Friday, May 1, 2009

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - பாகம் 1


தமிழ் சினிமாவில் பிராமணர்கள்:

தமிழ்த் திரைப்படத்தில் பிராமணர்களைப் போல பந்தாடப்படுபவர்கள் , கேவலப்படுத்தப்படுபவர்கள், கேலிசெய்யப்படுபவர்கள் வேறு யாரும் கிடையாது.

கே பாலச்சந்தர். தமிழ் சினிமாவில் பிராமணர்களை மிகவும் கேவலமாக இழிவு படுத்திய முக்கியாமான இயக்குனர். இவருக்குப் பின்னர் படம் எடுக்கும் எல்லா இயக்குனர்களும் பிராமண கதாபாத்திரம் இல்லாமல் அதுவும் அதை ஒரு கேலிக்கதாபாத்திரமாக சித்தரிக்காமல் படம் எடுப்பதே இல்லை என்னும் அளவிற்க்கு சினிமாவில் பிராமண கதாபாத்திரங்கள் ஒரு பொழுது போக்கு அம்சமாகவே மாறிவிட்டது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பாலச்சந்தரும் ஒரு பிராமணரே. இவர் எடுத்த படத்தின் கதை அழுத்தம் அப்படி.

பிராமணப் பெண்ணை விபச்சாரியாக சித்தரித்து மகிழ்ந்த அற்புத இயக்குனர். அந்த கருப்பு வெள்ளை காலத்தில் பிராமண குடும்பத்தை இப்படி காண்பிக்க பிராமணர் அல்லாதவர்களே யோசிக்கும் ஒரு தருணத்தில் இந்த பிராமண சிங்கம் தன் சொந்த குலப் பெண்டிரையே விபச்சாரியாக சித்தரித்து அழகு பார்த்து மகிழ்ந்தது.

பிராமண எதிர்ப்பாளர்களிடம் , தான் ஒரு முற்ப்போக்கு சிந்தனையுடையவன் என்று காண்பித்துக் கொள்ள பிராமணர்கள் தங்களைத் தாங்களே அவமதித்துக் கொள்வது ஒரு பெருமைக்குறிய விஷயமாகவே கூட கருதப்பட்ட காலம் அது. அந்த காலத்தில் இவர் செய்த அரங்கேற்றமே தொடக்கம் என இப்பொழுதும் பெரும்பாலான பிராமண குடும்பங்கள் மத்தியில் பொருமலாக பேசப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் இரண்டு திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. ஒன்று "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஜயகாந்தன் அவர்களின் நாவல் படமாக்கப்பட்டு ஸ்ரீகந்த் , லக்ஷ்மி நடித்து வெளிவந்தது. ஒர் பிராமணப்பெண் நள்ளிரவு, மழை பெய்கிறது. வீட்டுக்கு போக பேருந்து வரவில்லை. நான் கொண்டு விடுகிறேன் என்று காரில் ஏற்றும் ஒருவரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

விருது பெற்ற மற்றொரு படம் சிறை. ராஜேஷ், லக்ஷ்மி நடித்து வெளி வந்த படம். ஒரு ஊரில் கணவனுடன் வசிக்கும் பிராமணப் பெண். ஊர்பெரிய மனிதரின் கண்ணில் இவள் பட்டுவிட ஒரு நாள் வீட்டிற்குள் வஞ்சகமாக புகுந்து....அதேதான்! வஞ்சிக்கப் பட்ட பெண்ணின் கணவர் அவமானத்திலும் விரக்தியிலும் அவளை கைவிட...தன்னை வஞ்சித்தவன் வீட்டிற்க்கே போய் வாழத் துணிவது கதை.

பெண் என்பவள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது எந்த ஜாதியானாலும் பரிதாபத்திற்குரியதே. ஆனால் அந்த பரிதாபத்தையும் பிராமண பெண்ணின் மூலம் தான் உண்டாக்க வேண்டும் என்பது என்ன புரட்சிகரமான சிந்தனை என்பது அதை எழுதியர்களுக்கே தான் வெளிச்சம். இப்படி பிராமணப் பெண்களை சித்தரித்து தேசிய விருதுகளும் பெற்று பெருமை அடைந்து கொண்டார்கள்.



இவருக்குப் பின் தமிழ் சினிமாவில் பிராமண கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பாக்கியராஜ்.

