சமூகத்தைச் சார்ந்ததாக இருந்தால் அந்த தீர்ப்பினால் சமூகத்தில் ஏற்படப்போகும் தாக்கம் எத்தகையது என்பதை நீதிபதிகள் யோசிக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை சட்டப்படி தவறல்ல என்பதால் திருமணத்திற்கு முன்னால் உடலுறவு கொள்ளலாம் என்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் சட்டப்படி தவறில்லை என்பதற்காகவே எல்லோரும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணம் பரப்பப்படுவது சமூகத்திற்கு நல்லதல்ல. தாயும் மகனும் உடலுறவு கொண்டால் கூட சட்டப்படி தவறில்லை என்பதற்க்காக நீதிபதியின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசுபவர்கள் அவ்வாறு தங்கள் வீட்டில் நடந்து கொள்வார்களா? அப்படி ஒரு முறையற்ற உறவு பற்றிய வழக்கு வந்தால் அதற்கும் இந்த நீதிபதிகள் இதே போல சட்டப்படி தவறில்லை என்றே தீர்ப்பு சொல்வார்களா?

நித்தியானந்தா கூட சட்டப்படி குற்றம் செய்யவில்லை. ஆனால் ஆத்திகர் நாத்திகர் என்ற பேதமில்லாமல் அதற்கு மட்டும் அனைவரும் கொதிப்பது ஏன்? சட்டப்படி குற்றம் அல்ல என்பதற்காக எல்லா குற்றச் செயல்களையும் நாம் சட்டமாக்கி விட முடியாது தானே!

இந்து திருமணச் சட்டம் மற்றும் இஸ்லாம் திருமணச் சட்டம் போன்றவை திருமணத்திற்கு முன்பான வாழ்க்கையை எப்படி வரையறுத்துள்ளது என்பதை நீதிபதி விளக்கி இருக்க வேண்டும். இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கான திருமணச் சட்டங்களில் திருமணத்திற்கு முன்பான உடலுறவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு பின்னர் இந்த தீர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் பொதுப்படையாக எல்லோருக்கும் இந்தத்தீர்ப்பு செல்லுபடியாகும் என்றால் எதற்கு ஒவ்வொரு மதத்திற்கும் அவரவர் மத உணர்வுகளை மதிக்கும் பொருட்டு தனித்தனியாக திருமணச்சட்டம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.

சமூகத்தின் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், மனிதர்களின் உணர்வுகளைப் பாதுகாக்கவும் மனிதர்களால் எழுதப்பட்டது தானே சட்டம் என்பது. ஆனால் அத்தகைய சட்டம் சமூகத்திற்கு எதிராகவும் மனிதர்களின் உணர்வுகளை பாதிப்பதாகவும் இருந்தால் அந்தச் சட்டம் எதற்காக? அப்படி ஒரு சட்டம் புத்தகத்தில் எதற்காக இருக்க வேண்டும்? மனிதர்களின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்க்காக உருவாக்கப்பட்ட சட்டம் அவர்களுக்கு எதிராகவே செயல்படும்போது அத்தகைய சட்டம் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

உலகின் எல்லா நாடுகளும் தங்கள் மத மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளைச் சார்ந்தே தங்கள் சட்டங்களை இயற்றி இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான் மத ரீதியாகவும் இல்லாமல் சமூகக் கட்டுப்பாடு சார்ந்தும் இல்லாமல் கார்பரேஷன் குப்பைத்தொட்டி போல ஒரு சட்டத்தை வைத்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை சமூகக்கட்டுப்பாடு என்றாலே அது இந்துமதக் கட்டுப்பாடு என்றே புரிந்துகொள்ளப்பட்டிருப்பதால் அவற்றை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற விதத்திலேயே சட்டத்தைக் கையாள்கிறார்கள் என்பது இந்த சமூகத்திற்கு வாய்த்த கொடுமை.

தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த ஒரு முஸ்லீம் பெண் இந்த தீர்ப்பை கடுமையாக கண்டித்தார். இது குடும்பம் என்கிற அமைப்பை உடைக்கும் தீர்ப்பு என்றும், பணப்பரிமாற்றம் இல்லாத விபச்சாரத்தை இந்த தீர்ப்பின் மூலம் தூண்டிவிடப்பார்க்கிறார்கள் என்று வன்மையாக கண்டித்தார். மேலும் குஷ்பு பற்றிய பேச்சு வரும்போது, ஏற்கனவே ஒழுக்கம் இல்லாதவர்கள் ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையைத்தான் மற்றவர்களிடமும் போதிப்பார் என்றும் போட்டுத் தாக்கினார்.