"இது நம்ம ஆளு" என்று இவர் எடுத்த படம். ஒரு பிராமணப் பெண் வேறு ஜாதி ஆணை காதலித்து குடும்பத்தார் எதிர்ப்பிலும் திருமணம் செய்து அவனுடன் படுப்பதற்க்காக படாத பாடுபடுவதாக அற்புதமான கதை. ஒரு பிராமணப் பெண்ணை 'செக்ஸ் சிம்பளாகவே' சித்தரித்திருந்தார். இந்தப் படம் பார்த்துவிட்டு பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டார்கள். "ஏன்டா! ஐயர் பொண்ணுங்கன்னாலே சூடு பார்ட்டிங்களோ! ஐயர் பொண்ணுங்கல்லாமெ இப்படித்தான் இருப்பாங்க போல இருக்கு! ன்று சீரியாஸாக விவாதித்துக் கொண்ட மாணவர்களும் உண்டு.

பிராமணப் பெண்டிரின் மீது சமூகத்தின் பார்வை ஒரு சராசரியான மரியாதைப் பார்வை என்பதும் மாறி காமப் பார்வை உண்டாக வைத்த திரைப்படம். இன்றைக்கும் அது தொடர்கிறது அந்த சமூகத்திற்க்கே வெளியே சொல்ல முடியாத வேதனை! பாலச்சந்தர், பாக்கியராஜ் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் தனுஷ், சிம்பு மற்றும் பேர் கூட தெரியாத புதிய முகங்கள் எல்லாருமே பிராமண கதாபாத்திரத்தில் கதை அமைப்பதும் , பிராமண பாஷையைக் கையாள்வதும் , "ஏய்! மாமிடா!" என்று வசனம் பேசுவதும் தொடர்கிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் பிராமணர்களை ஜாதி வெறியர்களாக காண்பிப்பது முக்கிய நோக்கம். அதாவது ஜாதியில்லை என்று ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்றால் உடனே ஒரு பிராமணப் பெண்ணை வேறு ஜாதி ஆண் காதலிப்பதும் , அதற்கு பிராமண வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதும் உடனே அந்த படத்தின் நாயகன் அல்லது ஒரு ஊரே கூடி அந்த பிராமண குடும்பத் தலைவருக்கு புத்தி சொல்லி அந்த பெண்ணை வேறு ஜாதிக்கார ஆணை மணக்கச் செய்வதுமாக கதை வந்து விடும். இது ஒரு சமூக சேவை அல்லவா. ஏனென்றால் தமிழகத்தில் பிராமணர்கள் தான் ஜாதியுடன் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் ஜாதியே கிடையாது. அவர்கள் எல்லாம் தங்கள் வீட்டுப் பெண்களை யாருடன் வேண்டுமானாலும் அனுப்பி விடுவார்கள் அல்லவா. அதனால் பிராமணனுக்கு புத்தி சொல்வது தான் முக்கியம் என ஒட்டு மொத்த சினிமாக்காரர்களும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி விட்டனர்.

இந்த வகையில் ஜாதிப்படம் எடுத்ததில் கொஞ்சம் நடுநிலைமையில் இருந்தப் படம் அந்த காலத்தில் வெளியான சத்தியராஜ் நடித்து வெளிவந்த‌ வேதம் புதிது. இதில் பாரதிராஜா பிராமணர்களுக்கும் புத்தி சொல்லியிருப்பார். தேவர்களுக்கும் புத்தி சொல்லியிருப்பார். ஆனால் இதுலும் பிராமணப் பெண்ணை வேறு ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து அழகு பார்க்கும் ஃபார்மலாவை மட்டும் பாரதிராஜா விடவில்லை. அதுவும் ஐயர் வீட்டுப்பெண் தான் வேறு ஜாதிக்காரனைக் கல்யாணம் செய்ய வேண்டும். படம் எடுப்பவர்கள் அவர்கள் ஜாதிப் பெண்ணை வேறு ஜாதிக்காரன் கல்யாணம் செய்வது போல படம் எடுக்கலாமே. அப்படி செய்தால் அவர்கள் குலப்பெண்களை அது தவறாக வழி நடத்திவிடும் அல்லவா. ஆனால் பிராமண குடும்பப்பெண்கள் அவ்வாறாக வழிநடத்தப் பட்டால் அது பரவாயில்லை.


தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்.......


தமிழ் சினிமாவில் ப்ராமணர்கள் - 2

32 comments:

Anonymous said...

என்பதுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பிராமணர்களை விட பிள்ளை சமுகதினரி தான் அதிகம் விமர்சிதுள்ளர்கள்.

Unknown said...

Ram anney,

As u know, Idhu namma aalu (direction balakumaran !!!) is not the first or the only film where bhagyaraj basked in brahmin bashing. The legacy dates back to the the good old days of Sigappu Rojakkal itself for which he wrote the story & dialogues.

Remember the flashback where a young girl seduces the adolescent kamal ??? That, again is depicted as a pakka agraharathu brahmin family. And, the girl, MY GOD, will be characterised cheaper than a prostitue !!!

There is a funnier scene where these so called " revolutionists " would be at their creative height. The girl comes back from the school and throws away her books on the table. Mixed along with her school books, you can notice cheap pornograhpic books titled " Paruva Thollai ".