கலாச்சார ஆசிரியை

அதே நிகழ்ச்சியில் பேசிய இந்து அமைப்பிலிருந்து வந்த ஒருவரோ, குஷ்பு திருமணத்திற்கு முன்னாடியோ பின்னாடியோ உடலுறவு வைத்துக் கொள்வது சரி என்று நினைத்தால் அது சுந்தர் சி யின் பிரச்சனை. சுந்தர் சி அனுமதித்தால் அவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் அந்தக்கருத்து சமூகத்தின் மீது திணிக்கப்படுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வாதிட்டார்.

திருமணத்திற்கு முன்னால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் திருமணத்திற்கு அவசியமே இல்லையே. அதைத்தானே இந்த இத்தாலி நாட்டு அரசாங்கமும் நாத்திக அரசாங்கமும் விரும்புகிறது. ஏற்கனவே இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிஷனரிகள் இந்தத் தீர்ப்பினால் ஒயின் விருந்து வைத்துக் கொண்டாடி இருப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழல் பெருகவேண்டும் என்று நினைத்தால் நிம்மதியான ஒரு மன வாழ்க்கையை எல்லோரும் பெறுவது சாத்தியமில்லாத ஒன்றாகி விடும். ஒவ்வொருவரும் திருமணத்திற்குப் பின்னால் தன் மனைவியையோ கணவனையோ எப்படியும் யாருடனோ வாழ்ந்தவ(ள்)ர் தானே என்ற ஒரு அலட்சியப் போக்குடனேயே வாழ்க்கை நடத்துவார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு அக்கரை இருக்காது. பின்னர் மேலை நாட்டு விபச்சாரக் குடும்ப வாழ்க்கை போல இங்கேயும் அலட்சியமான ஒரு குடும்ப வாழ்க்கையே மிஞ்சும். பிறக்கும் பிள்ளைகளும், எப்படியும் இவர்கள் நம்மைப் பெற்றவர்கள் இல்லை. இவர்களுக்காக நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று தன் போக்கில் வாழத்துவங்கி விடுவார்கள். குடும்பம் என்ற அஸ்திவாரம் ஆட்டம் கண்டு போகும். பிறகு அமெரிக்கா போன்றே குடும்பமும் நாடும் ஸ்திரத்தன்மையற்ற வாழ்க்கையையே எதிர் நொக்கி இருக்கும்.

யாருக்கும் நாகரீகமோ பாரம்பரியமோ இருக்காது. உலக நாடுகள் எல்லாம் பொருளாதாரத்தில் கீழே விழுந்து சிதறிய போது இந்தியா பெரிய பாதிப்பு இல்லாமல், விழாமல் தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதே, அதற்குக் காரணம் நமது குடும்பம் குடும்பமாக வாழும் அமைப்புதான் என்று உலகத்தின் அனைத்து பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எரிவதை பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

குஷ்புவுக்கும் இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். சுந்தர் சியும் குஷ்புவும் மேலை நாட்டு ஸ்டைலில் தன் பெண்பிள்ளைகளின் புத்தகப் பையில் கருத்தடை மாத்திரைகளை இன்று முதல் கொடுத்து அனுப்புவார்கள் என்று நம்பலாம். ஆனால் அது அவர்கள் வீட்டோடு போகட்டும்.



கலாச்சார ஆசிரியை

28 comments:

வால்பையன் said...

அடடே!

தீர்ப்பு உங்களுக்கு சாதகமா இல்லையா!?

இஸ்லாமியர்கள் ஆவூன்னா கொடிய தூக்கிட்டு மறியல் பண்றாங்கல்ல, நீங்க மட்டும் ஏன் ஒற்றுமையில்லாமல் சொம்பை மாதிரி இருக்கிங்க! போங்க, போய் அந்த நீதிபதிக்கு எதிரா போராடுங்க!

அதுக்கு முன்னாடி தமிழ் கலாச்சாரம்னா என்ன? அது யார் ஆரம்பிச்சது, எங்கிருந்து வந்ததுன்னு விளக்கமா சொல்லிட்டு போங்க!

hayyram said...