A brahmin school going girl in the 80's, carrying with her cheap pornographic books, to school. What imagination !!!

Next, " Ice Fruit Iyyer " in Pavunu Pavunudhan ". Yappa, enna title !!!

hayyram said...

நன்றி மோகன்.

///Next, " Ice Fruit Iyyer " in Pavunu Pavunudhan ". Yappa, enna title !!!////அவரவர் மனதில் இருக்க்கும் வக்கிரத்தை எல்லாம் சினிமாவில் கொட்டினால் சமூகம் என்ன ஆகும். அந்த வக்கிரத்திற்கும் இவர்கள் உபயோகிப்பது பிராமண அடையாளங்களைத்தான். பிராமணர்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

Anonymous said...

அன்புள்ள திரு .ராம் அவர்களுக்கு ,
இந்த கட்டுரையை படித்தவுடன் மறுமொழி எழுத தோன்றியதின் காரணம்..எந்த சினிமா படங்களை பார்த்து எனக்கு எதனால் கோபம் வந்ததோ அதே மாதிரியான ஒரு எதிர்ப்பை உங்கள் வலையில் பதிவு செய்ததற்கு ...மனமுவந்து நன்றிகள் பல...என்னுடைய எண்ணங்கள் ஒத்துபோனத்தின் மகிழ்ச்சி வெளிபாடு ....வாழ்கவளமுடன்..மற்றவர்களை விடுங்கள் இந்த பிராமணர்கள் தங்களுக்குளே சண்டைபோட்டுகொண்டும் ,மேதாவிதனத்தை காட்டிக்கொண்டும் ,வருங்கால சந்ததியனருக்கு எதுவும் சொல்லிகொடுக்காமல்,அடையாளங்களை இழந்து வருகிறார்கள் ..இந்த முட்டாள்தனமான நவநாகரிக வாழ்கையின் பலனை நான் நேரில் பல இடங்களில் பார்த்தும் ,அனுபவித்தும் உள்ளேன் ..முதல் அழிவு இந்த காதல் தான் ...தங்களை தானே குறைத்துக்கொள்ள.. என் சொந்ததில்லே ஒருத்தி எவனையோ இழுத்துக்கொண்டு ஓடி விட்டாள்...bloody Chennai city brought up and influence....i got so much of anger and helpless ..she is of my age..and i know many other cases of "romancing" in my friends circle..when i raised a such issue of eloping with my friend(brahmin) whom i know from my schooldays..he simply replied,they are doing for their happiness and supported the subjects...he also told me that two girls whom he know eloped to other persons and their parents simply accepted them.....i replied go to hell in anger...i don't know how to make him understand...if at all i tried to explain something about this issue..he is not willing to listen..சும்மா மொக்க போடாதடா...he replies...he is that much influenced to money based modern life....thanks for your concerns and your blog...

hayyram said...

நன்றி திரு ஆர், (பெயராவது போடக்கூடாதா). இன்றைய சினிமாவில் 99% பேர் பிராமணர் அல்லாதவர்களே, அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள், பெரியார் மற்றும் திராவிட மயக்க மூடநம்பிக்கையில் உழல்பவர்கள். அதனால் தன்னை திராவிடர்கள் என்ற அடையாளத்திற்குள் வெளிப்படுத்தைக் கொள்ள வேண்டுமானால் ஒரே வழி பிராமணப் பெண்களை கலப்புத் திருமணத்திற்கு தள்ளுவதாக படம் எடுத்து, பிராமணர்களை ஜாதி வெறியர்களாக காட்டி பிராமணர்களுக்கே புத்தி சொல்ல வேண்டும். இது ஒரு ஃபார்முலா. மற்ற ஜாதிக்காரர்களை விட பிராமண வீட்டுப் பெண்களில் தான் கலப்பு மணம் அதிகம் நடை பெறுகிறது. இதை அறிந்து கொண்ட சினிமாக்காரர்களுக்கு கொண்டாட்டமாக போனது. அதனால் தொடர்ந்து பிராமண ஹீரோயின் கதைகளாக எடுத்து அதை ஊக்குவிக்கிறார்கள். அந்த சினிமாவைப் பார்க்கும் இளம் பெண்கள் தன்னை அந்த ஹீரோயின் போல நினைத்துக் கொண்டு அது போலவே வேறு ஜாதிக்காரனை காதல்க்க தொடங்குகிறார்கள். மேலும் மடிசாரையும் , பிராமண அம்பிகளையும் மிகவும் கேலியாக காட்டுவதால் தற்கால நவயுவதி பிராமணப் பெண்கள் மடிசாரே எனக்குப் பிடிக்காது என்றும், பிராமண அம்பிகள் மீது ஒரு வித ஈர்ப்பு இல்லாமல், கேலியாக நினைத்து வேறு ஜாதி ஆண்மகன் தான் ஆடவன் என்ற நினைவில் சென்று விடுகிறார்கள். இது சினிமாக்காரர்களின் வெற்றி. பிராமணப் பெண்வீட்டாரின் பொறுப்பற்ற தன்மைக்கு அந்த சமூகத்தின் தோல்வி. இன்னும் நிறைய உள்ளது தொடர்ந்து பார்க்கலாம்.

trc sekar said...