//12 வயதில் வயதிற்கு வந்தேன்

14 வயதில் ஒரு ஆண்டியிடம் அதை நிரூபித்தேன்//

என்பதை பெருமையாகச் சொல்லி அடுத்தவர் மனைவியை அடையத்துடிக்கும் உங்களைப் போன்ற அநாகரீகமான , தனிமனித ஒழுக்கம் இல்லாத மனிதர்களுக்கு சட்டப்படி தப்பில்லை என்று தீர்ப்பு சொல்லப்படும் எல்லா காரியங்களும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கும். ஆனால் குறைந்த பட்ச ஒழுக்கத்துடனும் நாகரீகாத்துடனும் வாழ நினைக்கும் சராசரி இந்தியர்களுக்கு இது சாதகமான தீர்ப்பு இல்லைதான்.

//அதுக்கு முன்னாடி தமிழ் கலாச்சாரம்னா என்ன? அது யார் ஆரம்பிச்சது, எங்கிருந்து வந்ததுன்னு விளக்கமா சொல்லிட்டு போங்க! //

முதலில் திருக்குறளை குறைந்த பட்சம் படித்து பிறன் மனை நோக்கா பேராண்மை பற்றியும் கற்பொழுக்கம் என்ற அதிகாரம் பற்றியும் கூட படித்து விட்டு வாருங்கள். பிறகு பேசலாம். திருக்குறளின் வயது இரண்டாயிரம் வருடமாமே!

வால்பையன் said...

அண்ணே அடுத்தவர் மனைவி அடைய துடித்தது என்னிடம் தான், நான் ஒன்னும் ஊர் உர்ராக சுற்றவில்லை, நான் வயதுக்கு வந்துவிட்டேன் என நிறுபிக்க! முக்கியமாக உங்க ஊர் பக்கம் வர மாட்டேன் கவலைபடாதிங்க!

//குறைந்த பட்ச ஒழுக்கத்துடனும் நாகரீகாத்துடனும் வாழ நினைக்கும் சராசரி இந்தியர்களுக்கு இது சாதகமான தீர்ப்பு இல்லைதான்.//

குறைந்தபட்ச ஒழுக்கம்னா என்ன? அதிகபட்ச ஒழுக்கம்னா என்ன!?
அதை சொல்லுங்க முதல்ல!

கற்பு என்று நிலபிரபுத்துவ சொம்புதூக்கி எழுதிய குறலை ஏற்கனவே கிழித்து தொங்க விட்டாச்சு! அதென்னா பெண்ணுக்கு மட்டும் கற்புன்னு கேட்ட கேள்விக்கு ஒரு நாதாரியும் பதில் சொல்லல!

உங்க கூற்றுபடி தமிழ் கலாச்சாரம்னா திருகுறள் தானா!?

hayyram said...

//முக்கியமாக உங்க ஊர் பக்கம் வர மாட்டேன் கவலைபடாதிங்க!//

என் செல்லமே! என் வயித்தில பால வாத்தீங்க. நீங்க ரொம்ப நாளைக்கு ரொம்ப நல்லா இருக்கனும்.

//குறைந்தபட்ச ஒழுக்கம்னா என்ன?// அடுத்தவர் மனைவி உங்களை அடைய நினைத்தாலும் நான் பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் என்று நீங்கள் அவர் அழைப்பை மறுத்திருந்தால் அது தான் குறைந்த பட்ச ஒழுக்கம்.

//அதென்னா பெண்ணுக்கு மட்டும் கற்புன்னு கேட்ட கேள்விக்கு ஒரு நாதாரியும் பதில் சொல்லல!//

யார் நண்பா உங்களை அப்படி காயவிட்டது. கற்பு பெண்களுக்கு, பிறன்மனை நோக்கா பெராண்மை ஆண்களுக்கு. இதைத்தவிற வள்ளுவர் ஒழுக்கம், அறம் என்ற பல பெயர்களில் ஆண்களுகு நிறைய சொல்லியிருக்கார். வள்ளுவர் சரியா பேலன்ஸ் பன்னிருக்கார் நண்பா. அவரைத் திட்டாதீங்க.

வால்பையன் said...

வள்ளுவர் ஒரு நிலபிரபுத்துவ சொம்புதூக்கி, ஆணாதிக்கவாதி

http://www.thirukkural.com/2009/02/blog-post_1899.html

மொத குரலே பொண்டாட்டி பேச்ச கேட்டா உருப்பட மாட்டேன்னு இருக்கு!

hayyram said...