Brahmin girls even if belong to poor family are mostly brought up as a cultured girl with certain basic habits of hygiene and also GOD fearing. Right from 50/60 years back Mudaliars were after brahmin girls for their sons. Being successful in seducing a brahmin girl is a VICTORY
No wonder this continues still. However after sometime there wont be any PURE brahmin community and only delusion will prevail.
TRC

Aaqil Muzammil said...

முற்காலத்தில் பிரமணர்கள் தம்மை பெரியவர்களாக நினைத்து மற்றவர்களை (சாதாரண மக்களை) இழிவு படுத்தினர் அதற்கு பழிவாங்கப் படுகிறது அவ்வளவு தான்

hayyram said...

அதே முற்காலத்தில் உயர்ந்த ஜாதிக்காரர்களாக இருந்து தீண்டாமை செய்த மற்றவர்களை மட்டும் விட்டு விட்ட மர்மம் என்ன? பயம் தானே ஹகீல்? அதே முற்காலத்தில் எல்லா ஜாதிக்காரர்களையும் கொன்று குவித்து ராஜியம் செய்த முஸ்லீகளுக்கு இப்போது இட ஒதுக்கீடு மைனாரிட்டி என்று ராஜ உபசாரம் நடக்கிறதே, அதுவும் பயம் தானே?

Aaqil Muzammil said...

மனிதனின் இயலாமை பயம்தான் பம்பை பார்த்தான் பயந்தான் கடவுள் ஆக்கினான்
பயம்தான் கடவுளின் ஆரம்பம் மதத்தின் தொடக்கம்
//முற்காலத்தில் எல்லா ஜாதிக்காரர்களையும் கொன்று குவித்து ராஜியம் செய்த முஸ்லீகளுக்கு இப்போது இட ஒதுக்கீடு மைனாரிட்டி என்று ராஜ உபசாரம் நடக்கிறதே//
அது அரசன் சம்பந்தபட்டது
இப்பொழுது ஈராக் அழிந்தது அதுக்கு காரணம் அமரிக்கர்களா அமெரிக்க அரசாங்கம்
அதற்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லைங்கோ

vamanan said...

Anbulla Ram...Ungal Aathangam Nyaayamaanadhe. Again, many Brahmins have internalised much of the criticism and hatred against their caste. There was so much hatred outside that they decided to give up their own identity and themselves indulge in Brahmin bashing.

There have been two types of Brahmins. Some high souled ones who also had English education proved to be great reformers.

Some others who had no great values, but stuck on only to touch-me-not ism.

Gopalakrishna Bharati (19th century) - despite being a Brahmin created a Brahmin tormentor in his Nandanar Charithram, which is not there in Sekkizhar. He was perhaps treated badly by members of his own caste.

Bharati too wrote 'Paarpaanai Iyer endra kaalamum poache'.

While even Mayavati, who often talks against 'Manuvadi' ideas is willing to take the Brahmins into her fold, because of less numbers Tamil Nadu politics is still using the Brahmins as whipping boys.

Greater awareness has to be created about the good deeds of the community and its great contribution in many fields. I am with you in that work.

Keep well...There are many identities...Caste is also one..we are Tamils by language, Indians by nationality, world citizens being denizens of the earth...and we are the sons of immortality as the Vedas declare...Amritasya putraa...

hayyram said...

//I am with you in that work.// thank u so much mr.vamanan. keep coming and we discuss more.

Unknown said...

// There are many identities...Caste is also one..we are Tamils by language, Indians by nationality, world citizens being denizens of the earth...and we are the sons of immortality as the Vedas declare...Amritasya putraa...//

That's a global perspective, very well said. It should be our ultimate goal.

But as a beginning, we as responsible & civilised grown-ups, create awareness among children and help them live in a world devoid of hatred and a place where only love & peace prevails.

Anonymous said...

Sex is a big weakness with human being.(created by God) Every one is attracted by beautiful girls. Since brahmin girls are cute (when you compare with others) every one likes to pick one from brahmin community. For that they do all nonsense. If I and you don't want to give our sisters and daughters to other caste we SHOULD control our girls. Keep away from cinema. Don't allow our girls to act. Don't allow any one to our Natyasaba.

vignaani said...

பெரும்பாலானவர்களின் எண்ண ஓட்டம்.
பிற சாதிகள் தனிக் குழுக்களாக இயங்கும் போது, "பிராமணர்களும்" உயர்வு- தாழ்வு பேசாமல், தனிக் குழுவாக இருப்பதில் பிரச்னை இருக்கக் கூடாது.
சினிமாவில் மிகவும் இழிவு படுத்துவதை நாம் கண்டிக்கவேண்டும்; குறைந்த பட்சம் அதற்கு scope கொடுக்கக்கூடாது. வீட்டிற்குள் என் வாழ்வு முறை எனக்கு சொந்தம். வீட்டின் வெளியே நான் ஒரு இந்தியன் என்பதில் யாருக்கும் ஒரு ஆட்சேபணை இருக்கக் கூடாது. குழுஊகுறிகள் குழுக்குள் பயன் படுத்துவது தவறில்லை.
நம் குழந்தைகள், நம் வாழ்வு முறையில் உள்ள சிறப்புகளை (குறிப்பாக அசைவம் தவிர்த்தல்) உணர்ந்து, வழி பிறழாமல் இருக்க மனப பயிற்சி தர வேண்டும். இது பெற்றோர்களின் கடமை. காதல் திருமணங்கள் , தம் குழுக்குள்ளே இருந்தால் (உள் பிரிவுகளை பெரிதுபடுத்தாமல்) அதை பெற்றோர்கள் வரவேற்றால், அது வழக்கமாகவும் ஆகக் கூடும்.

விஜிதன் said...

ஒருத்தன் ஜாதி பற்றி பேசுவான், இன்னொறுத்தன் மதம் பற்றி பேசுவான்.
எல்லா ஜாதி பற்றி தானேடா கதைகிரான்கள்.என்ன மனிசரடா நீங்கள் எல்லாம்.

hayyram said...

//என்ன மனிசரடா நீங்கள் எல்லாம்// அது பற்றி தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். முடிந்த உடன் சொல்கிறேன். சரியா. வருகைக்கு நன்றி விஜிதன்.

hayyram said...

நன்றி vignaani

Unknown said...

Nice article! Keep it up. The proble is that we Brahmins are silent spectators and refuse to show our influence (in whatever way we can). has this been done to any other community, they would have announced that they will stop watching the movies of the particular director (remember Kumudam copies were burnt in the 80's when one of their novels had a derogatiry referene to a Nadar girl - it was a story in a pre-independence setting and all that was written was a Britisher asking a lady 'Variya' and she was identified as a Nadar). Unfortunately we are an arm chair expert community who does not want to get our hands dirty - Namkken Vambu' have we at least tried to organise one rally protesting the treatment. Unless we show that we are 'one' as a community, this is what we will get. This is my first post and will come back for more

hayyram said...

//This is my first post and will come back for more// thanks for ur visit and comment sriram. u are always welcome.

Ravi Venkatraman said...

I read a lot of observations on this tead of being blog. Instead of being repetitive, let me illustrate Prahalada's story. Here was a young boy who was firm in his faith to Narayana despite his father tormenting him!. Brahmin baiting has happened in all ages. How do we counter this by going on an offensive? It will be counterproductive and will not help us. Our tormenters are brahmins themselves like Balachander and Anuradha Ramanan and so many to name. They will not see reason and as a community we lack unity and focus. We are more concerned about money and materialistic achievements losing our dharmic duties and anushtanam. At the drop of a hat the first thing to go is Gayathri japam, pithru shraadham and panchaayadhana poojas and veda adyayanam. Very few brahmins know what they are!. The above protected us from attacks by Aasuric forces as not alone we had a moral right to request Bhagavan to protect us God was committed to protect those who protected the protected namely Vedas Gayathri etc. Unfortunately we are the fallen readily give up our not to be given up duties and lament rarely about our lot. Arjuna in the first chapter of Gita says Krishna "Women of our clan lose their moral rectitude and intermarry causing manes (pithrus) fall and kula naasa occurs" How can we instil moral rectitude without atleast avoiding alcohol, meat and following our duties? If atleast 100 or 1000 brahmins follow this strictly change is round the corner.