//மொத குரலே பொண்டாட்டி பேச்ச கேட்டா உருப்பட மாட்டேன்னு இருக்கு!//

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.


அது அப்படியில்லை நண்பா! பெண்டாட்டி பேச்சை மட்டுமே கேட்டுக்கொண்டு சுய புத்தி இல்லாத ஆண்மகன் உருப்பட மாட்டான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

வால்பையன் said...

ஆளாளுக்கு ஒரு விளக்க உரை போட்டுக்க வேண்டியது தான்!

smart said...

நல்ல பதிவு

//அதென்னா பெண்ணுக்கு மட்டும் கற்புன்னு கேட்ட கேள்விக்கு ஒரு நாதாரியும் பதில் சொல்லல!//
அந்த கேள்விக்கு பதில் சொன்னாள் புரிந்துகொள்ளக் கூட ஒழுக்கமில்லாதவர்களுக்கு இது சாத்தியமில்லை

smart said...

//வள்ளுவர் ஒரு நிலபிரபுத்துவ சொம்புதூக்கி, ஆணாதிக்கவாதி//

நீங்க ஏதேதோ தளத்துக்கெல்லாம் சொம்பு துக்கினேங்க நீங்க ஒரு காம ஆதிக்கவாதி

///மொத குரலே பொண்டாட்டி பேச்ச கேட்டா உருப்பட மாட்டேன்னு இருக்கு//
நீங்க சொல்ற உரையெல்லாம் உப்புக்கல்லுக்கு கூட உபயோகப்படாது.

hayyram said...

// smart said...
நல்ல பதிவு //

நன்றி ஸ்மார்ட்.

Anonymous said...

ராம் அண்ணே மன்னிச்சிடுங்க தெரியாம ஒரு வேகத்துல வந்துச்சு ,,அந்த கெட்ட வார்த்தை please forgive me..hereafter i will be more cautious of my words,,,thanks you have edited it ..all the comments appears after your edtion only right?

hayyram said...

நன்றி குமார். மன்னிக்கும் அளவிற்கு நீங்கள் பெரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை. வயதிகு உரிய வேகம் அப்படி. பரவாயில்லை. கவலை படவேண்டாம். நீங்கள் எழுதுங்கள் நான் எடிட் செய்து கொள்கிறேன். மற்றபடி தாராளமாக உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக உங்கள் தளம் போலவே கருதி வெளியிடுங்கள். அன்போடு வரவேற்கிறேன்.

அன்புடன்
ராம்

Pavalamani Pragasam said...

தனியாக போராடிக்கொண்டிருக்கிறோமோ என்று அயர்ச்சியாய் உணர்ந்த எனக்கு தங்கள் கட்டுரை பெரும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துவிட்டது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கூக்குரலிடுவோர் பெருகி வருவதை பார்த்து அவர்கள் தைரியமாக உரத்த குரலில் அடாத முறையில் வாதிடுவதை பார்த்து பொறுமிக்கொண்டிருந்தேன். நெஞ்சில் பாலை வார்த்தீர்கள். மிக்க நன்றி. என் தன்னம்பிக்கை பல மடங்கு பெருகி விட்டது. மீண்டும் நன்றி!
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=13808&start=315

( My site is www.ppavalamani.blogspot.com)

Shakthiprabha (Prabha Sridhar) said...

கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பது சர்ச்சைக்கு இடமின்றி பலராலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. இதை எடுத்து சொல்லும் பொழுதும் விவாதிக்கும் பொழுதும் சில நேரம், ஏனோ கலாச்சாரம் கடைபிடிக்கப் படுவதே இல்லை. அதிக பட்ச வார்த்தைப் ப்ரயோகங்களும், விவாதங்களும் மேலும் இச்சீரழிவை கிண்டி விடும் என்பதே என் அபிப்ராயம்.

Unknown said...

hi sp, this is rangan.

Suresh Ram said...

Proponents of the women’s cause routinely attribute traits of low esteem, self pity, vagrancy, vulnerability and helplessness to women and girls.

Champions of the women’s cause have pushed, arm-twisted and bullied the Government into passing many anti-male, anti-family provisions and policies in the name of women’s rights and empowerment.

Women’s rights activists have convinced the society that in order to compensate for all the real or perceived disadvantages and sufferings endured by women in the past, present day women should be accorded special treatment in all areas of life, even if it is at the expense of the human rights and welfare of their male counterparts.

http://www.merinews.com/article/true-equity-network-ten---india/15795973.shtml

hayyram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவளமணி ப்ரகாசம் & சக்தி ப்ரியா.

hayyram said...

(பரிதி நிலவன்)said...

டேய் வால் பைய்யா
ஏண்டா பொருக்கி ********,
பாப்பான் என்ன உன் சோத்துல வெஷம் வச்சானா,இல்ல ***** ****** ******?
**** **** **** ****,
******** ****** ***** ****** ***, பாப்பான பத்தி திட்டும் முன்னாடி உன் ஜாதிய ,(இருந்தா )சொல்லுடா திருப்பி திட்ட வசதியா இருக்கும்,டுபுக்கு,வந்தமா டீசெண்டா கமெண்ட் போட்டொம்மோன்னு போய்கிட்டே இரு, ****** *****.
Publish Reject
(பரிதி நிலவன்) 4/11/10

--------------------

திரு பரிதி நிலவன்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கொஞ்சம் கோபப்படாமல் எழுதினால் இன்னும் நல்ல வார்தைகளாலேயே கூட தெளிவாக நீங்கள் சொல்லவருவதை விளக்கலாமே!

cool my friend.

hayyram said...

(தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி) said...


பண்பாடு என்பதே போலித்தனமானது ................
தெரு சண்டை ,பாத்ரும் கிறுக்கல் இதில் பார்த்தாலே தெரியும்.................
பண்பாடு என்ற ஒன்றே கிடையாது ........................
திருமணம் செய்யும் எல்லோரும் (99%) ஒருவனுக்கு ஒருத்தி யாக இல்லை ....மேல் தட்டு ,அடித்தட்டு மற்றும் சில்வர் தட்டு எல்லோரும் உடம்புக்கு ஒருத்தி யாக தான் இருக்கிறார்கள்...............
திருமணம் என்பது அனுமதிக்கப்பட்ட ******................
எல்லா விசயத்திலும் மனது புதிது புதிதாக தான் நாடும் ............
New friends,new relatives என்று நாடுவது கூட அப்படினா தப்புதான் .............

மனது அளவில் பண்பாடு என்பதே கிடையாது ............15 to 30 வது வயது வரை எவன் ஒருவன் or ஒருவள் ஒருவனை(ளை) மட்டுமே நினைத்து வாழ முடிந்தால் அதுதான் அவனுடைய பண்பாடு.........இது சாத்தியம் என்று தோன்ற வில்லை ............
எந்த ஒரு ஆணும் சரி பெண்ணும் சரி வெளிபடையாக சுயமைதுனம் செய்வதை ஒத்து கொள்வதே கிடையாது ........

18 வயதுக்கு மேல் சொந்த புத்திய use பண்ண parents சொல்லி தந்துட்டு gentle யா விலகிகணும்.................
ஊக்குவிக்கலாமா என்பதை விட parents தெளிவா புரிய வைக்கணும் .............பாலியல் வறட்சி கொண்ட போலி பண்பாடு கொண்ட இந்த சமுதாய மக்கள் முன் வர மாட்டார்கள் ....................
குஷ்பு சொன்னது 100% சரிதான் ...........
முகமூடிய கலுட்டுகப்பா........பண்பாட்டு நாத்தம் தங்க முடியல ................


4/16/10
Publish Reject

(மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டன)

hayyram said...

(தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி) அவர்களே! ஒழுங்கும் கட்டுப்பாடும் கொண்டு வாழ உங்களுக்கு விருப்பம் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதற்காக திருமணம் என்ற உறவை தவறான வார்த்தையால் குறிப்பிடுவதும், பன்பாட்டை சாடுவதும் தவறு. உணர்வுகள் கட்டுக்குள் இல்லாததால் தானே கள்ளத்தொடர்பு கொலைகள் நாளுக்கு நாள் நாளிதழ்களை திறக்க முடியாமல் செய்கிறது. அமைதியான சமூகம் தனிமனித ஒழுக்கத்தாலேயே உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பாரம்பரியத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

shaan said...