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு Ravi Venkatraman. பிராமணர்களின் முதல் கெட்ட பழக்கம் உங்களைப் போல நம்மை நாமே குறைகூறிக் கொண்டிருத்தல். பிராமணர்கள் ஆசார அனுஷ்டானங்கள் கடைபிடித்தாலும் அவன் ஏசப்படுவான். அவற்றை கடைபிடிக்காமல் துறந்துவிட்டாலும் ஏசப்படுவான் என்பது தான் இந்த காலம். அனுஷடானங்களை கடைபிடிக்கவில்லை என்கிற காரணங்களுக்காக பிராமணனை யார் வேண்டுமானாலும் அவமதித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட முடியுமா என்ன? குறைந்த பட்சம் எதிர்க்குரலாவது கொடுக்க வேண்டாமா? இல்லையேல் பிராமணர்கள் தாங்கள் அவமதிக்கப்படுவதில் ஞாயம் இருக்கிறது என்று தான் அவர்களே பேசாமல் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்கி பிராமணர்களை அழித்தே விடுவார்கள். அதில் குற்ற உணர்ச்சிகூட அவர்களுக்கு இருக்காது. அதைப்பற்றி பேசுவதை விட்டு விட்டு , நீங்களே பிராமணர்களை குறை கூறி எதிர்மறையாக பேசிவிட்டு பிராமணர்களுக்குள் ஒற்றுமையில்லை என்று அங்கலாய்த்தால் என்ன அர்த்தம்? ஆசார அனுஷ்டானங்கள் படி வாழாவிட்டாலும் ஜாதிப்படி பிராமணர்கள். அந்த ஜாதியை அடையாளப்படுத்தி நடக்கும் அவமதிப்பு செய்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது. அதை முதலில் மனதில் கொள்ளுங்கள்.

Ravi Venkatraman said...

Hayyaram Thanks for your observations I am a brahmin residing abroad, you have misinterpreted my comments!. The first person to leave his traditional anushtanams are brahmins. Have you ever seen a muslim drink alcohol? or eat pork? I have not seen so far.They observe namaz five times a day1. Very few brahmins have had sacred poonool performed and it is usually done before impending wedding as an afterthought. It is soon taken off to be thrown. Among my brahnin friends 90% eat meat and drink alcohol! none of my muslim colleagues eat non halal food or drink.Visiting temple is more a social exercise. Gayathri japam pithru tharpanam are all paying off debts a MUST.How many of us do this? Let us come to your point raise objections of how we are depicted in tamil films, then our tormentors will straightaway cease their activities? when our reverred Acharya was arrested by JJayalalitha what did protests yield to? nothing Sri ChandraMouleeshwara pooja was interrupted in the most hallowed Mutt all of us were watching lke napumsakaas. We do not have the numerical, political or economical strength to lodge any offensive that is the stark reality. We have to adopt a different strategy, I cannot think of any if you or any other readers do please do write it.As I mentioned earlier "Dharmo Rakshathi Rakshithaha"

hayyram said...