இந்து மதம் திருமணத்துக்கு முன் உடலுறவை அனுமதிக்கிறதா என்றால் அனுமதிக்கிறது என்றே கொள்ள முடியும். வடமொழியில் காந்தர்வம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழில் களவு என்று சொல்வார்கள். சகுந்தலையும் துஷ்யந்தனும் செய்துக் கொண்டது காந்தர்வம். அது முறையான திருமணமல்ல. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உறவு கொண்டாலே அது திருமணத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது. இதையொட்டி சுப்ரீம் கோர்ட், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து கணவன் மனைவி போல வாழ்ந்தால் அது திருமணத்துக்கு இணையாகவே கருதப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது. நம் நாட்டில் கோர்ட் இன்னமும் சிறிது நியாய உணர்வோடு தான் செயல்பட்டு வருகிறது (இது போன்ற விடயங்களிலாவது). கற்பு என்பதை முன்னிலைப்படுத்தினால் பின்னர் விவாகரத்துக்குப் பின் திருமணம், விதவைத் திருமணம் போன்றவற்றையும் தடை செய்ய வேண்டுமே, அதற்கு இந்த தீர்ப்பை எதிர்ப்பவர்கள் தயாராக இருப்பார்களா?

hayyram said...

// தமிழில் களவு என்று சொல்வார்கள். சகுந்தலையும் துஷ்யந்தனும் செய்துக் கொண்டது காந்தர்வம். அது முறையான திருமணமல்ல.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷாம். கந்தர்வத்திருமணம் முறையானதோ இல்லையோ அது திருமணம் தான். அதில் தாங்கள் கணவன் மனைவி என்று சம்பத்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஒரு நாளில் ஊரார் அறிய திருமணத்தை முடித்துக்கொள்வார்கள். அது போக நம் கலாச்சாரத்தில் ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் திருமணத்தில் முடிந்து குடும்பம் என்ற தர்மத்திற்குள் வந்து விடவேண்டும் என்று என்றே கூறுகின்றனர். ஆனால் இன்றைக்கு திருமணத்திற்கு முன் உடலுறவு பற்றி பேசுபவர்கள் திருமணம் என்ற விஷயத்தை வலியுறுத்தவில்லை. யாரும் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளுங்கள் என்பதே இவர்கள் கருத்து. அதை எதிர்க்கிறோம். ஒழுக்கமான குடும்ப கலாச்சாரத்தை விரும்பி வாழும் யாரும் அதை எதிர்க்கவே செய்வார்கள்.

//ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து கணவன் மனைவி போல வாழ்ந்தால் அது திருமணத்துக்கு இணையாகவே கருதப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது.//

இதுவே வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. திருமணம் என்ற உறவை நீர்த்துப் போகச்செய்யும் தீர்ப்பு இது. லிவிங் டுகெதர் கான்செப்டை வலியுறுத்தும் இந்த தீர்ப்பும் இந்திய பாரம்பரியத்திற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது.

shaan said...

ஒரு நாளில் ஊரார் அறிய திருமணம் முடிப்பது என்பது பெயரளவுக்கே. உண்மையில் காந்தர்வ முறையில் இத்தகைய திருமணத்துக்கு அவசியமே இல்லை. ஏனெனில் உறவு கொண்ட உடனேயே திருமணமும் முடிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. ஒழுக்கம் என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது. கள்ளக்காதலனுடன் ஓடும் மணமான பெண்களையும் வைப்பாட்டி வைத்திருக்கும் மணமான ஆண்களையும் சட்டம் போட்டு கட்டுப்படுத்தமுடியாது.

ஆணும் பெண்ணும் கணவன் மனைவி போல் வாழ்ந்தால் அது திருமணத்துக்கு இணையாகவே கருதப்படும் என்பதற்கு காரணம் இருக்கிறது. திருமணம் என்பது சமூகத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்வது. இதில் சமூகம் என்பது சாட்சி தானே தவிர சமூகத்தின் அனுமதி தேவையில்லை. அப்படி இருக்கையில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்ததற்கு சாட்சி இருந்தால் மஞ்சள் கயிறு எதற்கு?

விவாகரத்து, விதவைகளின் நிலை பற்றிய எனது கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே.

hayyram said...

வாங்க ஷான். நீங்க இப்போ எதை ஆதரித்து உரையாட நினைக்கிறீர்கள் அல்லது எதை எதிர்த்து உரையாட விழைகிறீர்கள் என்று முதலில் எமக்குப் புரியவைத்தால் மேற்கொண்டு பேச வசதியாக இருக்கும். குஷ்புவின் கருத்துப்படி யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவுகொள்ளுங்கள் என்பதையும், ஆண்கள் பெண்களிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்ககூடாது, திருமனத்திற்கு முன் அவர்கள் எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்தை ஆமோதிக்கிறீர்களா என்பதையும் தெளிவுபடுத்தினால் நல்லது.

//சமூகத்தின் அனுமதி தேவையில்லை.//

நண்பரே! சமூகம் வேறு நீங்கள் வேறு என்ற புரிதலே தவறானது. நீங்கள் தான் சமூகம். நீங்கள் எதை உங்கள் வீட்டில் நடக்க கூடாது என்று விரும்புகிறீர்களோ அது சமூகத்திலும் நடக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் சமூகம் என்பது மிகப்பெரிய குடும்பம். குடும்பம் என்பது மிகச்சிறிய சமூகம். இதில் எங்கே கேடு விளைந்தாலும் அதன் அதிர்வு இரு இடத்திலும் இருக்கும். உதாரணமாக் உங்கள் வீட்டில் யாரும் கொலையாவதையோ அல்லது உங்கள் வீட்டிலிருப்பவர் யாரையாவது கொல்வதையோ நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறே எல்லோரும் விரும்பினால் அதுவே சமூகத்தின் விருப்பம் எனலாம். அதே போல உங்கள் வீட்டும் பெண்கள் முறையான உறவுகளுடன் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவ்வாறே உங்களைப் பற்றி உங்கள் வீட்டினரும் விரும்பினால் , அவ்வாறே எல்லா மனிதர்களும் அவரவர் வீட்டில் நடக்க வேண்டும் என்று விரும்புவார்களேயானால் உங்கள் விருப்பம் எதுவோ அதுவே சமூகத்தின் விருப்பம் எனக் கொள்ளுங்கள். ஆக நீங்கள் இப்போது எதை விரும்புகிறீர்கள் அல்லது எதை எதிர்த்து உரையாட விழைகிறீர்கள் என்பதை விளக்குங்கள்.

//கற்பு என்பதை முன்னிலைப்படுத்தினால் பின்னர் விவாகரத்துக்குப் பின் திருமணம், விதவைத் திருமணம் போன்றவற்றையும் தடை செய்ய வேண்டுமே, அதற்கு இந்த தீர்ப்பை எதிர்ப்பவர்கள் தயாராக இருப்பார்களா?//

கற்பு என்பது ஒரு பெண் தான் கொண்ட கணவனுக்கு தீங்கிழைக்கும் துரோகங்களைச் செய்யாதிருத்தல் என்பதே பொருள். விவாகரத்தாகி வேறு ஒருவனை மணம் முடித்த பெண் என்றாலும், விதவையானவள் வேறு ஆண்மகனை மணம் புரிந்துகொண்டாலும் சரி திருமணம் என்ற உறவோடும், துரோகம் புரியாத குடும்பவாழ்வை வாழ்பவராகவும் இருந்தால் போற்றுதற்குரிய வாழ்வாகவே அது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆக கற்பு என்பதைப் பற்றி நீங்கள் இன்னும் ஆழ்ந்த தெளிவு கொண்டால் மேலும் புரிய வாய்ப்பிருக்கிறது.

shaan said...

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் என்னுடைய கோட்பாடு. ஆனால் அதற்காக அதை அடுத்தவர் மீது திணிப்பது ஏற்புடையது அன்று. இந்த வழக்கைப் பொறுத்தவரை குஷ்புவோ அல்லது நீதிபதிகளோ செய்தது தவறல்ல. குஷ்பு தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அதைச் சொல்ல அவருக்கு சுதந்திரம் உள்ளது. அதை பின்பற்றுவதும் பின்பற்றாததும் அவரவர் விருப்பம். அதை அவர் சொல்லியதால் அதை பின்பற்றி எத்தனை பெண்கள் ஓடிப்போயினர் என்று கேட்ட நீதிபதியின் கேள்விக்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் எந்த பதிலும் கூறவில்லையே. இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு போய் அவர் கூறியது ஒன்றும் குற்றமல்ல என்ற தீர்ப்பை நீதிமன்றத்தின் வழியாகக் கொண்டு வந்தவர்கள் தான் தவறு செய்தவர்கள். ஏனெனில் இவர்கள் நாட்டின் அடைப்படைச் சட்டங்களைப் பற்றியே தெரியாதவர்களாக இருக்கின்றனர். இந்த வழக்கில் கிருஷ்ணர்-ராதைப் பற்றி நீதிபதிகள் தெரிவித்திருக்க வேண்டாம் தான். அது தேவையற்றது. அப்படிப் பார்த்தால் பல தார திருமணத்தைக் கூட நியாயப்படுத்த முடியும்.