வருகைக்கு நன்றி திரு.Ravi Venkatraman உங்கள் விளக்கங்கள் புரியாமல் இல்லை. நான் சொல்ல வருவது இதுதான். அனுஷ்டானங்களை கடைபிடிக்காவிட்டாலும் பிராமணர்கள் என்கிற ஜாதியில் தான் இருக்கிறோம் எனில் அந்த ஜாதிக்காரர்கள் மீது அவமதிப்பு நடத்தும் போது அது எதிர்க்கப் பட வேண்டும் என்பதே. உதாரணமாக எல்லா கிறிஸ்தவனும் ஏசுவை அப்படியே பின்பற்றும் கிறிஸ்தவனாகவா இருக்கிறான்? ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்டுகிறானா. இல்லையே. ஆனாலும் அவன் கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்கிறான். அரசாங்கத்திடம் ஒதுக்கீடும் கேட்கிறான். அது போல தான், அனுஷ்டானங்கள் கடைபிடிக்கப்படா விட்டாலும் ஜாதிரீதியாக உண்டாகும் அவமதிப்புகளை வெளி மனிதர்கள் செய்யும் போது அதை அனுமதிக்காமல் தடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. நீங்கள் தற்கால ஜாதீய சமாச்சாரத்தையும் வர்ண ரீதியான பிராமணத்தன்மையையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். உங்கள் வாதப்படியே வருகிறேன். //It is soon taken off to be thrown.// ஏன் பூனூலை தூக்கி எறிகிறார்கள்? எந்த முஸ்லீமாவது தலையின் தொப்பியை தூக்கி எறிவதை பெருமையாக சொல்வானா? சீ அது எனக்குப் பிடிக்காது , அத வேற போட்டுக்கிட்டு என்று சக நண்பர்களிடம் அலுத்துக் கொள்வானா? ஆனால் பிராமணன் ஏன் செய்கிறான்? எந்த அரசியல் வாதியோ சினிமாகாரனோ முஸ்லீம்களை உங்கள் தொப்பியை எரிந்து விட்டு வந்தால் தான் நீ தமிழன் என்று கூறுவதில்லை. இவ்வளவுக்கும் அவர்கள் அந்நிய பாஷையில் தான் சாமி கும்பிடுகிறார்கள். பர்தா போடுவதை கேலி செய்து சினிமா எடுப்பதில்லை. ஒரு முஸ்லீம் முஸ்லீமாக இருப்பதில் உள்வெட்கம் கொள்ளச் செய்யவில்லை. ஆனால் பிராமணன் நிலை அப்படி இல்லை. ஒரு பிராமணனுக்கே அவன் பிராமணனாக இருப்பதை நினைத்து உள் வெட்கம் கொள்கிறான். காரணம் ஒருவன் பிராமணன் என்று அறியப்பட்ட உடனேயே அவன் மீது துவேஷம் காட்டப்படுகிறது. சக நண்பர்களே நேரம் கிடைக்கும் போது கேலி செய்து விடுவதற்கு தயாராக இருப்பார்கள். மடிசார் கிண்டலடிக்கப்படுகிறது. குடுமி வைத்த பிராமணர்கள் காமெடி காட்சிப்பொருளாக்கப் படுகிறார்கள். பிராமணர்களாக இருப்பதே ஒரு சங்கடமான விஷயமாக ஆகிவிடுகிறது. இந்த நிலை உண்டாகி இருப்பதால் பிராமணர்களுக்கு ஏற்படும் உள்வெட்கம் காரணமாக மற்றவர்களுடன் தானும் புழங்க வேண்டுமெ என்கிற ஸர்வைவல் உணர்வின் காரனமாகவும் தன்னுடைய அனுஷ்டாணங்களை தானே துரத்தி விடுகிறான். சீ எனக்கு மடிசாரே பிடிக்காது என்று கூறும் பிராமண யுவதிகள் பெருகி இருக்கிறார்கள். காரனம் மடிசார் ஒரு கேலிக்குரிய ஆடை என்பது இளம் பிராமணப் பெண்கள் மனதில் விதைக்கப்பட்டு அதனால் பிராமண யுவதிகள் ஒரு வித உள்வெட்கம் கொண்டு அதை தவிர்க்கிறார்கள். இதற்கு மூலக்காரணமாக வெளி சமூகம் இருக்கிறதே ஒழிய நம்முடைய கலாச்சாரத்தில் குறை ஏதும் இல்லை என்பதை முதலில் பிராமணர்களே நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய அனுஷ்டானங்களை கடைபிடிப்பதில் எந்த வெட்கமும் இல்லை என்பதை முதலில் பிராமணர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிய வைத்த பின்னரே , அவர்களது உள்வெட்கத்தை களைந்த பின்னரே அவர்களது கவனம் சுய அனுஷ்டானங்கள் மீது திரும்ப முடியும். எனவே அதை பிராமணர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. சிறிய சாப்பாடு விஷயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பிராமணன் ஆசாரத்துடன் வாழ்ந்தால் "இவன் ரொம்ப ஆசாரம் பார்ப்பான்..நம்மோடு சேர்ந்து சாப்பிட மாட்டாண்டா, ஐயருடா" என்று கிண்டல் செய்வார்கள்.. சரி அவர்களோடு சேர்ந்துவிடுவோம் என்று கூறி ஆசாரங்களை தூரக்கடாசி விட்டால் "ஐயரு என்னவெல்லாம் திங்கிறான் பாத்தியா" என்றும் கிண்டலடிப்பார்கள். ஆக முன்னால் போனால் கடிக்கும் பின்னால் போனால் உதைக்கும் என்கிற அவஸ்தையான போக்கில் பிராமணர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் வெறுமனே அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிரயோஜனம் இல்லை. அதனால் முதலில் பிராமணர்கள் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கமலஹாசனைப் போல தன் குலத்தை தானே கேலி செய்து கொள்ளும் மனப்பான்மையை பிராமணர்கள் விட்டொழிக்க வேண்டும். இல்லையே இக்குலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.

hayyram said...

//Let us come to your point raise objections of how we are depicted in tamil films, then our tormentors will straightaway cease their activities?// இப்படி குதர்க்க கேள்வி கேட்டுக்கொண்டிருக்காமல் ஒற்றுமையாக குரல் கொடுத்தால் கண்டிப்பாக செய்வார்கள். அநேகமாக நீங்கள் இந்த தொடரின் நான்காம் ஐந்தாம் பகுதியைப் படிக்கவில்லை என நினைக்கிறேன். மற்ற ஜாதிக்காரர்கள் அவரவர் சங்கங்களின் வாயிலாக எதிர்ப்பு தெரிவிக்கும் போது காலில் விழும் சினிமாக்காரர்களை அறிந்து கொள்வீர்கள். ஆனால் பிராமணர்கள் தான் ஒரு பிராமணன் சொன்னால் இன்னொரு பிராமணன் எதிர் கேள்வி குதர்க்க கேள்வி எல்லாம் கேட்டுக்கொண்டு தன்னைத் தானே மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கிறான். அதனால் தான் மற்றவர்களுக்கு இது வசதியாக இருக்கிறது.