சமூகத்தைப் பற்றி நான் கூறியுள்ள context என்ன என்பதைப் பற்றி சற்றும் சட்டை செய்யாது சும்மா லெக்சர் கொடுத்துள்ளீர்கள்.

கற்புக்கு புது விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நல்லது. சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றில் யாரும் காணாத புதிய விளக்கம் கொடுத்துள்ளீர்கள். இதன்படி தமிழ்நாட்டில் 99% பெண்கள் கற்புக்கரசிகள் தான்.

hayyram said...

//ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் என்னுடைய கோட்பாடு.//
வாழ்க வளமுடன்.

//ஆனால் அதற்காக அதை அடுத்தவர் மீது திணிப்பது ஏற்புடையது அன்று//
திருடுவது தவறு என்பது கூட உங்கள் கோட்பாடாக இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் யாரேனும் திருடினால் அது அவன் இஷ்டம் என்றும் அது தவறு என்ற கோட்பாட்டை அவனிடம் தினிக்க வேண்டாம் என்றும் இருந்து விடுவீர்களா? அல்லது உங்கள் வீட்டில் திருடியது தவறென கருதி காவல்துறையில் புகார் செய்வீர்களா?

//குஷ்பு தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அதைச் சொல்ல அவருக்கு சுதந்திரம் உள்ளது//
தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் வேசிகள் என்று குஷ் கூறினால் அது அவரது கருத்து என்று சும்மா இருப்பீர்களா? அல்லது அவர் குறிப்பிட்ட பெண்களில் நம் வீட்டுப் பெண்களும் தானே அடங்குவார்கள் என்று ரோஷம் கொண்டு நீ எப்படி சொல்லப்போச்சு என்று எதிர்த்துக் கேட்பீர்களா? கருத்துச் சுதந்திரம் பிறர் உணர்வுகளை பாதிக்காத வரை தான் அனுமதிக்கப்பட முடியும்.

//அதை பின்பற்றி எத்தனை பெண்கள் ஓடிப்போயினர் என்று கேட்ட நீதிபதியின் கேள்விக்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் எந்த பதிலும் கூறவில்லையே//

ஆமாம், ஓடிப் போகும் ஆணும் பெண்ணும் இந்த நாள் இத்தனை மனிக்கு ஓடிப்போகிறோம் என்று பேப்பரில் விளமப்ரம் கொடுத்து தான் ஓடிப்போகிறார்கள் பாருங்கள்? நீதிபதிகள் பொறுப்பில்லாமல் அபத்தமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஷான்! இந்து தர்மத்தின் பல்வேறு கோட்பாடுகள் வெறுமனே விவாதிப்பதால் விளங்கிவிடாது. வாழ்ந்துணரும் போதும் ஒவ்வொரு பருவத்தை அனுபவிக்கும் போது தான் புரியவரும். சமூகம் என்ற அலைவடிவான சங்கிலித்தொடரும் அதில் உண்டாகும் மாற்றங்கள் எப்படியெல்லாம் ஒவ்வொரு குடும்பத்தில் தாக்கத்தை உண்டாக்கு கிறது என்று ஆழமாக அவதானித்தால் சமூகம் பற்றிய உங்கள் கண்ணோட்டம் இன்னும் விரிவுபடும். சமூகம் வேறு நீங்கள் வேறு என்ற புரிதல் உங்களுக்கு எப்போது வருகிறதோ அப்போது தான் சமூகத்திற்காக சொல்லப்படும் கருத்துக்கள் என்பது தன் வீட்டுக்கு சொல்லப்பட்டது என்ற புரிதல் உங்களுக்கு உண்டாகும். கேள்வி எழுப்பாமலே பல விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
உங்கள் அன்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி.

narayanan said...

i would be like any videos

premprakash said...

vaal paiyan sariya porikki paiyana irrupan pola irrukku. naan saathane vaal paiyan roobalathil paarkeren. azhivu kaalam avanai nerungi vitadhu.