//We do not have the numerical, political or economical strength to lodge any offensive that is the stark reality// ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் வெளி சமூகத்தின் தாக்கம் பிராமண வீடுகளில் தவிர்க்க முடியாமல் இருக்கும் போது அவற்றால் பிராமண குடும்பங்கள் சிதைவுறும் நிலை வருகிறது எனும் பொழுது அதைப்பற்றி குறைந்த பட்சம் பிராமணர்களாவது குரல் கொடுக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் வீட்டு குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் பிராமணர்கள் மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு சொந்த குலவழக்கங்களை கேலி செய்து கொள்கிறார்கள், சினிமா நகைச்சுவையில் பிராமணர் கேலிசெய்யப்படும் போது தானும் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறார்கள். பிராமணர்கள் தங்களைப் பற்றி தாங்களே கேலி மனப்பான்மை கொண்டிருப்பதை அடிப்படையில் மாற்றாவிட்டால் அவர்களை அனுஷ்டானங்களை கடைபிடிக்கச் செய்வது கஷ்டமான காரியம். பிராமணர்கள் அவரவர் வீட்டில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக விழிப்புணர்வுடன் பேசத்தயாராக இருக்க வேண்டும். அதற்குத்தான் இந்தப் பதிவுகள்.

Ravi Venkatraman said...

Ram fully agree with your reasoning true likes of Anuradha Ramanan and Kamalhasan attack brahminism true I agree. On a personal note I stillwear my poonool wear it to my operating theatre in UK and my white Christian and Jewish colleagues and even muslims have asked about it for which I did briefly explain its sacred significance. On a few occasions during important festivals wear vibhuthi and feel proud about it. Infact in USA I am surprised to note the resurgence of this when I visited my brother in Detroit. Being firm in my adherence though the initial reaction from few brahmin friends have been derisory initially have changed later. (It could be the global 9/11 effect) Any debate in this forum though useful what is the way forward? Can we lodge economical sanctions on Tamil film industry or bring in political upheaval (just joking bitter humour) I can't vote in India sometimes feel so upset and feel helpless

hayyram said...

//I can't vote in India sometimes feel so upset and feel helpless// அப்படி வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இப்போதெல்லாம் நாம் ஓட்டு மட்டும் தான் போடுகிறோம். யார் ஜெயிப்பது என்பதை அரசியல் வாதிகள் அறிவிக்கச் செய்து விடுகிறார்கள். சென்ற (மத்திய அரசிற்கான) தேர்தலின் போது அ தி மு க ஜெயித்தது என்றும் ஆனால் சிதம்பரம் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது என்றும் செய்தி! Enjoy and be happy were U R. thank u

paras raj said...

I have just entered this site while reading dinamani. first of all my greetings & best wishes to all.

I totally agree with mr.ram. it is very saddening . i do not blame others but we are responsible for the same. like women is the enemy for women . ( mother-in-law and daughter-in-law) today's mother in-law once daughter in law.

In the name of sociality, we help our children allowing them complete freedom. their freedom is capitalised by others who were looking for such opportunity. we became gullible to such external forces. Overall, if every brahmin family switch off t.v ( except for devotional discourse/songs/serials),avoid cineme, avoid cine, social magazines, this will help a lot. One should totally boycot cinema/avoid cinema.

To focus only on education, health and any socip-religious activities in order to save their individual family and collectively it will help the community.

May GOD BLESS ALL.

hayyram said...

parasuram has left a new comment on your post

There are Brahmana sangams in major districts of tamil nadu. I could not hear any one protest from these associations. If they need somebody to initiate it, I am willing to do it as I am from pondicherry. There should be a collective forum to protest such atrocities. If there are enough blog members, we can still move ahead and express our displeasure over such bad depiction of brahmins in cinema and represent our case /protest to respective to cine producers sangam or cine director's sangam or nadigar sangam. Let us start doing it and we are sure to get positive response or atleast we can minimise the events.
------------

திரு.பரசுராம், முதன் முறையாக ஒரு பிராமணர் முன்வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது குறித்து உங்களுக்கு மின்னஞ்சல் இடுகிறேன். மிக்க நன்றி!

paras raj said...

dear ram,

I am not saying for the sake of saying. i mean it.
looking forward to receive your email.

regards,

Murugan said...

hi friend...

these issues are the results of our modern way of life... these happen everywhere... whichever caste/community.. these issues create deep wounds. just think the case of their parents... the main aspect is we tend to forget importance of life. i had some discussion with an advocate in this regard.. many of these issues tend to end in divorce..with majority in IT sector...
But many of the poor people are still unable to marry of their daughters... even well earning people tend to look for highly salaried/rich alliance... we have to clear up things first...

Thanks for your nice blog/info....

gujjan said...

one such article which makes me to think !!!!

Anonymous said...

உண்மையை சொன்னால் கசக்குதோ...